ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.1,699 போதும்.. 50 மணி நேர பேட்டரி.. 360 டிகிரி ஆடியோ.. IP55 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஆளுக்கொரு ஆர்டர் போடும்படியான பட்ஜெட்டில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 360 டிகிரி ஸ்பாஷியல் ஆடியோ, 50 மணி நேரங்களுக்கு பேக்கப், ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் போன்ற பீச்சர்களுடன் ரியல்மி பட்ஸ் டி200 (realme Buds T200) ஆர்டருக்கு கிடைக்கிறது. ரூ.300 டிஸ்கவுண்ட் போக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைப்பதால், ஆடியோ பிரியர்கள் அடித்து பிடித்து ஆர்டர் செய்து வருகின்றனர். இந்த ரியல்மி பட்ஸ் டி200 மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஆடியோ பிரியர்கள், கேமிங் பிரியர்கள், பிரீமியம் டிசைனை விரும்பும் பிரியர்கள், ஏஎன்சி மோடை விரும்பும் பிரியர்கள் என்று ஒட்டுமொத்த பேரையும் தட்டித்தூக்கும்படி இந்த ரியல்மி பட்ஸ் டி200 களமிறங்கி இருக்கிறது. கிரிஸ்டல் அலாய் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. டைனாமிக் பேஸ் டிரைவர்கள் மற்றும் எல்டிஏசி கொடுக்கிறது.

இதுபோக ஹை-ரெஸ் ஆடியோ, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் கேமிங் பிரியர்களுக்கான லோவ் லேட்டன்சி மோட் என்று மற்ற பீச்சர்களிலும் மிரளவிட்டிருக்கிறது. அதே நேரத்தில் 4 மைக்குகள், 3டி ஸ்பாஷியல் ஆடியோவையும் கொடுத்து பட்ஜெட் விலையில் கிட்டத்தட்ட பெரும்பாலான பிரீமியம் பீச்சர்களை பேக் செய்ய பார்த்திருக்கிறது.
இவ்வளவு பீச்சர்களுடன் ரூ.1,999 விலையில் இந்திய மார்கெட்டில் வெளியாகி இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் அறிமுக சலுகை போக விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த விற்பனை விவரங்களுக்கு முன்பு, இந்த ரியல்மி பட்ஸ் டி200 மாடலின் முழு பீச்சர்களை தெரிந்து கொள்வோம். நான்கு பிரீமியம் கலர்களில் இது கிடைக்கிறது.
ரியல்மி பட்ஸ் டி200 அம்சங்கள் (Realme Buds T200 Specifications): ஆடியோவை பார்க்கையில், 12.4 எம்எம் டைனாமிக் பேஸ் டிரைவர் (Dynamic Bass Driver) கிடைக்கிறது. ஆகவே, பேஸ் பிரியர்கள் விரும்பும்படி அவுட்புட் கிடைக்கும். இதில் எல்டிஏசி (LDAC) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக ஹை-ரெஸ் ஆடியோ (Hi-res Audio) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேல் ஸ்டீரியோ அவுட்புட் எதிர்பார்க்கும் மியூசிக் பிரியர்களுக்கான 360 டிகிரி ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) சப்போர்ட் கிடைக்கிறது. வாய்ஸ் கால்களுக்காக 32dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) கிடைக்கிறது. ஒவ்வொரு பட்களிலும் 2 மைக்குகள் என்று மொத்தமாக 4 மைக்குகளை பேக் செய்துள்ளது. கேமிங் பீச்சரும் உள்ளது.
அதாவது, இந்த ரியல்மி பட்ஸ் டி200 மாடலில் 45ms அல்ட்ரா லோவ் லேட்டன்சி (Ultra Low Latency) கொடுக்கும் கேமிங் மோட் (Gaming Mode) கிடைக்கிறது. ஆகவே, இதில் ஆடியோ மற்றும் வீடியோ சின்க் லேட்டன்சி இல்லாமல் இருக்கும். லோவ் பவர் கன்சம்ஷன் கொண்ட ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. எஸ்பிசி (SBC) மற்றும் ஏஏசி (AAC) கோடக் சப்போர்ட் உள்ளது.
ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 50 மணி நேரங்களுக்கு பிளேபேக் கொடுக்கிறது. அதுவே ஏஏசி மற்றும் ஏஎன்சி மோடில் பயன்படுத்தினால், 35 மணி நேரங்களுக்கு மட்டுமே பிளேபேக் கிடைக்கும். எல்டிஏசி மற்றும் ஏஎன்சி மோடில் பயன்படுத்தினால் 20 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 5 மணி நேரங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம்.
பட்களில் ஏஎன்சி இல்லாமல் அதிகபட்சம் 10 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். IP55 ரேட்டிங் கிடைக்கிறது. டச் கன்ட்ரோல் மற்றும் ரியல்மி லிங்க் ஆப் சப்போர்ட் உள்ளது. ரூ.300 டிஸ்கவுண்ட் போக ரூ.1,699 விலைக்கு கிடைக்கிறது. மிஸ்டிக் கிரே (Mystic Grey), ஸ்னோவ் ஒயிட் (Snowy White), ட்ரீமி பர்பிள் (Dreamy Purple) மற்றும் நியான் கிரீன் (Neon Green) கலர்களில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








