Home
Gadgets

சும்மா வாங்கி போடுவாங்களே.. ரூ.1699 க்கு 55 மணிநேர பேட்டரி, ANC, IP55-னு இப்படி ஒரு TWS Earbuds-ஆ!

ரியல்மி (Realme) நிறுவனம் அதன் 2 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து ஒரு புதிய பட்ஜெட் விலை இயர்பட்ஸ் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அது ரியல்மி பட்ஸ் டி200 ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் (Realme Buds T200 TWS Earbuds) ஆகும்.

ரூ.25,999 முதல் தொடங்கும் ரியல்மி 15 5ஜி (Realme 15 5G) மற்றும் ரூ.31,999 முதல் தொடங்கும் ரியல்மி 15 ப்ரோ 5ஜி (Realme 15 Pro 5G) ஆகிய 2 புதிய ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரியல்மி பட்ஸ் டி200 இயர்பட்ஸ் மாடலின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? எப்போது முதல் விற்பனை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

ரூ.1699 க்கு 55 மணிநேர பேட்டரி, ANC, IP55-னு இப்படி ஒரு TWS Earbuds-ஆ!

ரியல்மி பட்ஸ் டி200 அசல் விலை Vs ஆபர் விலை (Realme Buds T200 Price in India): இந்தியாவில் இது ரூ.1,999 க்கு அறிமுகம். செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அறிமுக சலுகையின் ஒருபகுதியாக வாடிக்கையாளர்கள் ரூ.300 வங்கி அடிப்படையிலான தள்ளுபடியை (Bank Discount) பெற்று ரியல்மி பட்ஸ் டி200 மாடலை ரூ.1,699 க்கு வாங்க முடியும்

ரியல்மி பட்ஸ் டி200 விற்பனை (Realme Buds T200 Sale Date in India): ரியல்மி பட்ஸ் டி200 ஆனது ட்ரீமி பர்பிள் (Dreamy Purple), மிஸ்டிக் கிரே (Mystic Grey), ஸ்னோவி ஒயிட் (Snowy White) மற்றும் நியான் கிரீன் (Neon Green) ஆகிய 4 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் இயர்பட்ஸ் ஆனது ரியல்மி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் பிற ஆஃப்லைன் கடைகள் வழியாக வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.

ரியல்மி பட்ஸ் டி200 அம்சங்கள் (Realme Buds T200 TWS Earbuds Specifications Features):
- இன் இயர் டிசைனை (In-Ear Design) பெற்றுள்ளது
- 20ஹெர்ட்ஸ் - 40,000ஹெர்ட்ஸ் ப்ரெக்வன்சி ரெஸ்பான்ஸ் ரேன்ஜ் (Frequency response range) உடனான 12.4மிமீ டைனமிக் ட்ரைவர்களுடன் (12.4mm Dynamic Drivers) வருகிறது
- ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழை (Hi-Res Audio certification) கொண்டுள்ளன
- எல்டிஏசி கோடெக்கை (LDAC Codec) ஆதரிக்கின்றன.

- நாய்ஸ் கண்ட்ரோலுக்காக 32dB வரையிலான ஏஎன்சியை (ANC - Active Noise Cancellation) வழங்குகிறது
- குவாட்-மைக்ரோஃபோன் அமைப்பை (Quad-microphone setup) கொண்டுள்ளது
- கேமர்களுக்கான 45ms லோ லேடன்சி கேம் மோட் (Low Latency Game Mode) உள்ளது
- ப்ளூடூத் 5.4 ஆதரவை வழங்குகின்றன
- டிவைஸ்களுக்கு இடையில் எளிதாக மாற அனுமதிக்கும் டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டியை (Dual Device Connectivity) கொண்டுள்ளன.

- ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) டிவைஸ்களுடன் இணைக்கமான ரியல்மி லிங்க் (Realme Link) ஆப்பிற்கான ஆதரவு
- ரியல்மி லிங்க் ஆப் வழியாக இயர்பட்ஸ் சவுண்ட் ப்ரொபைல் மற்றும் கண்ட்ரோல்களின் பயன்பாடு ஆகியவைகளை கஸ்டமைஸ் செய்யலாம்

- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி55 ரேட்டிங்கை (IP55 Rating) கொண்டுள்ளது
- 3டி ஸ்பேஷியல் ஆடியோவை (3D Spacial Audio) ஆதரிக்கின்றன
- கால்களுக்கு பதிலளிக்க அல்லது நிராகரிக்க மற்றும் பிளேபேக்கை கட்டுப்படுத்த டச் கண்ட்ரோல்களை கொண்டுள்ளன
- ஏஎன்சி ஆப் (ANC Off) செய்யப்பட்ட நிலையில் கேஸுடன் சேர்த்து, ஒரே சார்ஜில் 50 மணிநேரம் வரை கேமிங் டைமை வழங்கும்
- ஏஎன்சி ஆன் (ANC On) செய்யப்பட்டு இருந்தால் 35 மணிநேரம் வரை நீடிக்கும் (கேஸுடன்)
- பத்து நிமிட சார்ஜில் 5 மணிநேரம் வரை பிளேபேக் டைமை வழங்கும்

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Buds T200 TWS Earbuds Under Rs 2000 55 Hours Battery ANC IP55 Launched in India Sale From Aug 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X