புதிய பிரிவில் களமிறங்கிய Realme: எது எப்படியோ நமக்கு லாபம் தான்!

|

Realme நிறுவனம் இந்திய சந்தையில் முதல் மானிட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் ரியல்மி ஃப்ளாட் மானிட்டர் ஆகும். இந்த மானிட்டரின் பெயர் குறிப்பிடுவது போன்று பிளாட் ஸ்க்ரீன் மானிட்டர் அம்சத்தைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இது முழு எச்டி தெளிவுத்திறன் மற்றும் உயர் புதுப்பிப்பு வீத ஆதரவைக் கொண்டுள்ளது.

வெளியான Realme Flat Monitor

வெளியான Realme Flat Monitor

ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் என பல கேட்ஜெட்களை அறிமுகம் செய்த ரியல்மி நிறுவனம் தற்போது மானிட்டர் பிரிவில் களமிறங்கி இருக்கிறது. ரியல்மி நிறுவன் தனது முதல் மானிட்டரை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

முழு HD ஆதரவோடு இந்த Realme Flat Monitor வெளியாகி இருக்கிறது. அதேபோல் இதன் பெசல்கள் மிகவும் மெலிதாக இருக்கிறது. இதன் புதுப்பிப்பு வீத ஆதரவும் மிக அதிகமாக இருக்கிறது.

Realme Flat Monitor இந்திய விலை

Realme Flat Monitor இந்திய விலை

Realme Flat Monitor இந்திய விலை குறித்து பார்க்கையில், இதன் விலை ரூ.18,999 ஆக இருக்கிறது. இந்த மானிட்டர் ஆனது ஒற்றை பிளாக் வண்ண விருப்பத்தில் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மானிட்டர் விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Realme Flat Monitor சிறப்பம்சங்கள்

Realme Flat Monitor சிறப்பம்சங்கள்

Realme Flat Monitor சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த டிஸ்ப்ளே 23.8 இன்ச் LED அளவுடன் இருக்கிறது. இதன் மேற்புற மூன்று பக்கங்களிலும் மெல்லிய பெசல்கள் இருக்கிறது. மேம்பட்ட அம்சங்களை ஃப்ளாட் மானிட்டர் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த மானிட்டர் முழு எச்டி (1920 x 1080 பிக்சல்கள்) தீர்மானத்துடன், 75 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. இது அதிவேகத்தில் பின்னடைவு அற்ற செயல்திறனை வழங்குகிறது.

சௌகரியமான பார்வை அனுபவம்

சௌகரியமான பார்வை அனுபவம்

இந்த டிஸ்ப்ளேவின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த திரையில் எந்த பிரதிபலிப்புகளும் இருக்காது. அதாவது கிளார் அடிக்காது. எனவே தடையின்றி சௌகரியமான பார்வை அனுபவத்தை இதில் பெறலாம். 250 நிட்ஸ் பிரகாசத்துடன் 16.7 மில்லியன் வண்ண ஆதரவைக் கொண்டிருக்கிறது.

மேம்பட்ட இணைப்பு ஆதரவு மற்றும் பிரத்யேக வசதிகள்

மேம்பட்ட இணைப்பு ஆதரவு மற்றும் பிரத்யேக வசதிகள்

Realme Flat Monitor இல் பல போர்ட் விருப்பங்களைக் கொண்டிருக்கிறது. எச்டிஎம்ஐ 1.4 போர்ட், யூஎஸ்பி டைப்-சி போர்ட், டிசி போர்ட் மற்றும் VGA போர்ட் ஆகிய ஆதரவுகளைக் கொண்டுள்ளது. இந்த VGA போர்ட் மூலம் பழைய PC-களுடன் தொடர்புடைய சாதனத்தையும் இந்த மானிட்டரில் இணைக்கலாம். அதேபோல் ஆடியோ ஆதரவுக்காக 3.5mm ஹெட்போன் ஜாக் இருக்கிறது.

பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்த ரியல்மி

பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்த ரியல்மி

ரியல்மி நிறுவனம் இந்த மானிட்டர் உடன் ரியல்மி பேட் எக்ஸ் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி பேட், ரியல்மி மானிட்டர் மட்டும் இல்லை, ரியல்மி வாட்ச் 3, ரியல்மி பட்ஸ் ஏர் 3 நியோ மற்றும் ரியல்மி வயர்லெஸ் 2எஸ் ஆகியவற்றை அறிமுகம் செய்திருக்கிறது. இதில் அறிமுகமான ரியல்மி பேட் எக்ஸ் சாதனமும் குறிப்பிடத்தக்க ஒன்று.

ரியல்மி பேட் எக்ஸ் விலை விவரங்கள்

ரியல்மி பேட் எக்ஸ் விலை விவரங்கள்

ரியல்மி பேட் எக்ஸ் ஆனது ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்திய பார்வையாளர்களுக்கான மலிவு விலை டேப்டெல் ஆக இது இருக்கிறது.

இந்த டேப்லெட் ஆனது 10.95 இன்ச் 2K LCD டிஸ்ப்ளே மற்றும் பின்புறத்தில் 13MP கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு கூடிய அடிப்படை மாறுபாட்டின் விலை ரூ.19,999 எனவும் ஹை எண்ட் வேரியண்ட் விலை ரூ.27,999 ஆகவும் இருக்கிறது.

சமீபத்தில் அறிமுகமான ரியல்மி புக் ஏர் லேப்டாப்

சமீபத்தில் அறிமுகமான ரியல்மி புக் ஏர் லேப்டாப்

ரியல்மி நிறுவனம் சமீபத்தில் ரியல்மி புக் ஏர் லேப்டாப்பை அறிமுகம் செய்தது. இந்த ரியல்மி புக் ஏர் லேப்டாப் ஆனது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது.

விரைவில் இந்த லேப்டாப் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி புக் ஏர் லேப்டாப் ஆனது 14-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வெளிவந்தது.

இதில் பொருத்தப்பட்டுள்ள பெரிடி டிஸ்ப்ளே ஆனது கேமிங் வீடியோ போன்றவைகளுக்கு மிக அருமையாக இருக்கும். குறிப்பாக தினசரி லேப்டாப்பில் வேலை பார்க்கும் நபர்களுக்கும் இது ஒரு சிறந்ததிரை அனுபவத்தை கொடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு வேரியண்ட்களில் வெளியான லேப்டாப்

இரண்டு வேரியண்ட்களில் வெளியான லேப்டாப்

ரியல்மி புக் ஏர் லேப்டாப் ஆனது 1920 × 1200 பிக்சல்ஸ், 16:10 ரேஷியோ போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. இதன் சிப்செட் வசதியும் மேம்பட்ட வகையில் இருக்கிறது.

இந்த லேப்டாப் சூடாவதை தடுக்க vapour cooling (VC) chamber ஆதரவும் உள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி/512 ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி புக் ஏர் லேப்டாப். மேலும் ஐஸ் ப்ளூ மற்றும் ஸ்கை கிரே வண்ணங்களில் வெளியானது.

ரியல்மி புக் ஏர் மாடலின் விலை விவரங்கள்

ரியல்மி புக் ஏர் மாடலின் விலை விவரங்கள்

ரியல்மி புக் ஏர் மாடலானது 54 வாட்ஸ் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் 13.5 மணிநேரம் பேட்டரி பேக்அப் கிடைக்கும்.

அதேபோல் இதில் 65 வாட்ஸ் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. இதன் மூலம் லேப்டாப்பை 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.

இதன் விலை குறித்து பார்க்கையில் ரியல்மி புக் ஏர் மாடலின் விலை Yuan 2,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.35,400 ஆகும்.

Best Mobiles in India

English summary
Realme Launched First Monitor in India, Flat Monitor Specs, Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X