பொளக்கும் ஆடியோ.. 11 மிமீ வூப்பர்.. 3D ஸ்பாஷியல் சவுண்ட். டைனாமிக் பேஸ்.. பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
மெட்டாலிக் டைட்டானியம் டிசைன், ஸ்மார்ட் டச் கன்ட்ரோல், 11 மிமீ வூப்பர், 3D ஸ்பாஷியல் சவுண்ட் எபெக்ட், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், அல்ட்ரா லோவ் லேட்டன்சி மோட், ஹை-பை சர்டிபைட் கோஷியல் டூயல் யூனிட் மற்றும் டைனாமிக் பேஸ் ஆடியோ அவுட்புட் போன்ற ஒட்டுமொத்த பிரீமியம் பீச்சர்களுடன் பட்ஜெட் விலையில் ரியல்மி பட்ஸ் ஏர்6 ப்ரோ (Realme Buds Air6 Pro) இயர்பட்ஸ் களமிறங்கி இருக்கிறது. இந்த மாடலின் விலை, விற்பனை மற்றும் முழு பீச்சர்கள் இதோ.
ரியல்மி பட்ஸ் ஏர்6 ப்ரோ அம்சங்கள் (Realme Buds Air6 Pro Specifications): மெட்டாலிக் டிசைனில் டைட்டானியம் டிவைலைட் (Titanium Twilight) மற்றும் சில்வர் ப்ளூ (Silver Blu) கலர்களில் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. பட்களில் ஸ்மார்ட் டச் கன்ட்ரோல் (Smart Touch Control) வருகிறது. மியூசிக் பிளேபேக், போன் கால் கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம்.

இன்-இயர் டிடெக்சன் (In-ear detection) சப்போர்ட் வருகிறது. ஆகவே, பட்களை காதில் இருந்து எடுத்தால், மியூசிக் பாஸ் செய்யப்பட்டுவிடும். அதேபோல காதில் மாட்டினால் பிளே செய்யப்படும். மொபைல், டேப்லெட, லேப்டாப் போன்ற டிவைஸ்களில் நொடியில் கனெக்ட் செய்து கொள்ள கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) வருகிறது.
டூயல் டிவைஸ் கனெக்சன் 2.0 (Dual Device Connection 2.0) வருகிறது. ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களில் கனெக்ட் செய்து கொள்ளலாம். 6 மிமீ மைக்ரோ-பிளேன் ட்வீடர் (Micro-plane Tweeter) மட்டுமல்லாமல், 11 மிமீ வூப்பர் (Woofer) வருகிறது. டைனாமிக் பேஸ் (Dynamic Bass) மற்றும் 3D ஸ்பாஷியல் சவுண்ட் எபெக்ட் (3D Spatial Sound Effect) வருகிறது.
ஆகவே, பேஸ் ஆடியோ மிரட்டலாக இருக்கும். கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களுக்காக 50dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancelation) வருகிறது. ஹை-பை சர்டிபைட் கோஷியல் டூயல் யூனிட் (Coaxial Dual Unit) மற்றும் எல்டிஏசி ஆடியோ (LDAC Audio) வருகிறது. இதன் மூலம் வயர்லெஸ் ஆடியோ டிரான்ஸ்மிட் பக்காவாக இருக்கும்.

ஆகவே, ஆடியோவில் லேட்டன்சி இருக்காது. 4000Hz அல்ட்ரா-வைடு ஃபிரிகொன்சி நாய்ஸ் ரெடக்சன் (Ultra-Wide Frequency Noise Reduction) வருகிறது. என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் சப்போர்ட் கொண்ட 6 மைக் கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி வருகிறது. கேமிங் பிரியர்களுக்காக 55ms அல்ட்ரா லோவ் லேட்டன்சி மோட் வருகிறது.
இந்த ரியல்மி பட்ஸ் ஏர்6 ப்ரோவில் எல்டிஏசி (LDAC), ஏஏசி (AAC) மற்றும் எஸ்பிசி (SBC) போன்ற ஆடியோ கோடெக் வருகிறது. 10+ மைண்ட்ஃப்ளோ மோட்கள் (Mindflow Modes) வருகின்றன. இதன் மூலம் மெடிடேஷன், யோகா போன்ற நேரத்தில் அதற்கேற்ப மியூசிக் அவுட்புட்டை மாற்றி கொள்ளலாம். ரியல்மி லிங்க் ஆப் (realme Link App) சப்போர்ட் வருகிறது.
பர்சனலைஸ்டு ஆடியோ அல்கோரிதம் (Personalized Audio Algorithm) வருகிறது. இந்த மாடலில் 40 மணி நேரங்களுக்கு பிளேடைம் கிடைக்கும். ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டிருக்கிறது. IP55 வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த பிரீமியம் பீச்சரகளுடன் ரூ.4,999ஆக விலை இருக்கிறது.
இந்த விலையில் ரூ.500 அறிமுக சலுகை மற்றும் ரூ.300 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.4,199 பட்ஜெட்டில் இந்த பிரீமியம் மாடலை வாங்கி கொள்ளலாம். வரும் ஜூன் 27ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. ரியல்மி.காம் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications