Home
Gadgets

சும்மா அதிருது.. பட்ஜெட்ல 360 டிகிரி ஆடியோ.. பேஸ் டிரைவர்.. லோவ் லேட்டன்சி.. 480mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆடியோ பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படியான பட்ஜெட் விலையில் 360 டிகிரி ஸ்பாஷியல் ஆடியோ மட்டுமல்லாமல், டைனாமிக் பேஸ் டிரைவர்கள், டீப் கால்ஸ் நாய்ஸ் கேன்சலேஷன், 40 மணி நேரங்கள் பேக்கப், அல்ட்ரா லோவ் லேட்டன்சி மோட், டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி, டச் கன்ட்ரோல் மற்றும் ஆப் கன்ட்ரோல் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் ரியல்மி பட்ஸ் என்1 (Realme Buds N1) மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த ரியல்மி பட்ஸ் என்1 மாடலின் விலை, பீச்சர்கள் இதோ.

பெரும்பாலான பீச்சர்களை பட்ஜெட்டில் பேக் செய்துள்ளதால், இதற்கு வரவேற்பு எகிறி இருக்கிறது. லைட்-வெயிட் மற்றும் கம்போர்டபிள் டிசைனில் பட்ஸ் இருக்கிறது. அதேபோல ஹெட் மூவ்மெண்ட்களுக்கு ஏற்ப 360 டிகிரியில் ஆடியோ கிடைப்பதால், சவுண்ட் எஃபெக்ட்ஸ் புது அனுபவத்தை கொடுக்கும். இதுபோக பல்வேறு பீச்சர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன.

சும்மா அதிருது.. பட்ஜெட்ல 360 டிகிரி ஆடியோ.. பேஸ் டிரைவர்.. எந்த பட்?

ரியல்மி பட்ஸ் என்1 அம்சங்கள் (Realme Buds N1 Specifications): இந்த ரியல்மி பட்ஸ் எக்கோனோமிக் டிசைனில் (Ergonomic Design) வருகிறது. ஆகவே, காதுகளுக்கு இடையூறு ஏற்படாமல், கம்போர்ட் கொடுக்கும். பேஸ் சவுண்ட் பிரியர்களுக்கு ஏற்ப 12.4எம்எம் டைனாமிக் பேஸ் டிரைவர்கள் (Dynamic Bass Drivers) வருகின்றன. ஆகவே, டைனாமிக் சவுண்ட் எஃபெக்ட்ஸ் (Dynamic Sound Effects) உள்ளது.

மேலும், ஸ்பாஷியல் ஆடியோ எஃபெக்ட் (Spatial Audio Effect) வருகிறது. இதன் மூலம் ஹெட் மூவ்மெண்ட்களுக்கு ஏற்ப ஆடியோ அவுட்புட் கொடுக்கப்படும். இது 360 டிகிரியில் கிடைப்பதால், புதுவித மியூசிக் அனுபவத்தை பெறலாம். இந்த மாடலில் பக்கா அவுட்டோர் அவுட்புட் கொடுக்க அட்ஜஸ்டபிள் நாய்ஸ் ரெடக்சன் (Adjustable Noise Reduction) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், 46dB ஹைபிரிட் நாய்ஸ் கேன்சலேஷன் (Hybrid Noise Cancellation) கொண்டிருக்கிறது. ஆகவே, அதிகப்படியான நாய்ஸ் இருப்பினும், கிரிஸ்டல் கிளியர் ஆடியோ அனுபவத்தை பெற்று கொள்ள முடியும். இப்படி ஆடியோவுக்கு மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்களுக்கும் நாய்ஸ் கேன்ஷலேஷன் கொடுக்க ஏஐ டீப் கால் நாய்ஸ் ரெடக்சன் (AI Deep Call Noise Reduction) வருகிறது.

இந்த ரியல்மி பட்ஸ் என்1 மாடலில் கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும்படி 45ms அல்ட்ரா லோவ் லேட்டன்சி (Ultra-low Latency) வருகிறது. ஆகவே, கேமிங்கின் போது ஆடியோ மற்றும் வீடியோ சிங்க் லாக் இல்லாமல், பக்காவாக எதிர்பார்க்கலாம். பக்கா பேக்கப் கொண்ட பேட்டரி சிஸ்டம் வருகிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 40 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும்.

சார்ஜிங் கேஸில் 480mAh பேட்டரி மற்றும் இயர்பட்களில் தலா 58mAh பேட்டரி வருகிறது. அதேபோல ஃபிளாஷ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 5 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். எஸ்பிசி (SBC) மற்றும் ஏஏசி (AAC) ஆடியோ கோடெக் சப்போர்ட் வருகிறது. ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி உள்ளது.

இதுபோக ஸ்மார்ட்போன், லேப்டாப் அல்லது டேப்லெட் என்று ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களை கனெக்ட் செய்து கொள்ளும்படி ஸ்மார்ட் டூயல்-டிவைஸ் கனெக்டிவிட்டி (Smart Dual-device Connectivity) வருதிறது. அதேபோல ஆடியோ வால்யூம், வாய்ஸ் கால்களுக்கு டச் கன்ட்ரோல் (Touch Controls) சப்போர்ட் வருகிறது. ரியல்மி லிங்க் ஆப் (Realme Link App) சப்போர்ட் உள்ளது.

IP55 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. எனர்ஜைசிங் கிரீன் (Energizing Green) கலரில் வெளியாகி இருக்கிறது. இந்த மாடலின் விலை ரூ.2499ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையாக ரூ.300 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.200 கூப்பன் டிஸ்கவுண்ட் உடன் ரூ.1999 பட்ஜெட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது. செப்டம்பர் 13ஆம் தேதி முதல் அமேசானில் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Buds N1 With Spatial Audio Launched Sale From September 13 in Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X