Home
Gadgets

சுத்தி சுத்தி அடிக்கும்.. 3D ஸ்பாஷியல் ஆடியோ.. 50 மணி நேர பேக்கப்.. புது realme பட்ஸ்.. எந்த மாடல்?

பிரீமியம் ஆடியோ பீச்சர்களுடன் ரியல்மி பட்ஸ் ஏர்8 ப்ரோ (realme Buds Air8 Pro) மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்டீரியோ அனுபவம் கொடுக்கும் 3டி ஸ்பாஷியல் ஆடியோ முதல் சிங்கிள் சார்ஜில் 50 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும் பேட்டரி வரையில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த ரியல்மி பட்ஸ் ஏர்8 ப்ரோ மாடலின் விலை விற்பனை விவரங்களை பார்க்கலாம்.

ஏஐ டிரான்ஸ்லேட்டர் கொண்ட மாடலாக இந்த ரியல்மி பட்ஸ் ஏர்8 ப்ரோ இருப்பதால் தனி கவனம் பெற்றுள்ளது. 5000Hz நாய்ஸ் கேன்சலேஷன் பேண்ட்வித் கிடைக்கிறது. டூயல் டிரைவர்கள் கொண்டுள்ளது. டிரிபிள் டிவைஸ் கனெக்டிவிட்டி கொடுத்துள்ளது. 6 மைக்குகள் கிடைக்கிறது. ஆகவே, மியூசிக் மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்களிலும் பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

சுத்தி சுத்தி அடிக்கும்.. 3D ஸ்பாஷியல் ஆடியோ.. 50 மணி நேர பேக்கப்!

ரியல்மி பட்ஸ் ஏர்8 ப்ரோ அம்சங்கள் (realme Buds Air8 Pro Specifications): 6 எம்எம் டிரைவர் + 11 எம்எம் டிரைவர் கொடுத்துள்ளது. கிளியர் ஹைகளுக்கு (Clear Highs) 6 எம்எம் டிரைவர் மற்றும் டீஸ் பேஸ் விரும்பும் பிரியர்களுக்காக 11 எம்எம் டிரைவர் கிடைக்கிறது. கூடுதலாக டூயல் டிஏசிஎஸ் (Dual DACs) டியூனிங் கொடுக்கப்பட்டு உள்ளது. ஹை-ரெஸ் ஆடியோ வயர்லெஸ் (Hi-Res Audio Wireless) கிடைக்கிறது.

எல்எச்டிசி (LHDC) சப்போர்ட் கொடுத்துள்ளது. ஆகவே, லாஸ்லெஸ் ஆடியோ அனுபவம் கிடைக்கும். 1 எம்பிபிஎஸ் பிட் ரேட், 24 பிட் பிட் டெப்த் மற்றும் 192 kHz சாம்பிள் ரேட் கொண்டுள்ளது. மூவிஸ் மற்றும் கேம்களில் ஸ்டீரியோ அனுபவத்தை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்காக 3டி ஸ்பாஷியல் ஆடியோ 3D Spatial Audio) கொடுக்கப்பட்டு உள்ளது.

கோல்டன் சவுண்ட் (Golder Sound) டியூனிங் கிடைக்கிறது. ரிச் மற்றும் பேலன்ஸ்டு ஆடியோ அவுட்புட் எதிர்பார்க்க முடியும். 6 மைக்குகளுடன் ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் ( AI Noise Cancellation) கொடுக்கப்பட்டு உள்ளது. வாய்ஸ் கிளாரிட்டி கொடுக்க போன் கன்டெக்சன் விபியூ (Bone Conduction VPU) கொடுக்கப்பட்டு உள்ளது. 90dB ஹை-பைட்ரேட் ரெக்கார்டிங் மற்றும் 10எம்எஸ் விண்ட் நாய்ஸ் கேன்சலேஷன் உள்ளது.

ஆகவே, வாய்ஸ் டிடெக்சன் & என்ஹான்ஸ்மெண்ட் கிடைக்கும். இது டிரெயின் ஸ்டேஷன், இன்டோர், அர்பன் ஸ்ட்ரீட் உள்ளிட்ட டிடெக்சன்களை செய்து கொள்ளும். 5000Hz அல்ட்ரா-வைடு ஃபிரிகொன்சி நாய்ஸ் ரெடக்சன் (Ultra-Wide Frequency Noise Reduction) கிடைக்கிறது. மேலும், 55dB அல்ட்ரா டெப்த் நாய்ஸ் கேன்சலேஷன் கொடுக்கப்பட்டு உள்ளது.

இது ரியல்-டைம் அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மாடலாக இருக்கிறது. சிங்கிள் சார்ஜில் 50 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்குகிறது. இதில் 12 மணி நேரங்களுக்கு பட்களில் பேக்கப் கிடைக்கும். ஏஎன்சி ஆன் செய்யப்பட்டால், 27 மணி நேரங்களுக்கு டோட்டல் பிளேபேக் கிடைக்கும். பட்களில் 6 மணி நேரங்களுக்கு பிளேபேக் கிடைக்கும். ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice Assistant) கிடைக்கிறது.

ரியல்மி லிங்க் ஆப் (Realme Link App) வழியாக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஏஐ டிரான்ஸ்லேட்டர் (AI Translator) கிடைக்கிறது. ரியல்-டைமில் டிரான்ஸ்லேஷன் கொடுக்கிறது. ஆகவே, ஏஐ பேஸ் டு பேஸ் டிரான்ஸ்லேட்டர் (AI Face to Face Translator) சப்போர்ட் கொடுத்துள்ளது. 45 எம்எம் கேமிங் மோட் (Gaming Mode) கிடைக்கிறது. டச் கன்ட்ரோல் கொண்ட மாடலாக இருக்கிறது.

ஜூன் 3ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த ரியல்மி பட்ஸ் ஏர்8 ப்ரோ மடாலின் விலை ரூ.6999ஆக இருக்கிறது. ரூ.300 தள்ளுபடி விலையில் கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மாஸ்டர் பிளாக் மற்றும் மாஸ்டர் ஒயிட் ஆகிய கலர்களில் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
realme Buds Air8 Pro With 50 Hours Playback Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X