ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாஸ்டர் எடிஷன் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!
ரியல் நிறுவனம் அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி இந்நிறுவனம் புதிய ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாஸ்டர் எடிஷன் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது நிறுவனத்தின் புதிய ரியல்மி வாட்ச் எஸ் மற்றும் ரியல்மி வாட்ச் எஸ் ப்ரோவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புதிய ரியல்மி இயர்பட்ஸ் மாடலை பிரபல கலைஞர் ஜோஸ் லெவி வடிவமைத்துள்ளார். குறிப்பாக இது மென்மையானமற்றும் பளபளப்பான கண்ணாடி பூச்சு வடிவமைப்பை பெற்றுள்ளது.

அதேபோல் ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாஸ்டர் எடிஷன் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வாங்க கிடைக்கும். மேலும் இந்த சாதனத்தில் active noise cancellation, 94 millisecond super low latency மற்றும் அழைப்புகளுக்கான dual-mic noise cancellation உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாஸ்டர் எடிஷன் ஆனது ப்ளூடூத் வி 5 ஆதரவு, 10 மிமீ டைனமிக் டிரைவர்கள், 35dB வரை நாய்ஸ் ரிடெக்ஷன் வரை வழங்கும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் 94 எம்எஸ் லோ லேடென்சி மோட் வசதிகளை கொண்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்..

பின்பு இந்த சாதனம் 486 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது, எனவே 25 மணிநேர பேட்டரி ஆயுளைக் கொடுக்கும். பின்புஇதன் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு 15 நிமிட சார்ஜிங்கில் ஏழு மணிநேர பிளேபேக்கை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய இயர்பட்ஸ் மாடல் ஐபிஎக்ஸ் 4 நீர் எதிர்ப்புடன் வருகின்றன. மேலும் இன்டெலிஜென்ட் நாய்ஸ் கேன்சலேஷன் செய்வதற்கான ரியல்மி எஸ் 1 சிப் இவற்றுள் அடக்கம். பின்பு கூர்மையான மற்றும் தெளிவான அழைப்புகளுக்கு டூயல் மைக் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாஸ்டர் எடிஷன் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஆனது smart wear detection, touch controls மற்றும் voice assistance உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது. பின்பு இது ஸ்மார்ட்போன்கள் உடனான இணைப்பிற்கு வழக்கம் போல ரியல்மி கனெக்ட் ஆப் உதவுகிறது.

புதிய ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாஸ்டர் எடிஷன் மாடல் ரூ.4,999 க்கு வாங்க கிடைக்கும். பின்பு இந்த சாதனம் வரும் ஜனவரி 8-ம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








