Home
Gadgets

அட இது நல்லா இருக்கே.. Realme-யின் புதிய இயர்பட்ஸ.. கிளிப் டிசைன், 36 மணிநேர பேட்டரி, AI அம்சங்கள்!

ரியல்மி (Realme) நிறுவனம் வருகிற ஜனவரி 29, 2026 அன்று இந்தியாவில் ஒரு முரட்டு பேட்டரி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதை நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டு இருக்கலாம். அது 10,001mAH பேட்டரி கொண்ட ரியல்மி பி4 பவர் 5ஜி (Realme P4 Power 5G) ஸ்மார்ட்போன் ஆகும்.

இந்திய சந்தையில் இவ்வளவு பெரிய பேட்டரி கெப்பாசிட்டி உடன் அறிமுகம் செய்யப்படும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். தற்போது இந்த ஸ்மார்ட்போனுடன் சேர்த்து ரியல்மி பட்ஸ் கிளிப் (Realme Buds Clip) என்கிற புதிய இயர்பட்ஸ் மாடலையும் அறிமுகப்படுத்துவதாக ரியல்மி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Realme-யின் புதிய இயர்பட்ஸ.. கிளிப் டிசைன், 36 மணிநேர பேட்டரி!

ரியல்மி பட்ஸ் கிளிப் என்பது இந்நிறுவனத்தின் முதல் கிளிப்-ஸ்டைல் ​​ட்ரூ வயர்லெஸ் இயர்போன் ஆகும். நினைவூட்டும் வண்ணம் இது கடந்த 2025 நவம்பரில் உலக சந்தைகளில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்தியாவில் ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போன் உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ரியல்மி பட்ஸ் கிளிப்பின் முக்கிய அம்சங்கள்: இது ஓப்பன் இயர் கிளிப் வடிவமைப்பை பெற்றுள்ளது. இது காது கால்வாயின் உள்ளே அமர்ந்திருக்கும் வழக்கமான இயர்பட்களை போலல்லாமல், பட்ஸ் கிளிப் வெளிப்புற காதை சுற்றி இணைகிறது. இந்த வடிவமைப்பு அதிகஅழுத்தம் இல்லாத பொருத்தத்தை வழங்குகிறது என்று ரியல்மி கூறுகிறது.

மேலும் இது நீண்ட நேர பயன்பாட்டின் பொது ஏற்படும் காதுகளுக்கான சோர்வையும் குறைக்க உதவுகிறது. காது கால்வாய் திறந்திருப்பதால், சுற்றுப்புற ஒலி இயற்கையாகவே கடந்து செல்ல முடியும், இதனால் பயனர்கள் தங்கள் சுற்றுப்புறங்களை பற்றி நன்கு அறிந்திருக்க முடியும். இது அலுவலக பயன்பாடு, பயணம், உடற்பயிற்சி மற்றும் பிற அன்றாட நடவடிக்கைகளுக்கு ஏற்றதாக இருக்கும.

மேலும் இந்த இயர்பட்ஸ்கள் டைட்டானியம் பொருத்தப்பட்ட கம்பியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன, இது நெகிழ்வுத்தன்மை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை இரண்டையும் வழங்குகிறது. ஒவ்வொரு இயர்பட்டும் 5.3 கிராம் எடையுள்ளதாக இருப்பதால், ஒட்டுமொத்த வடிவமைப்பு இலகுவாகவும் நீண்ட நேரம் பயன்படுத்த வசதியாகவும் உள்ளது. ரியல்மி நிறுவனம் அதன் பட்ஸ் கிளிப்பை நாள் முழுவதும் அசௌகரியத்தை ஏற்படுத்தாமல் அணியக்கூடிய ஒரு தயாரிப்பாக சந்தைப்படுத்துகிறது.

ஆடியோவைப் பொறுத்தவரை, ரியல்மி பட்ஸ் கிளிப் ஆனது ரியல்மியின் நெக்ஸ்ட்பாஸ் அல்காரிதம் (NextBass Algorithm) ஆல் இயக்கப்படும் புத்திசாலித்தனமான பாஸ் டியூனிங்கை கொண்டுள்ளது. ஓப்பன்-இயர்வடிவமைப்பு இருந்தபோதிலும், பாஸ் டெப்த்-ஐ பராமரிக்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கால்களுக்கு, வெவ்வேறு சூழல்களில் குரல் தெளிவை மேம்படுத்த இயர்பட்ஸ் என்விராய்ன்மென்டல் நாய்ஸ் ரிடெக்ஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

மியூசிக் பேக்கிரவுண்ட் மற்றும் கால்களை நிர்வகிப்பதற்கான டேப் கட்டுப்பாடுகளையும் இது ஆதரிக்கிறது. மேலும் இதில் நிகழ்நேர உதவி மற்றும் மொழிபெயர்ப்பு போன்ற ஏஐ ஆல் இயக்கப்படும் அம்சங்களும் உள்ளன. இது அன்றாட பயன்பாட்டிற்கு ஸ்மார்ட் செயல்பாட்டை சேர்க்கிறது. இதன் பேட்டரி செயல்திறன் மற்றொரு முக்கிய அம்சமாகும். இந்த இயர்பட்ஸ், சார்ஜிங் கேஸுடன் சேர்ந்து, மொத்த பிளேபேக் நேரத்தை 36 மணிநேரம் வரை வழங்குகிறது.

ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த ஸ்மார்ட்போன் டிமன்சிட்டி 7400 (Dimensity 7400) சிப்செட் உடன் வரலாம். கிராபிக்ஸ்காக இது மாலி-G615 MC2 ஜிபியு உடன் இணைக்கப்படலாம். 12ஜிபி ரேம் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படும் ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 7 (Realme UI 7) உடன் வெளியாகலாம்.

ரியல்மி நிறுவனத்தின் இந்த 10001mAh பேட்டரி ஸ்மார்ட்போன் ஆனது 3 வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களையும், 4 வருட செக்யூரிட்டி பேட்ச்களையும் பெறலாம். மற்ற அம்சங்களை பொறுத்தவரை ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போனானது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5கே ரெசல்யூஷன் உடனான குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

இது 80W வயர்டு சார்ஜிங், 27W ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் என்றும், இது ஆரஞ்சு, சில்வர் மற்றும் ப்ளூ ஆகிய கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய பேட்டரியை வைத்திருந்தாலும், இது சுமார் 218 கிராம் எடையுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme First Clip-style True Wireless Earbuds Realme Buds Clip to Launch in India on Jan 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X