Home
Gadgets

பட்ஜெட் விலையில் புதிய ரியல்மி இயர்பட்ஸ் அறிமுகம்.! விலை?

ரியல்மி நிறுவனம் தனது புதிய பட்ஸ் க்யூ 2 ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் மாடலை பாகிஸ்தானில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த இயர்பட்ஸ் மாடல். விரைவில் இந்த புதிய ரியல்மி பட்ஸ் க்யூ 2 ட்ரூ மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி நிறுவனம்

ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய இயர்பட்ஸ் மாடல் ஆனது சார்ஜிங் கேஸ் உடன் சேரத்து மொத்தம் 20 மணிநேர பிளேபேக் ஆதரவையும், அழைப்புகளின் போது சுற்றுச்சூழல் இரைச்சல் சரி செய்ய உதவும் ENC போன்ற அசத்தலான அம்சங்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி ரியல்மி பட்ஸ் க்யூ 2 ட்ரூ

அதேபோல் இந்த ரியல்மி பட்ஸ் க்யூ 2 ட்ரூ மாடல் ஆனது பிரத்யேக கேம் மோட்-ஐ கொண்டுள்ளது, பின்பு இது 88ms லோ லேடன்சியை வழங்குகிறது.

120 நிமிடங்கள் பிளேபேக்கை வழங்கும்

மேலும் இதில் உள்ள ஒவ்வொரு பட்ஸும் 5 மணிநேர பிளேபேக்கை வழங்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தை 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 120 நிமிடங்கள் பிளேபேக்கை வழங்கும். மேலும் இன்-இயர் வடிவமைப்பு அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது ரியல்மி பட்ஸ் க்யூ 2 ட்ரூ மாடல்.

பட்ஸ் க்யூ 2 ட்ரூ மாடலில்

குறிப்பாக ரியல்மி பட்ஸ் க்யூ 2 ட்ரூ மாடலில் Polymer composite diaphragm உடனான 10 மிமீ டைனமிக் டிரைவர்கள் மற்றும் பாஸ் பூஸ்ட் 10 மேம்பாட்டு தொழில்நுட்பம் போன்ற ஆதரவுகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இந்த சாதனத்தில் டச் கண்ட்ரோல்களுக்கான ஆதரவு உள்ளது. எனவே இசையை இயக்க அல்லது நிறுத்த, அழைப்புகளுக்கு பதிலளிக்க அல்லது நிறுத்த இந்த டச் கண்ட்ரோல் ஆதரவு பயன்படும்.

எல்.ஈ.டி இன்டிகேட்டர்கள்

குறிப்பாக கால் அழைப்புகளுக்களின் போது சுற்றுச்சூழல் இரைச்சல் ரத்துசெய்ய Environmental noise cancellation (ENC) ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் உள்ள பேட்டரி தீரும் போது பயனருக்கு தெரியப்படுத்த எல்.ஈ.டி இன்டிகேட்டர்கள் ஆதரவு உள்ளது.

 வாங்க கிடைக்கும். பின்பு

அறிமுக விலையாக இந்த புதிய ரியல்மி சாதனம் பாகிஸ்தானில் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.1,900 க்கு வாங்க கிடைக்கிறது. ஆனால் குறிப்பிட்ட தள்ளுபடி காலம் முடிந்ததும், இது ரூ.2,900 க்கு வாங்க கிடைக்கும். பின்பு கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.

Best Mobiles in India

English summary
Realme Buds Q2 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X