Home
Gadgets

சும்மா கிழி.. சிங்கிள் சார்ஜில் 50 மணி நேர பேக்கப்.. 55dB நாய்ஸ் கேன்சலேஷன்.. 6 மைக்குகள்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பட்ஸ் ஏர்8 ப்ரோ (realme Buds Air8 Pro) மாடலின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக பேட்டரி, ஏஎன்சி, மைக்குள், டிசைன் உள்ளிட்ட முக்கிய பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்த ரியல்மி பட்ஸ் ஏர்8 ப்ரோ மாடலின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வருகிற மே 22ஆம் தேதி ரியல்மி பிரியர்களுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கப் போகிறது. ரியல்மி 16டி 5ஜி (realme 16T 5G) ஸ்மார்ட்போன் மட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் ரியல்மி பட்ஸ் ஏர்8 ப்ரோ மற்றும் ரியல்மி வாட்ச் எஸ்5 (realme Watch S5) ஆகிய மாடல்களும் வெளியாக இருக்கின்றன. இதில் மியூசிக் பிரியர்களை ரியல்மி பட்ஸ் ஏர்8 ப்ரோ தட்டித் தூக்குகிறது.

சும்மா கிழி.. சிங்கிள் சார்ஜில் 50 மணி நேர பேக்கப்.. 55dB ஏஎன்சி!

ஆர்டிஸ்டிக் மிரர் மற்றும் லக்ஸரி டிசைனில் சார்ஜிங் கேஸ் கிடைக்கிறது. மற்ற மாடல்களில் சிங்கிள் டிரைவர்கள் கிடைக்கும். ஆனால், இதில் ப்ரீமியர் டூயல் டிஏசி டிரைவர்கள் (Premier Dual-DAC Drivers) கிடைக்கின்றன. ஆகவே, 11 எம்எம் டிரைவர் + 6 எம்எம் டிரைவர் உள்ளது. கூடுதலாக டூயல் டிஏசி கிடைக்கிறது.

இந்த டிரைவர்களுக்கு ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), எல்எச்டிசி (LHDC) சப்போர்ட் கிடைக்கிறது. 55dB அல்ட்ரா டெப்த் நாய்ஸ் கேன்சலேஷன் (Ultra Depth Noise Cancellation) கொடுக்கப்பட்டு உள்ளது. 5000Hz நாய்ஸ் கேன்சலேஷன் பேண்ட்வித் கிடைக்கிறது. 6 மைக்குகளுடன் இந்த ரியல்மி பட்ஸ் ஏர்8 ப்ரோ கிடைக்க இருக்கிறது.

இதில் ஏஐ கால் நாய்ஸ் கேன்சலேஷன் (Ai Call Noise Cancellation) கொடுக்கப்பட்டு உள்ளது. சிங்கிள் சார்ஜில் 50 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். நெக்ஸ்ட் ஏஐ (NEXT Ai) கிடைப்பதால், ஏஐ டிரான்ஸ்லேஷன் (AI Translations) கிடைக்கிறது. போன், பேட், பிசி ஆகிய 3 டிவைஸ்களில் ஒரே நேரத்தில் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. ரியல்மி வாட்ச் எஸ்5 மாடலின் பீச்சர்களை பார்க்கையில். 1500 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always-On Display) கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஸ்மார்ட் நைட் விஷன் (Smart Night Vision) கிடைக்கிறது. வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மட்டுமல்லாமல், ஸ்விம்மிங் ரெசிஸ்டன்ஸ் கொடுக்க 5ATM ரேட்டிங் கிடைக்கிறது.

ஆட்டோ டிடெக்ட் செய்து கொள்ளும்படி 10 ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) கிடைக்கின்றன. கனெக்டிவிட்டியை பார்க்கையில், ப்ளூடூத் மட்டுமல்லாமல், பில்ட்-இன் ஜிபிஎஸ் (Built-in GPS), ஜிஎன்எஸ்எஸ் (GNSS) கிடைக்கிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், 20 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது.

ஏஐ பவர்டு ஹெல்த் மானிட்டரிங் மற்றும் டிராக்கிங் கிடைக்கிறது. இதில் 24/7 மானிட்டரிங் கிடைக்கிறது. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர், ஸ்லீப், ஸ்ட்ரெஸ் லெவல் உள்ளிட்ட டிராக்கர்களும் இருக்கும். ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice Assistant) கொடுக்கப்பட்டு உள்ளது. விலை விவரங்கள் தெரியவில்லை. மே 22 ஆம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
realme Buds Air8 Pro with 55dB ANC to launch in India on May 22 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X