பின்றானே இவன்.. 35 மணி நேர பேக்கப்.. IP55 ரேட்டிங்.. 600 சைக்கிள்-பேட்டரி.. மேக்னடிக் பட்ஸ்.. எந்த மாடல்?
வயர்லெஸ் இயர்பட்ஸ் வாங்குனா, அதுல பேட்டரி பேக்கப் பாத்து வாங்கனும். இல்லையென்றால், அடிக்கடி சார்ஜ் போட்டு வைக்க வேண்டி இருக்கும். ஆனால், ரியல்மி நிறுவனமானது, ஒரே சிங்கிள் சார்ஜில் 35 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 லைட் (Realme Buds Wireless 5 Lite) மாடலை களமிறக்க இருக்கிறது. இந்த பேட்டரி பேக்கப் மட்டுமல்லாமல், IP55 ரேட்டிங் ரெசிஸ்டன்ட், மேக்னடிக் பட்ஸ், ஃபாஸ்ட் சார்ஜிங், டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி பீச்சர்களிலும் மிரளவிடுகிறது.
இந்திய மார்கெட்டில் வரும் ஜூன் 23ஆம் தேதி இந்த ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 லைட் மாடல் வெளியாக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. கூடவே, ஒட்டுமொத்த பீச்சர்களும் வெளியாகி இருக்கின்றன. விலை மட்டும் உறுதியாகவில்லை. பாக்கெட்-பிரண்ட்லி டிசைன் கொண்ட இந்த வயர்லெஸ் மாடலின் பீச்சர்கள் எப்படி?

ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 லைட் (Realme Buds Wireless 5 Lite Specifications): இந்த வயர்லெஸ் மாடலானது, நெக்பேண்ட் டிசைனில் காம்பாக்ட் பாடி கொடுக்கிறது. 12.4 எம்எம் டைனாமிக் பேஸ் டிரைவர் (Dynamic Bass Driver) கிடைக்கிறது. ஆகவே, பேஸ் அவுட்புட் விரும்பிகளுக்கு இந்த மாடல் பக்காவாக இருக்கும். இதுபோக ஈஎன்சி (ENC) நாய்ஸ் கேன்சலேஷன் சப்போர்ட் கிடைக்கிறது.
வாய்ஸ் கால்களும் அல்ட்ரா கிளியர் அவுட்புட் கொடுக்கும். IP55 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் பாடி கொடுக்கிறது. இந்த பாடியில் சைபர் ஆரஞ்ச் (Cyber Orange), ஹேஸ் ப்ளூ (Haze Blue) மற்றும் வாய்டு பிளாக் (Void Black) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 லைட் மாடலில் பேட்டரி பேக்கப் மிரளவிடும்படி இருக்கிறது.
ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் போதும், 35 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கிறது. அதேபோல 19 மணி நேரங்களுக்கு டாக்-டைம் கொடுக்கிறது. ஃபுல் சார்ஜ் செய்ய 2 மணி நேரங்கள் மற்றும் 30 நிமிடங்கள் தேவைப்படும். ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைப்பதால், வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே போதும் 4 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம்.

இந்த ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 லைட் மாடலில் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கிடைக்கிறது. இந்த கனெக்விட்டி மூலம் 10 மீட்டர்கள் ரேஞ்ச் கிடைக்கும். அதேபோல டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி (Dual Device Connectivity) கொடுக்கிறது. எஸ்பிசி (SBC) மற்றும் ஏஏசி (AAC) ஆடியோ கோடெக்ஸ் சப்போர்ட் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்காக 45எம்எஸ் லோவ் லேட்டன்சி மோட் வருகிறது.
இதுவொரு மேக்னடிக் இயர்பட்ஸ் மாடலாகும். ஆகவே, இயர்பட்களை பிரித்தாலே உங்களது ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்புடன் கனெக்ட்டாகிவிடும். அதேபோல லாக் செய்தால், டிஸ்-கனெக்ட் செய்து கொள்ளலாம். கால், மியூசிக் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் கன்ட்ரோல்களுக்கு பட்டன்கள் கிடைக்கின்றன. அதேபோல கேம் மோட் கன்ட்ரோலும் கிடைக்கிறது.
ஆகவே, வழக்கமான வால்யூம் பட்டன்கள் வருகிறது. மல்டிஃபங்ஷன் பட்டன் மூலம் பல்வேறு கன்ட்ரோல்கள் வருகிறது. ஒரு முறை கிளிக் செய்தால், பிளே/பாஸ் செய்யலாம். டபுள் கிளிக் செய்தால், கேம் மோட் ஆன் செய்யலாம். டிரிபிள் கிளிக் செய்தால், வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆக்டிவேட் செய்யப்படும். இப்படி ஏகப்பட்ட பீச்சர்கள் இருக்கின்றன. ரூ.2,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications