360 டிகிரியும் தெறிக்கும் சவுண்ட்.. உங்க காதுக்கு பெஸ்ட் இயர்பட்ஸ் இதான்.. Realme-ன் புது பட்ஜெட் இயர்பட்ஸ்..
ரியல்மி (Realme) நிறுவனம் இன்று அதன் புதிய TWS இயர்பட்ஸ் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ள புதிய இயர்பட்ஸ் சாதனம் ரியல்மி பட்ஸ் T310 (realme Buds T310) என்ற பெயருடன் வெளிவந்துள்ளது. இது சுழன்று-சுழன்று 360 டிகிரி கவர் செய்யும் ஸ்பேஷியல் ஆடியோ அம்சத்துடன் வருகிறது. இதில் ரியல்மி நிறுவனம் டைனமிக் சவுண்ட் எஃபக்ட் மற்றும் என்ஹான்ஸ்ட் ஆடியோ அனுபவத்தை வழங்கும் பல அம்சங்களை சேர்த்துள்ளது. இதன் விலை, விற்பனை மற்றும் முழு விபரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த புதிய ரியல்மி பட்ஸ் T310 இயர்பட்ஸ் (realme Buds T310 Earbuds) சாதனம் 12.4mm டைனமிக் பாஸ் டிரைவர்ஸ் (12.4mm Dynamic bass drivers) அம்சத்துடன் 360° ஸ்பேஷியல் ஆடியோ எஃபக்ட் (Spatial audio effect) அம்சத்தை கொண்ட லைட் வெயிட் இன்-இயர் டிசைன் கொண்ட சாதனமாக வெளிவந்துள்ளது. இது 46dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் ஆதரவுடன் 6 மைக் உடன் ENC ஆதரவையும் கொண்டுள்ளது.

ரியல்மி பட்ஸ் T310 இயர்பட்ஸ் (realme Buds T310 Earbuds):
இது மூன்று லெவலில் நாய்ஸ் அளவை குறைக்கும் அம்சத்துடனும் (three-level noise reduction), ஏஐ டீப் கால் நாய்ஸ் ரிடக்ஷன் (AI Deep call noise reduction) அச்சத்தையும் கொண்டுள்ளது. இது டச் கண்ட்ரோல் (touch controls) உடன் டூயல் டிவைஸ் கனெக்ஷன் ஆதரவையும் (dual device connection) வழங்குகிறது. இது ப்ளூடூத் v5.4 (Bluetooth v5.4), AAC மற்றும் SBC ஆதரவை கொண்டுள்ளது.
கேம் மோட் இல் இந்த இயர்பட்ஸ் 45ms அல்ட்ரா லோ-லேடன்சி உடன் வருகிறது. இதன் பேட்டரி பற்றி பேசுகையில், இதன் இயற்பட்ஸ் + கேஸ் உடன் இந்த சாதனம் 40 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இது IP55 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் ஆதரவை கொண்டுள்ளது. இது 10 நிமிடத்தில் 5 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது.
இது மோனெட் பர்பிள் (Monet Purple), வைப்ரன்ட் பிளாக் (Vibrant Black), ஏஜைல் வைட் (Agile White) நிறங்களில் வருகிறது. ரியல்மி நிறுவனத்தின், ரியல்மி லிங்க் ஆப்ஸ் உடன் இதன் ஆடியோ தரத்தை நீங்கள் கஸ்டமைஸ் செய்துகொள்ள அனுமதிக்கும் சேவையையும் ரியல்மி நிறுவனம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி பட்ஸ் T310 இயர்பட்ஸ் விலை (realme Buds T310 Earbuds Price):
இந்த புதிய ரியல்மி பட்ஸ் T310 இயர்பட்ஸ் (realme Buds T310 Earbuds) சாதனத்தை நிறுவனம் ரூ. 2,499 விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ரியல்மி பட்ஸ் T310 இயர்பட்ஸ் (realme Buds T310 Earbuds) சாதனம் ஒரு புதிய லேட்டஸ்ட் சாதனம் என்பதனால், இதன் மேல் நிறுவனம் புதிதாக அறிமுக சலுகையை அறிவித்துள்ளது. இதன் படி, இந்த இயர்பட்ஸ் மீது ரூ.300 கேஷ் பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரியல்மி பட்ஸ் T310 இயர்பட்ஸ் விலை ரூ. 2,199 ஆக குறைந்துள்ளது. இந்த ரியல்மி பட்ஸ் T310 இயர்பட்ஸ் (realme Buds T310 Earbuds) சாதனம் வரும் ஆகஸ்ட் 5, 2024 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும். இது பிளிப்கார்ட், ரியல்மி அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம் மற்றும் ரீடைல் கடைகள் வழியாக வாங்க கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








