சிங்கிள் சார்ஜில் 56 மணி நேர பேக்கப்.. 50dB நாய்ஸ் கேன்சலேஷன்.. 12.5எம்எம் ஹை-ரெஸ் ஆடியோ.. எந்த மாடல்?
ரியல்மி பட்ஸ் டி500 ப்ரோ (Realme Buds T500 Pro) மாடலின் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது. பேட்டரி, நாய்ஸ் கேன்லேஷன், டிரைவர்கள், கலர் மற்றும் டிசைன் உள்ளிட்ட ஒட்டுமொத்த பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்த ரியல்மி பட்ஸ் டி500 ப்ரோ மாடலின் பீச்சர்கள், விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வருகிற ஏப்ரல் 16ஆம் தேதி இந்த ரியல்மி பட்ஸ் டி500 ப்ரோ மாடல் வெளியாக இருக்கிறது. பிரீமியம் பீச்சர்களுடன் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆடியே மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்களிலும் அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் கொடுக்க 6 மைக்குகள் உள்ளிட்ட ஹார்ட்வேர் லெவல் பீச்சர்களையும் பார்க்க முடிகிறது.

கேண்டி பாக்ஸ் டிசைனில் பாக்ஸி லுக் கொடுக்கிறது. வீகன் லெதர் கோடெட் பாடி கொண்ட மாடலாகவும் இந்த ரியல்மி பட்ஸ் டி500 ப்ரோ இருக்கிறது. எல்இடி இன்டிகேட்டர் இருக்கிறது. இந்த டிசைனில் லெமன் கோலா (Lemon Cola), ஆரஞ்ச் மின்ட் (Orange Mint) மற்றும் சாக்கலேட் (Chocolate) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது.
இதில் லெமன், பிளாக் மாடல்களின் சார்ஜிங் கேஸில் மட்டும் வீகன் லெதர் கிடைக்கும். இயர்பட்கள் 4.5 கிராம் எடை மட்டுமே வருவதால், லைட் வெயிட் இயர்பட்டை விரும்பும் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இந்த ரியல்மி பட்ஸ் டி500 ப்ரோ இருக்கும். லேன்யார்டு (Lanyard) கிடைப்பதால், எளிதாக டேக் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும்.
ரியல்மி பட்ஸ் டி500 ப்ரோ அம்சங்கள் (Realme Buds T500 Pro Specifications): 12.4 எம்எம் ஹை-ரெஸ் ஆடியோ டிரைவர்களை (Hi-Res Audio Drivers) இந்த ரியல்மி பட்ஸ் டி500 ப்ரோ மாடல் கொண்டுள்ளது. எல்எச்டிசி 5.0 (LHDC 5.0) ஆடியோ கோடெக் கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் ஆடியோ அனுபவம் கிடைக்கும். மல்டிபிள் ஈகியூ மோட்கள் கிடைக்கின்றன.
இதில் பாப் (Pop), ராக் (Rock), கேமிங் (Gaming) உள்ளிட்ட மோட்களும் இருக்கின்றன. ஆடியோ மட்டுமல்லாமல், கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களை கொடுக்க 50dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) கிடைக்கிறது. 6 மைக்குகளை கொண்டு உள்ளது. ஒரு பட்டில் தலா 3 மைக்குகளை கொண்டுள்ளது. மைண்ட்ப்ளோவ் மோட் (MindFlow Mode) கிடைக்கிறது.
இதில் 10 ஹை-பைடெலிட்டி ஆம்பியன்ட் சவுண்ட்ஸ்கேப்கள் கிடைக்கின்றன. மேலும், ரியல் டைமில் நாய்ஸ் கான்ட்ரோல் கொடுக்க ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் (AI Noise Cancellation) கிடைக்கிறது. 56 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். கேமிங் பிரியர்களுக்காக 45ms அல்ட்ரா-லோவ் லேட்டன்சி மோட் (Ultra-low Latency Mode) கிடைக்கிறது.
லோவ் பவர் கன்செம்சன் மற்றும் பக்கா கனெக்டிவிட்டி கொடுக்க ப்ளூடூத் 6.1 (Bluetooth 6.1) கொடுக்கப்பட்டு உள்ளது. லேட்டஸ்ட் மாடல்களில் கிடைப்பதை போல ரியல் டைம் டிரான்ஸ்லேஷன் (Real-Time Translation) சப்போர்ட் கிடைக்கிறது. இதில் டூயல் வே லைவ் டிரான்ஸ்லேஷன் கிடைக்கிறது. ரியல்மி லிங்க் ஆப் (Realme Link App) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
மல்டிபிள் டிவைஸ் கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஒரே நேரத்தில் மூன்று டிவைஸ்களில் கனெக்ட் செய்து கொள்ள முடியும். ஐபி55 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. எஸ்பிசி, ஏஏசி போன்ற ஆடியோ கோடெக் சப்போர்ட் கிடைக்கிறது. விலை விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








