Home
Gadgets

சும்மா கிழி.. கிழி.. 3D ஆடியோ.. 11மிமீ வூப்பர்.. 6 மைக்.. 58 ஹவர்ஸ் பிளேபேக்.. புது Realme பட்ஸ்.. எந்த மாடல்?

பிரீமியம் ஆடியோ பீச்சர்களுடன் பட்ஜெட் விலையில் ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பட்ஸ் ஏர்8 (realme Buds Air8) மாடல் இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 6 மிமீ ட்வீடர் மட்டுமல்லாமல், 11 மிமீ வூப்பரையும் கொடுத்து, 3டி ஸ்பாஷியல் ஆடியோ, நெக்ஸ்ட்பேஸ் போன்ற பீச்சர்களையும் கொண்டுள்ளது. இந்த ரியல்மி பட்ஸ் ஏர்8 மாடலின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் ரியல்மி 16 ப்ரோ 5ஜி (Realme 16 Pro 5G), ரியல்மி 16 ப்ரோபிளஸ் (Realme 16 Pro+ 5G) ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல், ரியல்மி பேட் 3 (Realme Pad 3) மற்றும் ரியல்மி பட்ஸ் ஏர்8 (Realme Buds Air8) ஆகிய மாடல்களும் வெளியாகி உள்ளன. இதில் ஆடியோ பிரியர்களை பட்ஜெட் விலையில் இந்த ரியல்மி பட்ஸ் ஏர்8 தட்டி தூக்கி இருக்கிறது. டிசைன் தொடங்கி பீச்சர்கள் வரையில் மிரளவிடுகின்றன.

சும்மா கிழி.. கிழி.. 3D ஆடியோ.. 11மிமீ வூப்பர்.. 6 மைக்.. எந்த மாடல்?

ரியல்மி பட்ஸ் ஏர்8 அம்சங்கள் (Realme Buds Air8 Specifications): 6 எம்எம் மைக்ரோ-பிளேன் ட்வீடர் மற்றும் 11 எம்எம் வூப்பரை இந்த ரியல்மி பட்ஸ் ஏர்8 மாடல் கொண்டுள்ளது. மேலும், எல்எச்டிசி 5.0 ப்ளூடூத் கோடெக் (LHDC 5.0 Bluetooth Codec) கொடுத்துள்ளது. 6 மைக்குகளை கொண்டுள்ளது. இதில் டீப் நாய்ஸ் கேன்சலேஷன் (Deep Noise Cancellation) கிடைக்கிறது. இது ஏஐ நாய்ஸ் கேன்சலேஷனாக இருக்கிறது.

ஆகவே, ஆடியோ மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்களிலும் கிரிஸ்டல் கிளியர் அனுபம் கிடைக்கும். நெக்ஸ்ட்பேஸ் அல்கோரிதம் (NextBass Algorithm) கிடைத்துள்ளது. இதில் பேஸ் பிரியர்களுக்கு ஏற்ப அவுட்புட் எதிர்பார்க்கலாம். மேலும், 3டி ஸ்பாஷியல் ஆடியோவை (3D Spatial Audio) இந்த ரியல்மி பட்ஸ் ஏர்8 மாடல் கொடுத்துள்ளது. டைனாமிக் ஆடியோ (Dynamic Audio) கொடுத்துள்ளது.

360 ஆடியோ பிரியர்களுக்கு இந்த பீச்சர்கள் பக்கா அனுபவத்தை கொடுக்கும். 55dB இன்டலிஜன்ட் நாய்ஸ் கேன்சலேஷன் (Intelligent Noise Cancellation) கொடுத்துள்ளது. மேலும், ஹை-ரெஸ் சர்டிபைடு (Hi-Res Certified) ஆடியோ சப்போர்ட்டை கொடுக்கிறது. ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கிடைக்கிறது. ஆகவே, வழக்கமாக 10 மீட்டர்கள் ரேஞ்ச் கொடுக்கப்படும். எல்டிஏசி (LDAC) மட்டுமல்லாமல், ஏஏசி (AAC) கோடெக் கிடைக்கிறது.

மேலும், எஸ்பிசி (SBC) கோடெக் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோவில் பக்கா சின்க் கொடுக்க 45ms அல்ட்ரா லோவ் லேட்டன்சி (Ultra-low Latency) கிடைத்துள்ளது. ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் 2.0 (AI Voice Assistant 2.0) கொடுத்துள்ளது. மேலும், ஏஐ லைவ் டிரான்ஸ்லேட்டர் (AI Live Translator), ஏஐ பேஸ் டூ பேஸ் டிரான்ஸ்லேட்டர் (AI Face to Face Translator) கிடைக்கிறது.

இதற்காக கூகுள் ஜெமினி அசிஸ்டன்ட் இன்டிகிரேஷன் செய்யப்பட்டு உள்ளது. இயர்பட்களில் மட்டும் IP55 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. சார்ஜிங் கேஸில் 530mAh பேட்டரி மற்றும் இயர்பட்களில் 62mAh பேட்டரி கிடைக்கிறது. ஏஎன்சி மோடில் 14 மணி நேரத்துக்கு பேக்கப் கொடுக்கும். ஏஎன்சி மோட் ஆஃப் செய்யதால் 58 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும்.

10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 11 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும். 120 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த ரியல்மி பட்ஸ் ஏர்8 மாடலின் விலை ரூ.3,799ஆக உள்ளது. மாஸ்டர் கோல்டு (Master Gold), மாஸ்டர் கிரே (Master Grey) மற்றும் மாஸ்டர் பர்பிள் (Master Purple) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. ஜனவரி 16ஆம் தேதி விற்பனை தொடங்க இருக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் தளத்தில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Buds Air8 With Dual Drivers 55dB Noise Cancellation Launched in India Sale From January 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X