Home
Gadgets

சுத்தி சுத்தி அடிக்கும்.. 3D ஸ்பாஷியல் ஆடியோ.. 36 மணி நேர பேட்டரி.. ஸ்மார்ட் டேப் கன்ட்ரோல்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனத்தின் கிளிப் ஸ்டைல் இயர்பட்ஸ் மாடலான ரியல்மி பட்ஸ் கிளிப் (Realme Buds Clip) இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. டிசைன் மட்டுமல்லாமல், பேட்டரி, ஆடியோ, வெளியீட்டு தேதி உள்ளிட்ட விவரங்களும் இப்போது உறுதியாகி இருக்கிறது. இந்த ரியல்மி பட்ஸ் கிளிப் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வருகிற ஜனவரி 29ஆம் தேதி 10001mAh பேட்டரி கொண்ட மாடலாக ரியல்மி பி4 பவர் 5ஜி (Realme P4 Power 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் டபுள் ட்ரீட்டாக ரியல்மி பட்ஸ் கிளிப் மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஓப்பன் இயர் மாடலாகவும், கிளிப் ஸ்டைல் டிசைனிலும் பிரீமியம் லுக் கொடுத்து இருக்கிறது.

சுத்தி சுத்தி அடிக்கும்.. 3D ஸ்பாஷியல் ஆடியோ.. 36 மணி நேர பேட்டரி!

மியூசிக் மற்றும் வாய்ல் கால்களுக்கான பிரத்யேக பீச்சர்களையும் கொடுத்துள்ளது. மேலும், பேட்டரி பேக்கப்பிலும் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. ஸ்மார்ட் டேப் கன்ட்ரோல், ஏஐ இன்டிகிரேஷன் போன்ற பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் பீச்சர்களையும் இதில் பார்க்க முடிகிறது. லைட் வெயிட் மாடலாகவும் இருக்கப் போகிறது.

ரியல்மி பட்ஸ் கிளிப் அம்சங்கள் (Realme Buds Clip Specifications): டைட்டானியம் ஃபிட் டிசைனில் 5.3 கிராம் எடை கொண்ட லைட் வெயிட் பட்களை கொடுத்துள்ளது. ஓப்பன் இயர் டிசைனில் பட்கள் கிடைக்கின்றன. டச், ஆயில் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் கொண்ட சார்ஜிங் கேஸ் கிடைத்துள்ளது. மேட் ஸ்ட்ரக்ச்சர் கேஸை இந்த ரியல்மி பட்ஸ் கிளிப் கொடுத்துள்ளது.

11 எம்எம் டூயல் மேக்னட் லார்ஜ் அம்ளிடியூட் ஸ்பீக்கர் கொடுத்து உள்ளது. டைனாமிக் மற்றும் டீட்டெயில்டு ஆடியோ அவுட்புட் கொடுக்கும். ரியல்மி இயர்பட் மாடல்களில் கிடைக்கும் நெக்ஸ்ட்பேஸ் அல்கோரிதம் (NextBass Algorithm) இதில் கிடைத்துள்ளது. ஆகவே, பவர்புல் பேஸ் கிடைக்கும். கிளியர் டீட்டெயில் மற்றும் வைடர் சவுண்ட்ஸ்டேஜ் எதிர்பார்க்க முடிகிறது.

மேலும், 3டி ஸ்பாஷியல் ஆடியோ (3D Spatial Audio) கொடுத்துள்ளது. சவுண்ட் டைரெக்சனல் டெக் (Sound Directional Tech) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ஹெட் மூவ்மெண்ட்களுக்கு ஏற்ப ஆடியோ அவுட்புட் கொடுக்கப்படும். என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) சப்போர்ட் கொண்ட டூயல் மைக்குகளை கொடுத்துள்ளது.

ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 36 மணி நேரங்களுக்கு இந்த ரியல்மி பட்ஸ் கிளிப் மாடலில் பேக்கப் பெற்று கொள்ளலாம். ஏஐ டிரான்ஸ்லேட்டர் (AI Translator) கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் டேப் கன்ட்ரோல் (Smart Tab Control) கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் பிளே/பாஸ், டிராக் மூவிங், கஸ்டமைசபிள் ஆடியோ மோட் உள்ளது. ரியலிமி லிங்க் ஆப் (Realme Link App) சப்போர்ட் உள்ளது.

ஸ்விப்ட் பேர் (Swift Pair) மற்றும் டூயல் டிவைஸ் கனெக்சன் 2.0 (Dual Device Connection 2.0) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கேமிங் பிரியர்களுக்காக 45ms அல்ட்ரா லோவ் லேட்டன்சி (Ultra-low Latency) கிடைக்கிறது. IP55 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸை (Dust & Water Resistance) இந்த ரியல்மி பட்ஸ் கிளிப் மாடல் கொடுத்து உள்ளது.

ஃபைண்ட் மை இயர்பட்ஸ் (Find My Earbuds) கிடைத்துள்ளது. டைட்டானியம் கோல்டு (Titamium Gold) மற்றும் டைட்டானியம் பிளாக் (Titamium Black) கலர்களில் இந்த ரியல்மி பட்ஸ் கிளிப் கிடைக்க உள்ளது. இந்த பீச்சர்கள் மற்றும் டிசைன் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. விலை விவரங்கள் வெளியாகவில்லை. லைட் வெயிட் மாடலாக இருப்பதால் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Buds Clip With 36 Hours Battery Life 3D Spatial Audio To Launch in India on January 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X