ஆளுக்கு 2 வாங்கும் ஆபர் விலையில் புது Realme பட்ஸ்.. 56 மணி நேர பேட்டரி, IP55 ரேட்டிங்.. எந்த மாடல்?
கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி அன்று ரியல்மி (Realme) நிறுவனத்தின் லேட்டஸ்ட் இயர்பட்ஸ் ஆக ரியல்மி பட்ஸ் டி500 ப்ரோ டிடபுள்யூஎஸ் இயர்போன்ஸ் (Realme Buds T500 Pro TWS earphones) மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. இது, இன்று முதல் ஆபர் விலையில் விற்பனையை தொடங்கியது.
ரியல்மி பட்ஸ் டி500 ப்ரோ விலை, விற்பனை, ஆபர் விவரங்கள்: இந்தியாவில் ரியல்மி பட்ஸ் டி500 ப்ரோவின் விலை ரூ.2,799 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வருகிற ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை நடைபெறும் முதல் விற்பனை சலுகையின் ஒரு பகுதியாக, இது ரூ.200 தள்ளுபடியை பெற்று ரூ.2599 க்கு வாங்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த இயர்போன்களை ஏப்ரல் 23 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் அமேசான் இந்தியா, பிளிப்கார்ட், மிந்த்ரா மற்றும் ரியல்மி இந்தியா இணையதளம் வழியாக வாங்கலாம். இது சாக்லேட், லெமன் கோலா மற்றும் ஆரஞ்சு மின்ட் ஆகிய கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.
ரியல்மி பட்ஸ் டி500 ப்ரோ இயர்பட்ஸ் முக்கிய அம்சங்கள்: இது 12.4மிமீ டிரைவர்கள், LHDC 5.0 கோடெக் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ வயர்லெஸ் ஆகியவற்றுக்கான ஆதரவுடன் வருகிறது. இந்த இயர்போன்கள் - ஏஐ (AI) அடிப்படையிலான அடாப்டிவ் ட்யூனிங்குடன் 50dB வரை ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனையும் வழங்குகின்றன.
கூடவே மல்டிபிள் டிவைஸ் கனெக்டிவிட்டி, லோ லேடன்சி உடன் கூடிய கேமிங் செயல்திறன் மற்றும் 56 மணிநேரம் வரையிலான மொத்த பேட்டரி லைஃப் ஆகியவைகளையும் வழங்குகிறது. மேலும் தற்போதுள்ள ரியல்மி பட்ஸ் மாடல்களை விட இந்த இயர்போன்ஸ் - சற்றே எடை குறைவாகவும், அவற்றின் கேஸ் மிகவும் கச்சிதமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரியல்மி பட்ஸ் T500 ப்ரோ விரிவான அம்சங்கள்:
- 12.4மிமீ டிரைவர்ஸ்
- ஹை-ரெஸ் ஆடியோ வயர்லெஸ்ஸை ஆதரவு
- 24-பிட் மற்றும் 96kHz வரை உயர்தர ஆடியோ பரிமாற்றத்திற்காக LHDC 5.0 கோடெக் ஆதரவு
- ஆழமான பேஸ் மற்றும் விரிவான சவுண்ட்ஸ்டேஜை வழங்குவதற்கான டைட்டானியம் பூசப்பட்ட டயாஃப்ரம்
- பல EQ மோட்களுக்கான ஆதரவு
- ரியல்மி லிங்க் ஆப் மூலம் கஸ்டமைஸ் செய்யும் விருப்பங்கள்
- மைண்ட்ஃப்ளோ மோட் ( இது மிகவும் நிதானமான கேட்கும் அனுபவத்திற்காக சுற்றுப்புற ஒலிகளை பிளே செய்யும்)
- காதின் பொருத்தம் மற்றும் சுற்றுப்புறங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரு ரியல்டைம் ஏஐ அமைப்பை பயன்படுத்தி, பரந்த 5,000Hz வரம்புடன் 50dB வரையிலான ANC ஐயும் வழங்கும்
- தெளிவான அழைப்புகளுக்காக ஆறு மைக்ரோஃபோன் அமைப்பை கொண்டுள்ளன
- இருவழி மற்றும் நேருக்கு நேர் ஆகிய இரண்டு மோட்களையும் உள்ளடக்கிய நேரடி மொழிபெயர்ப்பை ஆதரிக்கின்றன
- ப்ளூடூத் 6.1 ஆதரவு (ஒரே நேரத்தில் மூன்று டிவைஸ்கள் வரை இணைப்பில் வைத்து இருக்க முடியும்)
- கேமிங் அல்லது வீடியோக்களை பார்க்கும்போது மென்மையான அனுபவத்திற்காக, இவை 45ms என்ற மிக குறைந்த லேடன்சியையும் வழங்குகின்றன
- தொலைந்து போனால் அவற்றை எளிதாகக் கண்டுபிடிக்க உதவும் 'ஃபைண்ட் மை இயர்பட்ஸ்' (Find My Earbuds) வசதியையும் கொண்டுள்ளன.
- சார்ஜிங் கேஸுடன் சேர்த்து மொத்தம் 56 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- ANC இல்லாமல் 13.5 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- ANC இயக்கப்பட்டிருந்தால் 8 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- LHDC-ஐ பயன்படுத்தும்போது, ANC இல்லாமல் 9 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- அதுவே ANC உடன் 5.5 மணிநேரம் வரை பிளேபேக் கிடைக்கும்
- 62mAh பேட்டரிகளும், கேஸில் 530mAh பேட்டரியும் உள்ளது
- யுஎஸ்பி டைப்-சி வழியாக இயர்பட்ஸ்களை சார்ஜ் செய்ய சுமார் 1 மணிநேரமும், கேஸை சார்ஜ் செய்ய 2 மணிநேரமும் ஆகும்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP55 ரேட்டிங்
- ஒவ்வொரு இயர்பட்டும் சுமார் 4.5 கிராம் எடையை கொண்டுள்ளது
- வசதியாக எடுத்துச் செல்வதற்காக, கேஸுடன் ஒரு லேன்யார்டும் (Lanyard) உள்ளது.


Click it and Unblock the Notifications








