Home
Gadgets

Realme சம்பவம்.. சிங்கிள் சார்ஜில் 38 மணிநேர பேட்டரி.. ஒரே நெக்பேண்ட்டில் ANC, ENC ஆதரவு.. ஜன.16 அறிமுகம்!

ரியல்மி (Realme) நிறுவனம், 2025 ஆம் ஆண்டில், இந்தியாவில் அதன் முதல் வெளியீட்டு நிகழ்விற்கு தயாராக உள்ளது. இது வருகிற ஜனவரி 16 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வின் முக்கிய அறிமுகமாக ரியல்மி 14 ப்ரோ சீரிஸ் (Realme 14 Pro Series) ஸ்மார்ட்போன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலுமொரு புதிய தயாரிப்பும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.

அது ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 ஏஎன்சி (Realme Buds Wireless 5 ANC) நெக்பேண்ட் ஆகும். ரியல்மி நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் நெக்பேண்ட் ஆனது ரியல்மி 14 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சேர்ந்து இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மியின் கூற்றுப்படி, இது ஜனவரி 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும்.

Realme சம்பவம்.. சிங்கிள் சார்ஜில் 38 மணிநேர பேட்டரி!

இந்த நெக்பேண்ட் ஸ்டைல் ப்ளூடூத் இயர்போன்ஸ் ஆனது கடந்த 2023 இல் அறிமுகமான அது ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 3 (Realme Buds Wireless 3) மாடலுக்கு பிறகு வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 ஏஎன்சி-யின் சில முக்கிய அம்சங்களை ரியல்மி பிராண்ட் உறுதிபடுத்தியுள்ளது

ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 ஏஎன்சி என்கிற மாடல் பெயர் குறிப்பிடுவது போல, இந்த நெக்பேண்ட் இயர்போன்ஸில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active noise cancellation) அம்சம் உள்ளது. இது பயனர்களை சுற்றியுள்ள எந்த சத்தத்தையும் நீக்குவதற்கு 50dB ANC வரையிலான ஆதரவை கொண்டிருப்பதை ரியல்மி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 3 மாடலில் 30dB ANC இருந்தது.

மேலும் இந்த நெக்பேண்ட் ஆனது தேவைக்கேற்ப அடாப்டிவ் 3-லெவல் நாய்ஸ் ரிடெக்ஷன் மற்றும் 400 ஹெர்ட்ஸ் அல்ட்ரா-வைட் பேண்ட் நாய்ஸ் கேன்சலேஷன் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. கூடவே இது வாய்ஸ் கால்களில் க்ளியர் ஆன குவாலிட்டியை வழங்கும் இஎன்சி (ENC) ஆதரவையும் கொண்டுள்ளது.

ரியல்மி பிராண்டால் பகிரப்பட்ட அதிகாரப்பூர்வ போட்டோவின்படி, இந்த நெக்பேண்ட் ஆனது டூயல் டோன் டிசைன் உடன் வரும். அதாவது இயர்பட்ஸ் சில்வர் நிறத்திலும் அதனுடன் கனெக்ட் ஆகும் வயர்டு பகுதிகள் ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும். இது தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு திறனுக்கான ஐபி55 ரேட்டிங் (IP55 Rating) உடன் வருகிறது.

ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி, இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 38 மணிநேர பேட்டரி லைஃப்பை (38 Hours Battery Life) வழங்கும். அறிமுகமான பின்னர் ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 ஏஎன்சி ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) ஆகியவற்றிலிருந்து வாங்க கிடைக்கும்.

ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 ஏஎன்சி ஆனது ட்விலைட் பர்பிள், டான் சில்வர் மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று 91மொபைல்ஸ்-ன் அறிக்கை தெரிவிக்கிறது. இதுகுறித்த சரியான விவரங்கள் மற்றும் விலை நிர்ணயம் ஜனவரி 16 நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்படும்.

இதற்கு முன்பாக அறிமுகமான ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 3 மாடல் ஆனது ஸ்பேஷியல் ஆடியோ (Spatial Audio), 40 மணிநேர பேட்டரி லைஃப், 13.6 மிமீ டிரைவர் (13.6mm driver), டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி (Dual-device connectivity) மற்றும் பல முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இது ரூ.2,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக இதற்கு அருகாமையிலான அல்லது இதை விட அதிகமான விலையை தான் ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 ஏஎன்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Buds Wireless 5 ANC with 38 hours battery life India Launch on January 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X