ரூ.1,499-விலையில் அறிமுகமான ரியல்மி பேண்ட்.! என்னென்ன சிறப்பம்சங்கள்.!

|

சியோமி நிறுவனத்தின் மி பேண்ட் 4-க்கு போட்டியாக ரியல்மி நிறுவனம் தனது புதிய புதிய ரியல்மி பேண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் து யூ.எஸ்.பி டைரக்ட் சார்ஜ் மற்றும் ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்ஸ் போன்ற
அருமையான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

ரியல்மி பேண்ட்

ரியல்மி பேண்ட்

அதாவது இந்த புதிய ரியல்மி சாதனம் ஐந்து தனிப்பயனாக்கப்பட்ட டயல் பேஸ்களை கொண்டுள்ளது. மேலும் ரியல்மி லிங்க ஆப்பை பயன்படுத்தி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனுடன் இந்த ரியல்மி பேண்ட்-ஐ இணைக்கலாம். இந்த பிட்டனஸ் பேண்டில் ஒரு பிரத்யேக கிரிக்கெட் மோட் உள்ளது. இந்த அம்சம் இந்தய பயனர்களை இலக்காகக் கொண்டுள்ளது என்றே கூறலாம்.

ரியல்மி.காம்

ரியல்மி.காம்

இந்த புதிய ரியல்மி பேண்ட் ஆனது கருப்பு, பச்சை மற்றும் மஞ்சள் ஸ்ட்ரைப் வண்ண விருப்பங்களில் வெளிவந்துள்ளது, மேலும ரியல்மி.காம் வலைதளம் மூலம் இந்த சாதனத்தை மிக எளிமையாக வாங்க முடியும். குறிப்பாக இந்த ரூ.1,499 என்கிற விலையில் வாங்க முடியும்.

80x160 பிக்சல்கள்

80x160 பிக்சல்கள்

புதிய ரியல்மி பேண்ட் பொதுவாக 0.96 இன்ச் (2.4 செ.மீ) கலர் டிஎஃப்டி எல்சிடி பேனலைக் கொண்டுள்ளது, பின்பு 80x160 பிக்சல்கள் என்கிற திரை வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் ஒரு டச் பட்டன் உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

ரியல்மி லிங்க

மேலும் இது ரியல்மி லிங்க் ஆப் வழியாக சரிசெய்யக்கூடிய Five-level brightness-வசதியைக் கொண்டுள்ளது, பின்னர் இதன் உள்ளமைக்கப்பட்ட கிராவிட்டி சென்சார் ஆனது உங்களின் மணிக்கட்டை தூக்கும் போதேல்லாம்இதன் டிஸ்பிளே இயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 உடற்பயிற்சி

உடற்பயிற்சி

இந்த சாதனம் உடற்பயிற்சி ஆர்வலர்களுக்காகhigh-precision PPG optical heart rate sensor வசதியை வைத்துள்ளது, இது ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் பயனர்களின் நிகழ்நேர இதயத் துடிப்பை அளவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்கத்தின் தரத்தை பகுப்பாய்வு செய்ய ஒரு வழிமுறை

தூக்கத்தின் தரத்தை பகுப்பாய்வு செய்ய ஒரு வழிமுறை

இந்த ரியல்மி பிட்டனஸ் பேண்ட் Sleep Quality Monitor வசதியுடன் வெளிவந்துள்ளது, எனவே தூக்கத்தின் தரத்தை பகுப்பாய்வு செய்ய ஒரு வழிமுறையைப் பயன்படுத்துகிறது மற்றும் பயனர்கள் அவர்களின் தூக்க முறைகளைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு அறிக்கையையும் உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது நீண்ட நேரம் உட்கார்ந்தபின் நகர சொல்லி அல்லது நடக்குமாறு பயனர்களுக்கு அலெர்ட் செய்யும் ஒரு அம்சத்தையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்க்கது.

ஒன்பது ஸ்போர்ட்ஸ் மோட்

ஒன்பது ஸ்போர்ட்ஸ் மோட்

இந்த புதிய சாதனத்தில் மொத்தம் ஒன்பது ஸ்போர்ட்ஸ் மோட் உள்ளது, அதில் நடைபயிற்சி, ஓட்டம் மற்றும் யோகா ஆகியவைகளும் அடங்கும். பின்பு கிரிக்கெட் போட்டியில் நீங்கள் விளையாடும்போது புள்ளிவிவரங்களை வழங்கும் ஒரு கிரிக்கெட் பயன்முறையும் இவற்றில் உள்ளது.

 அழுக்கு, தூசி, மணல்

அழுக்கு, தூசி, மணல்

இந்த ரியல்மி பேண்ட் ஆனது ஐபி 68 சான்றளிக்கப்பட்ட கட்டமைப்பை பெற்றுள்ளது, எனவே அழுக்கு, தூசி, மணல் மற்றும் "அவ்வப்போது நீராடுவது" போன்றவற்றில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். மேலும் இந்த சாதனம்பேஸ்புக்,வாட்ஸ்அப்,இன்ஸ்டாகிராம்,ட்விட்டர்,டிக்டாக் மற்றும் யூடியூப் போன்ற ஆப்களை ஆதரிக்கும். வரும்காலத்தில் இது கிளவுட் மல்டி-டயல்,மல்டி லாங்குவேஜ் பான்ட் மற்றும் வானிலை முன்னறிவிப்பு போன்ற வசதிகளை பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

90எம்ஏஎச் பேட்டரி

90எம்ஏஎச் பேட்டரி

இந்த சாதனத்தில் அக்ஸலரோமீட்டர், ரோட்டார் வைப்ரேஷன் மோட்டார் மற்றும் ப்ளூடூத் வி 4.2 ஆகியவைகள் உள்ளது, மேலும் Android 5.0 Lollipop கொண்டு இயங்கும் சாதனங்களுடன் இணக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இவற்றில் 90எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே இது ஒன்பது நாட்கள் வரை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme Band With Colour Display, Cricket Mode Launched in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X