Home
Gadgets

வெளுத்து கட்டும் சவுண்ட்.. 360 டிகிரி ஆடியோ.. நாய்ஸ் கேன்சலேஷன்.. IP55 ரெசிஸ்டன்ட்.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. மாடல்?

இந்தியாவில் ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 14 ப்ரோ சீரிஸ் (Realme 14 Pro Series) மற்றும் ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 (Realme Buds Wireless 5) களமிறங்கி இருக்கிறது. இதில் ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 நெக்பேண்ட் டிசைனில் பட்டையை கிளப்பும் பீச்சர்களை பேக் செய்துள்ளது. ஹைபிரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்ஷலேஷன், 360 டிகிரி ஸ்பாஷியல் ஆடியோ, 38 மணி நேர பேக்கப் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ரியல்மி பட்ஸ் மாடலின் விவரம் இதோ.

நெக்பேண்ட் டிசைன் மாடல்களுக்கு இந்தியாவில் தனி வரவேற்பு இருக்கிறது. இருப்பினும், அதில் பீச்சர்கள் குறைவாக பேக் செய்யப்பட்டு வந்தது. ஆனால், ரியல்மி நிறுவனம் பெரும்பாலான பீச்சர்களுடன் இந்த ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 மாடலை களமிறக்கி இருக்கிறது. ஜனவரி 23ஆம் தேதி விற்பனை தொடங்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் காத்திருப்பை எகிற செய்துள்ளது.

வெளுத்து கட்டும் சவுண்ட்.. 360 டிகிரி ஆடியோ.. நாய்ஸ் கேன்சலேஷன்!

ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 அம்சங்கள் (Realme Buds Wireless 5 Specifications): இந்த மாடலில் 13.6 எம்எம் டிரைவர்கள் கிடைக்கின்றன. இந்த டிரைவர்களில் டைனாமிக் பேஸ் (Dynamic Bass) சப்போர்ட் கிடைக்கிறது. ஏஏசி கோடெக் (AAC Codec) சப்போர்ட் கொண்ட ப்ளூடூத் வி5.4 (Bluetooth v5.4) கனெக்டிவிட்டி இருக்கிறது. 360 டிகிரியில் ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) சப்போர்ட் உள்ளது.

என்விரான்மென்ட் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) மற்றும் ஹைபிரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Hybrid Active Noise Cancellation) சப்போர்ட் உள்ளது. 50dB கேன்சலேஷன் கிடைக்கும். ஆகவே, ஆடியோ மற்றும் வாய்ஸ் கால்கள் கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் கொடுக்கும். இதுபோக 3 லெவல் ஏஎன்சி (ANC) அடாப்டிவ் சப்போர்ட் பெற்று கொள்ளலாம்.

வெளுத்து கட்டும் சவுண்ட்.. 360 டிகிரி ஆடியோ.. நாய்ஸ் கேன்சலேஷன்!

டூயல்-டிவைஸ் கனெக்டிவிட்டி (Dual Device Connectivity) கிடைக்கிறது. ஆகவே, மொபைல் மற்றும் டேப்லெட் அல்லது லேப்டாப் போன்ற 2 டிவைஸ்களில் ஒரே நேரத்தில் கனெக்ட் செய்து பயன்படுத்த முடியும். இந்த ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பேட்டரி கிடைக்கிறது. 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 20 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும்.

ஃபுல் சார்ஜ் செய்தால், 38 மணி நேரங்களுக்கு பேக்கப் பெறலாம். ஆகவே, நார்மல் மோடில் 38 மணி நேரமும் டிரான்பரன்ஸி மோடில் 20 மணி நேரமும் பேக்கப் கொடுக்கப்படுகிறது. கேமிங் பிரியர்களுக்கான பீச்சர்களையும் கொடுக்கிறது. ஆகவே, ஆடியோ மற்றும் வீடியோ சின்க் கொடுக்க 45ms அல்ட்ரா லோவ்-லேட்டன்சி மோட் (Ultra-low Latency Mode) இருக்கிறது.

5 மைக் சிஸ்டம் கிடைக்கிறது. பட்டையை கிளப்பும் பீச்சராக ஆப் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, ரியல்மி லிங்க் ஆப் (Realme Link App) பயன்படுத்தலாம். இதில் ஈகியூ கன்ட்ரோல்கள், மியூசிக் மோட்கள் கிடைக்கும். இந்த விலையிலும் IP55 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. 30 எடையில் பிரீமியம் டிசைனில் மூன்று கலர்களில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது.

ஆகவே, இந்த ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 மாடலை மிட்நைட் பிளாக் (Midnight Black), டிவைலைட் பர்ப்பிள் (Twilight Purple) கலர்களிலும் டவுன் சில்வர் (Dawn Silver) கலரிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம். வரும் ஜனவரி 13ஆம் தேதியில் விற்பனைக்கு வர இருக்கிறது. ரூ.1599 விலைக்கு கிடைக்க இருக்கிறது. ஒரிஜினல் விலை ரூ.1799ஆக இருக்கிறது. அமேசான், பிளிப்கார்ட்டில் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Buds Wireless 5 With Hybrid ANC Launched Sale From January 23 in Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X