Apple உடன் நேருக்கு நேர் போட்டி.. Realme ரிலீஸ் செய்யும் இயர்பட்ஸ்.. எப்போது? என்ன விலை? என்ன அம்சங்கள்?
ரியல்மி (Realme) நிறுவனம் வருகின்ற செப்டம்பர் 9, 2024 ஆம் தேதி அதன் புதிய ரியல்மி பட்ஸ் N1 (Realme Buds N1) என்ற TWS இயர்பட்ஸ் (Earbuds) சாதனத்தை அறிமுகம் செய்யுமென்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய இயர்பட்ஸ் சாதனம், ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி நர்ஸோ 70 டர்போ 5ஜி (Relame Narzo 70 5G) ஸ்மார்ட்போன்னுடன் சேர்த்து அறிமுகம் செய்யப்படுமென்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ரியல்மி பட்ஸ் N1 (Realme Buds N1) சாதனத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே நிறுவனம் இப்போது இது பற்றிய விபரங்களை இணையத்தில் புழங்கவிட்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் அதன் புதிய ரியல்மி பட்ஸ் N1 TWS இயர்பட்ஸ் (Realme Buds N1 TWS Earbuds) சாதனத்தை வரும் செப்டம்பர் 9, 2024 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதே நாளில், ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபோன் 16 தொடர் (iPhone 16 Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. இத்துடன் ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஏர்போட்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி பட்ஸ் N1 TWS இயர்பட்ஸ் (Realme Buds N1 TWS Earbuds):
ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 9 ஆம் தேதி அதன் புதிய சாதனங்களை அறிமுகம் செய்யுமென்று முதலே அறிவித்துவிட்டது. இப்போது இதே நாளில் ரியல்மி நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் மற்றும் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது மக்களை எளிதாக கவர முயற்சிக்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்துடன் நேருக்கு நேர் போட்டியிடுவது போல ரியல்மி அமையுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய ரியல்மி பட்ஸ் N1 TWS இயர்பட்ஸ் (Realme Buds N1 TWS Earbuds) சாதனம் 12.4mm டைனமிக் பாஸ் டிரைவர்ஸ் உடன் மிகவும் பவர்புல்லான TWS இயர்பட்ஸ் மாடலாக வெளிவரவுள்ளது. இது 360° ஸ்பேஷியல் ஆடியோ அம்சம், டைனமிக் சவுண்ட் எஃபெக்ட் மற்றும் மிகவும் துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்கக்கூடிய அம்சத்தை கொண்டுள்ளது.
இந்த புதிய ரியல்மி பட்ஸ் N1 (Realme Buds N1) இயர்பட்ஸ் 46dB ஹைபிரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) அம்சத்துடன் வெளிவரும் என்று ரியல்மி விளம்பரம் குறிப்பிட்டுள்ளது. இது 40 மணி நேர பிளே பேக் டைம் நேரத்தை வழங்குமென்று கூறப்பட்டுள்ளது. சார்ஜிங் கேஸ் உடன் இந்த பிளேபேக் டைம் சாத்தியமானது என்று ரியல்மி கூறுகிறது.
ரியல்மி பட்ஸ் N1 TWS இயர்பட்ஸ் சிறப்பம்சம் (Realme Buds N1 TWS Earbuds Specifications):
இந்த புதிய ரியல்மி பட்ஸ் N1 (Realme Buds N1) சாதனம் IP55 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்புடன் வருகிறது.இது கவர்ச்சிகரமான நியான் க்ரீன் போன்ற நிறத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ரியல்மி பட்ஸ் N1 (Realme Buds N1) சாதனம் ரூ. 3000 விலைக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் பிரியர்களை குறிவைத்து அதன் தயாரிப்புகளை வெளியிடுவதை ரியல்மி ஒரு வழக்கமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications