Home
Gadgets

Realme பட்ஸ் கிளாசிக் இயர்போன்ஸ் நம்ப முடியாத விலையில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

ரியல்மி நிறுவனம் ரியல்மி சி 12 மற்றும் ரியல்மி சி 15 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியதோடு, ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி பட்ஸ் கிளாசிக் இயர்போன்ஸ் சாதனத்தையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கிளாசிக் இயர்பட்ஸ் எப்போது விற்பனைக்குக் கிடைக்கிறது, இதன் விலை என்ன? இதன் சிறப்பம்சம் என்ன என்று பார்க்கலாம்.

புதிதாக ரியல்மி பட்ஸ் கிளாசிக்

புதிதாக ரியல்மி பட்ஸ் கிளாசிக்

ரியல்மி நிறுவனம் தனது இயர்போன்ஸ் சாதன பட்டியலில் புதிதாக ரியல்மி பட்ஸ் கிளாசிக் என்ற சாதனத்தை தற்பொழுது சேர்த்துள்ளது. இந்த புதிய ரியல்மி பட்ஸ் கிளாசிக் இயர்போன்ஸ் சாதனம் அமேசான் இந்தியா வழியாக விற்பனைக்குக் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், ரியல்மி இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மூலமும் ஆகஸ்ட் 24 முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில்

கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில்

புதிய ரியல்மி பட்ஸ் கிளாசிக் இயர்போன்ஸ் சாதனம் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது. ரியல்மி இன் முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும்போது, புதிய ரியல்ம் பட்ஸ் கிளாசிக் புதிய ஹாஃப் இன்-இயர் வடிவமைப்பில் வருகிறது, இது வட்டமான வடிவத்துடன் காதில் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயர்போன்கள் 3.5 mm கொண்ட ஆடியோ ஜாக் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படும்.

ரியல்மே பட்ஸ் கிளாசிக் சிறப்பம்சம்

ரியல்மே பட்ஸ் கிளாசிக் சிறப்பம்சம்

ரியல்மே பட்ஸ் கிளாசிக் இயர்பட்ஸ் சாதனம் 14.2 மிமீ பெரிய டிரைவர்களைக் கொண்டுள்ளது, மேலும் இதன் இயர்பட்ஸ் சிறந்த ஒலி தரத்தை வழங்கும் என்று ரியல்மி கூறியுள்ளது. சிறந்த ஆடியோ அனுபவத்திற்காக டீப் பாஸ் மற்றும் தெளிவான ஆடியோ குரல் தெளிவு திறனுடன் வருகிறது. இசை, திரைப்படங்கள் மற்றும் அழைப்புகளை வசதியாகக் கட்டுப்படுத்த உங்களை அனுமதிக்கும் ஒற்றை பொத்தானுடன் இது வருகிறது.

நம்பமுடியாத மலிவு விலை

நம்பமுடியாத மலிவு விலை

தெளிவான அழைப்பு தரத்தை வழங்க உள்ளமையாக்கப்பட்ட எச்டி மைக்ரோஃபோனும் உள்ளது. ரியல்மி பட்ஸ் கிளாசிக் இயர்பட்ஸ் நம்பமுடியாத விலையில் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அமேசான் தளத்தில் வெறும் ரூ.399 விலையில் இந்த ரியல்மி பட்ஸ் கிளாசிக் இயர்பட்ஸ் 24ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
Realme Buds Classic with 3.5mm Connector, 14.2mm drivers launched in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X