ஆர்டர் பொளக்கும்.. ரூ.1,199-க்கு DUAL மைக்.. NOISE கேன்சலேஷன்.. IPX4 ரெசிஸ்டன்ட்.. BASS டிரைவர்.. எந்த மாடல்?
ரியல்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற பிராண்ட் ஆடியோ பிரியர்களும் எதிர்பார்க்கும்படியான பட்ஜெட்டில் டூயல் மைக், நாய்ஸ் கேன்சலேஷன், IPX4 ரெசிஸ்டன்ட், டைனாமிக் பேஸ் டிரைவர்கள் பீச்சர்களுடன் ரியல்மி பட்ஸ் டி200 லைட் (Realme Buds T200 Lite) அறிமுகமாகி இருக்கிறது. மார்ச் 20ஆம் தேதிக்குள் ஆர்டர் செய்தால் அறிமுக சலுகையில் மேலும் அடிமட்ட விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த விலை விவரங்களை பார்ப்பதற்கு முன்பாக பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி பட்ஸ் டி200 லைட் அம்சங்கள் (Realme Buds T200 Lite Specifications): இந்த ரியல்மி மாடலில் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. இந்த கனெக்டிவிட்டி மூலம் ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களை கனெக்ட் செய்து கொள்ளலாம். சார்ஜிங் கேஸில் இருந்து அதிகபட்சமாக 10 மீட்டர்கள் வரையில் ரேஞ்ச் கிடைக்கும். IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Water Resistance) உள்ளது.

ஆகவே, சைக்கிளிங், ஜாக்கிங் போன்ற ஆக்டிவிட்டிகளின் போது ஸ்வெட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. வாய்ஸ் கால்களுக்காக டூயல் மைக் (Dual Mic) கிடைக்கிறது. இந்த மைக்குகளில் ஏஐ டீப் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Deep Call Noise Cancellation) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, இன்டோர் மட்டுமல்லாமல், அவுட்டோரிலும் வாய்ஸ் கால்கள் அவுட்புட் கிரிஸ்டல் கிளியாராக இருக்கும்.
இந்த ரியல்மி பட்ஸ் டி200 லைட் மாடலில் பேஸ் ஆடியோ பிரியர்களை விரும்பும்படி 12.4மிமீ டைனாமிக் பேஸ் டிரைவர் (Dynamic Bass Driver) கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் கொண்ட பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், பட்களில் 7 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். அதேபோல சார்ஜிங் கேஸில் 48 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும்.
ஏஏசி மோடில் பயன்படுத்தினாலும் இந்த பிளேபேக் கிடைக்கும். அதேபோல ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கிடைப்பதால், வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 5 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். ஃபுல் சார்ஜ் செய்வதற்கு 120 நிமிடங்கள் தேவைப்படுகிறது. 500 முறை சார்ஜிங் சைக்கிள் கிடைக்கிறது. ஆகவே, 5 ஆண்டுகளுக்கு பேட்டரி டியூரபிலிட்டி கிடைக்கும்.
சார்ஜிங் கேஸில் ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்துவிட்டால், பட்களில் 6 முறை ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளாம். இதன் மூலம் ஒவ்வொரு முறையும் 7 மணி நேரங்களுக்கு மேல் பேக்கப் கிடைக்கிறது. இந்த ரியல்மி பட்ஸ் டி200 லைட் மாடலில் அல்ட்ரா லோவ் லேட்டன்சி (Ultra Low Latency) கிடைக்கிறது. ஆனால், கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற அவுட்புட் கொடுக்காது.
இந்த ரியல்மி பட்ஸ் டி200 லைட் மாடலின் விலை ரூ.1,399ஆக இருக்கிறது. அறிமுக சலுகையில் ரூ.200 டிஸ்கவுண்ட் போக ரூ.1,199 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த அறிமுக சலுகையானது மார்ச் 20ஆம் தேதி மதியம் 11.59 மணி வரையில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளாம்.
இதுபோக ரியல்மி மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளங்களிலும் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த ரியல்மி பட்ஸ் டி200 லைட் மாடலை அரோரா பர்பிள் (Aurora Purple), வோல்ட் பிளாக் (Volt Black), ஸ்டார்ம் கிரே (Storm Grey) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். கம்மி பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மற்றும் மிட்-ரேஞ்ச் பீச்சர்கள் வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுங்கள்.


Click it and Unblock the Notifications








