தூக்குங்கடா அந்த தங்கத்த.. ஜன.6 க்கு அப்புறம் வீட்டுக்கு ஒரு பார்சல்.. 55dB அல்ட்ரா டெப்த் நாய்ஸ் கேன்சலேஷன்!
இந்திய மார்கெட்டில் ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பட்ஸ் ஏர்8 (Realme Buds Air8) மாடல் வெளியாக இருக்கிறது. இதில் கிடைக்க இருக்கும் டிரைவர்கள், நாய்ஸ் கேன்சலேஷன், ஆடியோ கோடெக் மற்றும் ஏஐ போன்ற பீச்சர்கள் ஒட்டுமொத்த மியூசிக் பிரியர்களையும் தட்டித்தூக்க இருக்கிறது. இந்த ரியல்மி பட்ஸ் ஏர்8 மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் (realme 16 Pro Series) மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதில் ரியல்மி 16 ப்ரோ (realme 16 Pro) மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் (realme 16 Pro+) ஆகிய ஸ்மார்ட்போன்கள் வர இருக்கின்றன. இந்த மாடல்களுடன் டபுள் ட்ரீட்டாக ரியல்மி பட்ஸ் ஏர்8 இயர்பட்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இதில் டிரைவர்கள், நாய்ஸ் கேன்சலேஷன், ஆடியோ கோடெக் மற்றும் ஏஐ பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதேபோல மெட்டாலிக் பினிஷிங் கொடுக்கும்படி கோல்டு (Gold), கிரே (Grey) மற்றும் லாவெண்டர் (Lavender) ஆகிய கலர்கள் உறுதியாகி இருக்கின்றன. எல்இடி இன்டிகேட்டர் மற்றும் கர்வ் டிசைனில் சார்ஜிங் கேஸ் கிடைக்கிறது. பீச்சர்களும் தரமாக இருக்கின்றன.
ரியல்மி பட்ஸ் ஏர்8 அம்சங்கள் (Realme Buds Air8 Specifications): பிரீமியம் ஆடியோ அவுட்புட் கொடுக்க டூயல் டிரைவர்கள் கிடைக்கின்றன. அதாவது, வழக்கமாக கிடைக்கும் 11 எம்எம் டிரைவர்கள் மட்டுமல்லாமல், 6 எம்எம் டிரைவர்களும் கிடைக்கின்றன. ஆகவே, ஆடியோ குவாலிட்டி கிரிஸ்டல் கிளியர் மற்றும் நேச்சுரல் பீல் கொடுக்கும். இதுவொரு ஏஎன்சி (ANC) மாடலாக இருக்கிறது.
ஆகவே, 55dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) கிடைக்கிறது. இது அல்ட்ரா டெப்த் நாய்ஸ் கேன்சலேஷனாக (Ultra Depth Noise Cancellation) இருக்கிறது. ஆகவே, அவுட்டோரில் இந்த ரியல்மி பட்ஸ் ஏர்8 மாடல் பிரீமியம் அவுட்புட் கொடுக்கும். மேலும், ஹை-ரெஸ் ஆடியோ வயர்லெஸ் (Hi-Res Audio Wireless) மற்றும் எல்எச்டிசி ப்ளூடூத் கோடெக் (LHDC Bluetooth Codec) உள்ளது.
ஹை-டெபனிஷன் ஆடியோ டிரான்ஸ்மிஷனை எதிர்பார்க்கலாம். ஆடியோ டியூனிங் மற்றும் கன்ட்ரோல்களுக்காக ஏஐ பவர்டு சவுண்ட் மாஸ்டர் (AI Powered Sound Master) கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஜனவரி 6 ஆம் தேதியில் விலை தெரியவரும்.
மேலும், ரியல்மி 16 ப்ரோ மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களும் அதே ஜனவரி 6 ஆம் தேதி அறிமுகமாக இருப்பதால், அதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த மாடல்களில் 200 எம்பி போர்ட்ராய்டு ரியர் கேமரா கிடைக்கிறது. மேலும், 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா வருகிறது. ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைக்கிறது.
குரூப் போர்ட்ராய்டு, கோல்டன் போர்ட்ராய்டு, லாங்-ஜூம் போர்ட்ராய்டு போன்ற ஜூமிங் சப்போர்ட் கொடுக்கிறது. ஏஐ எடிட் ஜீனீ 2.0 போன்ற ஏஐ பீச்சர்கள் கிடைக்கிறது. மேலும், ப்ரெஷ் மோட், நியான் மோட் போன்ற கேமரா பீச்சர்கள் உள்ளன. ஏஐ ஸ்டைல் மீ, ஏஐ லைட் மீ உள்ளிட்ட பிரத்யேக பீச்சர்களும் இருக்கின்றன. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








