5 நிமிடத்தில் 100% சார்ஜ்.. 300W பாஸ்ட் சார்ஜிங்.. உண்மையான மின்னல் வேக சார்ஜிங்னா இதான்.. எந்த Realme போனில்?
ரியல்மி (realme) நிறுவனம், விரைவில் வெறும் 5 நிமிடத்தில் 100% முழுமையாக சார்ஜ் ஆகும் புதிய 300W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை (300W Fast charging technology) உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி கண்ட நிறுவனமாக ரியல்மி திகழ்கிறது. காரணம், சில ஆண்டுகளாக ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் பல வேகங்களை குறுகிய காலத்திற்குள் அறிமுகம் செய்த நிறுவனமாக ரியல்மி மட்டுமே திகழ்கிறது. ரியல்மி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யவுள்ள புதிய 300W ஃபாஸ்ட் சார்ஜிங் பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி மீண்டும் ஒரு முறை அது ஒரு தலைசிறந்த நிறுவனம் என்பதை நிரூபித்துவிட்டது. சமீபத்தில், யூடியூபர் தி டெக்சாப் (TheTechChap) உடனான நேர்காணலில், ரியல்மி குளோபல் (Realme Global) இன் சந்தைப்படுத்தல் தலைவர் பிரான்சிஸ் வோங் (Francis Wong), ரியல்மி நிறுவனம் தற்போது 300W சார்ஜிங் தொழில்நுட்பத்தை (300W charging technology) சோதித்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.

ரியல்மி 300W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை (realme 300W Fast charging technology):
தெரியாதவர்களுக்கு, ரியல்மி நிறுவனம் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை தொடர்ந்து அறிமுகம் செய்யும் வரலாற்றை கொண்டிருக்கிறது என்பதை இங்கு தெரியப்படுத்திக்கொள்கிறோம். குறிப்பாக, கடந்த 2021 ஆம் ஆண்டில் ரியல்மி நிறுவனம் 65W டார்ட்சார்ஜ் டெக்னாலஜி (65W DartCharge tech) தொழில்நுட்பத்தை அதன் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் (realme GT Master Edition) ஸ்மார்ட்போன் மூலம் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொழில்நுட்பம் 4300mAh பேட்டரியை (battery) 33 நிமிடத்தில் சார்ஜ் (33 minutes charging time) செய்கிறது. இதற்கு அடுத்தபடியாக, கடந்த 2022 ஆம் ஆண்டில் ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி நியோ 3 (realme GT Neo 3) ஸ்மார்ட்போன் சாதனத்தில் 150W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை (150W Fast Charging Tech) அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 4500mAh பேட்டரியை (battery) சக்தியை 0 முதல் 50% வெறும் 5 நிமிடத்தில் சார்ஜ் (5 minute charging) செய்யும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக, ரியல்மி நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டில் ரியல்மி ஜிடி நியோ 5 (Realme GT Neo 5) ஸ்மார்ட்போனில், 240W பாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜியை (240W fast charging technology) அறிமுகம் செய்தது.
3 நிமிடத்தில் 50% சார்ஜிங் ஸ்பீட்.. 5 நிமிடத்தில் 100% சார்ஜிங் வேகம் (50% charging speed in 3 minute.. 100% charging speed in 5 minute):
இது 10 நிமிடத்தில் (10 mins charging speed) 100% சார்ஜிங்கை எட்டும் வகையில் வெளிவந்தது. இதற்கு அடுத்தபடியாக, ரியல்மி நிறுவனம் இப்போது அடுத்த கட்ட மின்னல் வேக சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை (super fast charging technology) நோக்கி நகர்ந்துள்ளது. இது 300W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் (300W Fast Charging Technology) வருகிறது.
ரியல்மி நிறுவனம் தற்போது 300W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை சோதனை செய்து வருகிறது. இதன் சார்ஜிங் வேகம் (charging speed), 0 முதல் 50% சார்ஜிங்கை அடைய வெறும் 3 நிமிடங்கள் (3 minutes fast charging speed) மட்டுமே எடுத்துக்கொள்கிறது. இந்த தொழில்நுட்பம் முழுமையாக 100% சார்ஜ் செய்ய வெறும் 5 நிமிடங்கள் (realme 5 minutes charging speed) மட்டுமே எடுத்துக்கொள்வதாக ரியல்மி தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த தொழில்நுட்பம் எந்த ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யப்படும் என்ற விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மிக விரைவில் இந்த 300W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்த்தை (300W Fast Charging Technology) ரியல்மி அதன் ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யுமென்று கூறியுள்ளது. இது விரைவில் சந்தைப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications







