40 ஹவர்ஸ் பேட்டரி பேக்கப்.. கேமிங் லேட்டன்சி மோட்.. அசத்தும் Realme Buds Air 5 Pro Earbuds
இசைப்பிரியர்களுக்கும், கேம் பிரியர்களுக்கும் ஒன்றுசேர ட்ரீட் வைத்தது போல மார்க்கெட்டில் களமிறங்க காத்திருக்கிறது ரியல்மீ பட்ஸ் ஏர் 5 புரோ டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் (Realme Buds Air 5 Pro Earbuds). அதோடு 40 ஹவர்ஸ் பேட்டரி பேக்கப், லோவ் கேமிங் லேட்டன்சி மோட் உள்ளிட்ட பல அம்சங்கள் கொண்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
இப்போதெல்லாம் கேமிங் இயர்பட்ஸ்களையே (Gaming Earbuds) மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இதில், என்ன சிறப்பு இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், கேமிங் இயர்பட்ஸ்களுக்கும் அந்த மோட் இல்லாத இயர்பட்ஸ்களுக்கும் ஒரேவொரு வித்தியாசம் மட்டுமே உள்ளது. ஆனால், இந்த வித்தியாசம் மிக முக்கியமானது.

அதாவது, நீங்கள் ப்ளூடூத் (Bluetooth) வசதி கொண்ட ஹெட்போனிலோ (Headphones), இயர்போனிலோ (Earphones), இயர்பட்ஸிலோ (Earbuds) பாடல்களை தவிர்த்து, திரைப்படங்களை பார்க்கும் போதும், கேம்களை விளையாடும் போதும் மில்லி செகண்ட் தாமதமாக உங்களுக்கு ஆடியோ கேட்கும். பலருக்கு ஆடியோவும் வீடியோவும் சின்ங் (Sync) ஆகாமல் கூட இருந்திருக்கும்.
இந்த லேட்டன்சி உங்களது படம் பார்க்கும் ஆர்வத்தையும், கேம் விளையாடும் ஆசையையும் குறைத்தே விடும். இதைத் தவிர்க்கவே லேட்டஸ்டாக வரும் இயர்பட்ஸ்களில் கேமிங் லேட்டன்சி மோட் (Low Gaming Latency Mode) வருகிறது. இதன் மூலம் ஆடியோ, வீடியோ சின்ங் மிக துல்லியமாக இருக்கும். இதைத்தான் இப்போதுள்ள இசைப்பிரியர்களும், கேம் பிரியர்களும் விரும்பி வாங்கி வருகின்றனர். இவர்களுக்கு என 40 ஹவர்ஸ் பேட்டரி பேக்கப்புடன் களமிறங்குகிறது, ரியல்மீ ஏர் 5 புரோ டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ்.
ஏர் 5 புரோ டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் அம்சங்கள்: இந்த இயர்பட்ஸ் 50டிபி (50dB) வரையில் நாய்ஸ் ரெடக்ஷன் (Noise Reduction) சப்பேர்ட் கொண்டுள்லது. 6 மைக்ரோஃபோன் உடன் ஏஐ டீப் கால் நாய்ஸ் ரெடக்ஷன் (Six-Microphone AI Deep Call Noise Reduction) வசதி உள்ளது. கிரிஸ்டல் கிளியர் ஆடியோவுக்காக டிஎன்என் அல்காரிதம் (DNN algorithm) பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ரியல்மீ ஏர் 5 புரோ டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் சார்ஜிங் கேஷ் உடன் 40 மணி நேரம் வரையில் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேபோல ஒரு முறை சார்ஜ் செய்த பின்பு, சார்ஜிங் கேஷ் இல்லாமல் தொடர்ந்து 11 மணி நேரம் வரையில் இயர்பட்ஸை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த இயர்பட்ஸை ஒரு முறை முழுவதும் சார்ஜ் செய்ய 120 நிமிடங்கள் எடுக்கும்.
குறிப்பாக, இதில் 40ms வரையிலான லோவ் லேடன்சி கேமிங் மோட் (Low Latency Gaming Mode) வசதி உள்ளது. டைப்-சி (Type-C) சார்ஜிங் போர்ட் கொண்டுள்ளது. 5.3 ப்ளூடூத் கனெக்டிவிட்டியை ஆதரிக்கிறது. பேல் வைட் (Bale White) மற்றும் பிளாக் (Black) நிறங்களில் கிடைக்கிறது. மே 31ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு வருகிறது.
அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம். இதன் விலையை பொறுத்தவரையில் ரூ. 4,722 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








