சும்மா கிழி.. 3D ஸ்பாஷியல் ஆடியோ.. டைனாமிக் பேஸ்.. 530mAh பேட்டரி.. ANC சப்போர்ட்.. எந்த மாடல்?
பிரீமியம் ஆடியோ அனுபவத்தை கொடுப்பது மட்டுமல்லாமல், டிசைனிலும் அல்ட்ரா பிரீமியம் லுக் கிடைக்கும்படி ரியல்மி பட்ஸ் ஏர்7 ப்ரோ (Realme Buds Air7 Pro) களமிறங்கி இருக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ சர்டிஃபைடு போக 3டி ஸ்பாஷியல் ஆடியோ, டைனாமிக் பேஸ், டீப் சீ நாய்ஸ் கேன்சலேஷன், 45எம்எஸ் லோவ் லேட்டன்சி போன்ற ஒட்டுமொத்த ஆடியோ பீச்சர்களிலும் மிரளவிட்டிருக்கிறது. இந்த ரியல்மி பட்ஸ் ஏர்7 ப்ரோ மாடலின் பீச்சர்கள் எப்படி? விலை என்ன? மற்றும் விற்பனை எப்போது?
ஏஐ சப்போர்ட் கொண்ட இயர்பட்ஸ் மாடலாக இந்த ரியல்மி பட்ஸ் ஏர்7 ப்ரோ வெளியாகி இருக்கிறது. ரியல்-டைம் டிரான்ஸ்லேஷன் சப்போர்ட் கொடுக்கிறது. அதாவது, வேறு மொழியில் இருந்து செய்யப்படும் வாய்ஸ் கால்களை உங்களது மொழியில் ரியல்-டைமில் டிரான்ஸ்லேஷன் செய்து கொள்ளலாம். அதேபோல 32 மொழிகளில் டிரான்ஸ்லேஷன் செய்து கொள்ளும்படி லாங்குவேஜ் ஃபீட் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி பட்ஸ் ஏர்7 ப்ரோ அம்சங்கள் (Realme Buds Air7 Pro Specifications): இந்த ரியல்மி மாடலில் பேஸ் பிரியர்கள் விரும்பும்படி 6 எம்எம் மைக்ரோ-பிளேன் ட்வீடர் மட்டுமல்லாமல் 11 எம்எம் வூப்பர் கிடைக்கிறது. இதுபோக டைனாமிக் பேஸ் (Dynamic Bass) மற்றும் 3டி ஸ்பாஷியல் ஆடியோ (3D Spatial Audio) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, ஸ்டீரியோ ஆடியோ அவுட்புட் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு பக்காவான மாடலாக இருக்கப் போகிறது.
மேலும், ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொடுக்கிறது. 53dB இன்டலிஜென்ட் டீப் சீ நாய்ஸ் கேன்சலேஷன் (Intelligent Deep Sea Noise Cancellation) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக 5000Hz நாய்ஸ் ரெடக்சன் சப்போர்ட் உள்ளதால், மியூசிக் அனுபவம் பிரீமியம் தரத்தில் இருக்கும். அதேபோல வாய்ஸ் கால்களிலும் கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் கொடுக்க ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் (AI Noise Cancellation) சப்போர்ட் கொண்ட 6 மைக்குகள் கிடைக்கின்றன.
இந்த ரியல்மி பட்ஸ் ஏர்7 ப்ரோ மாடலில் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஆகவே, லோவ் பவர் கன்சம்ஷன் அவுட்புட் எதிர்பார்க்கலாம். ஆடியோ கோடாக்-களை பொறுத்தவரையில், ஏஏசி (AAC) மற்றும் எஸ்பிசி (SBC) மட்டுமல்லாமல், எல்டிஏசி (LDAC) சப்போர்ட் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கும் இந்த மாடலில் மோட் கிடைக்கிறது. ஆகவே, 45 எம்எஸ் அல்ட்ரா லோவ்-லேட்டன்சி (Ultra-low Latency) மோடில் கேம் விளையாட முடியும்.
இயர்பட்களில் தலா 62mAh பேட்டரி கிடைக்கிறது. அதேபோல சார்ஜிங் கேஸில் 530mAh பேட்டரி கிடைக்கிறது. ஏஎன்சி மோட் ஆப் செய்யப்பட்டிருந்தால் 48 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைப்பதால், வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 11 மணி நேரங்ளுக்கு ஆடியோ பிளேபேக் கிடைக்கும். சார்ஜிங் கேஸ் + இயர்பட்களை ஃபுல் சார்ஜ் செய்ய 120 நிமிடங்கள் தேவைப்படுகிறது. இதில் பட்களுக்கு மட்டும் IP55 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
இந்த ரியல்மி பட்ஸ் ஏர்7 ப்ரோ மாடலில் குயிக் சாண்ட் ஒயிட் (Quick Sand White), பிளேஷிங் ரெட் (Blazing Red), சில்வர் லைம் (Silver Lime) மற்றும் விண்ட் கிரீன் (Wind Green) ஆகிய கலர்கள் ஆர்டருக்கு கிடைக்க இருக்கின்றன. இப்போது சீனாவில் அறிமுகமாகி அங்கு விற்பனையும் தொடங்கிவிட்டது. இந்தியாவில் ரியல்மி பட்ஸ் ஏர்6 ப்ரோ வெளியாகி இருக்கிறது. ஆகவே, இந்த ஏர்7 ப்ரோ மாடலையும் அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








