இந்தியா:மலிவு விலையில் களமிறங்கும் தரமான ரியல்மி பட்ஸ் 3.!

|

ரியல்மி நிறுவனம் இந்த மாதத்தில் தனது புதிய ரியல்மி பட்ஸ் 3 சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. ரியல்மி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் இந்த புதிய அறிவிப்பை #AskMadhav என்ற டேக் உடன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரியல்மி பட்ஸ் 3

ரியல்மி பட்ஸ் 3

இந்தியாவில் ரியல்மி சார்பில் விரைவில் ரியல்மி பட்ஸ் 3 சாதனம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சாதனம் நிறுவனத்தின் முந்தைய பதிப்பான ரியல்மி 2 பட்ஸ் இன் மேம்பட்ட வெர்ஷனாக வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், அடுத்து வரவிற்கும் AIOT தயாரிப்புகள் மற்றும் 5 ஜி ஸ்மார்ட்போன்களின் விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ரியல்மி பட்ஸ் 2

ரியல்மி நிறுவனம் கடந்த ஆண்டு ரியல்மி பட்ஸ் 2 சாதனத்தை வெறும் ரூ. 599 என்ற விலையில் அறிமுகப்படுத்தியது. டைனமிக் பாஸ் பூஸ்ட் தீர்வின் அடிப்படையில் ஒலி தரம் மற்றும் பாஸ் ட்யூனிங் கொண்ட 11.2 மிமீ ஆடியோ டிரைவர் யூனிட்டுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இயர்போன்களில் சிக்கலற்ற கெவ்லர் பைடேட் கேபிள் உள்ளமைக்கப்பட்ட காந்தங்கள் மற்றும் 3 பட்டன் கொண்ட ரிமோட் கண்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

65-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!65-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

புதிய ரியல்மி பட்ஸ் 3

புதிய ரியல்மி பட்ஸ் 3 சாதனத்தை நிறுவனம் ஏற்கனவே அதனுடைய புதிய உயர்நிலை ஸ்மார்ட்வாட்ச் உடன் கசிய விட்டது. ரியல்மி பட்ஸ் 3, ஆக்டிவ் நாய்ஸ் கான்செலேஷன் உடன் ஏராளமான அம்சத்தைக் கொண்ட புதிய புதிய வடிவத்தில் களமிறங்க தயாராகவுள்ளது. ஷெத்தின் கூற்றுப்படி, இவை "தொழில்துறை முன்னணி ANC தொழில்நுட்பத்தில் இவை உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

 (AIoT) சாதனங்கள்

அதேபோல், ரியல்மி நிறுவனம் வரும் செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 5 வரை பேர்லினில் நடைபெறவுள்ள இந்த ஆண்டு ஐஎஃப்ஏ வர்த்தக கண்காட்சியில் பங்கேற்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல், நிறுவனம் சில செயற்கை நுண்ணறிவு (AIoT) சாதனங்கள் மற்றும் லைப்ஸ்டைல் தயாரிப்புகளுடன் ரியல்மி ஸ்மார்ட்போன்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் சீன நிறுவனமா? உண்மையில் ஒன்பிளஸ் எந்த நாட்டை சேர்ந்த பிராண்ட் தெரியுமா?ஒன்பிளஸ் சீன நிறுவனமா? உண்மையில் ஒன்பிளஸ் எந்த நாட்டை சேர்ந்த பிராண்ட் தெரியுமா?

வயர்லெஸ் சார்ஜர்

நிறுவனம் கடந்த மாதம் AIoT மற்றும் லைப்ஸ்டைல் தயாரிப்புகளுக்கான 1 + 4 + N தயாரிப்பு மூலோபாயத்தையும் அறிவித்தது. இதற்கிடையில், ரியல்மி நிறுவனம் நேற்று இந்தியாவில் தனது புதிய 10W வயர்லெஸ் சார்ஜரை வெறும் ரூ.899 என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது இந்த புதிய வயர்லெஸ் சார்ஜ்ர் ரியல்மி நிறுவனத்தின் இணையதளத்தில் வாங்கக் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme Buds 3 to launch in India this month : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X