போகிக்கு பழைய TV போ.. பொங்கலுக்கு புது TV வா.. 65-இன்ச் Samsung டிவி மீது ரூ.24,000 டிஸ்கவுண்ட்.. எந்த மாடல்?
2026 போகி பண்டிகைக்கு உங்கள் வீட்டில் இருக்கும் பழைய ஸ்மார்ட் டிவியை ஓரங்கட்டிவிட்டு, பொங்கலுக்கு இன்னும் பெரிய டிஸ்பிளே கொண்ட புதிய ஸ்மார்ட் டிவி மாடல் ஒன்றை வாங்க வேண்டும் என்கிற திட்டத்தில் நீங்கள் இருந்தீர்கள் என்றால்.. இதுவே அதற்கான சரியான நேரம்.
ஏனென்றால் பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட்டில் சாம்சங் (Samsung) நிறுவனத்தின் 65-இன்ச் 4கே ஸ்மாட் டிவி மாடல் ஒன்றின் மீது ரூ.24,610 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அது என்ன மாடல்? அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? அது சாம்சங் கிரிஸ்டல் 4கே இன்பினிட்டி விஷன் 65 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டைஸன் டிவி 2025 எடிஷன் (Samsung Crystal 4K Infinity Vision 65 inch Ultra HD 4K LED Smart Tizen TV 2025 Edition) மாடல் ஆகும்.
அசல் விலை என்ன, ஆபர் விலை என்ன? இந்த 65 இன்ச் சாம்சங் ஸ்மார்ட் டிவி மாடலின் எம்ஆர்பி ரூ.85,600 ஆகும். இருப்பினும் பிளிப்கார்ட்டில் இது 28% டிஸ்கவுண்ட்டை பெற்று, அதாவது ரூ.24,610 தள்ளுபடியை பெற்று ரூ.60,990 என்கிற ஸ்பெஷல் ப்ரைஸ்-ன் கீழ் வாங்க கிடைக்கிறது
65 இன்ச் சாம்சங் கிரிஸ்டல் 4கே இன்பினிட்டி விஷன் டிவியின் முக்கிய அம்சங்கள்: ஸ்லிம் டிசைன் உடன் வரும் இந்த சாம்சங் டிவியானது 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling), எச்டிஆர் 10 பிளஸ் (HDR 10+) ஆதரவு, வாய்ஸ் அசிஸ்டென்ட்ஸ் ரிமோட் கண்ட்ரோல் (Voice Assistance Remote Control), சாம்சங் நாக்ஸ் செக்யூரிட்டி (Samsung Knox Security), 3டி சரவுண்ட் சவுண்ட் (3D surround sound) ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
வேறு என்னென்ன 65 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது? 65 இன்ச் பிலிப்ஸ் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (PHILIPS 65 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition) மாடல் ரூ.45,999 க்கு வாங்க கிடைக்கிறது . இதன் எம்ஆர்பி ரூ.54,999 ஆகும்.
இதேபோல பிளிப்கார்ட் வலைத்தளத்தில் 65 இன்ச் ரியல்மி டெக்லைப் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட்கூகுள் டிவி 2025 எடிஷன் (Realme TechLife 65 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition) மாடல் ஆனது எம்ஆர்பி விலையான ரூ.86,599 க்கு பதிலாக வெறும் ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.
65% தள்ளுபடியில் கிடைக்கும் 55-இன்ச் டிவி: பெஸ்டன் நிறுவனத்தின் 55 இன்ச் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (BESTON 55 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition - BS55UGTV) ஆனது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் 65% டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது.
இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் எம்ஆர்பி ரூ.59,999 ஆகும். இருப்பினும் தற்போது இது 65% நேரடி தள்ளுபடியை பெற்று (அதாவது எந்த பேங்க் கார்டு சலுகையும் இல்லாமல்) நேரடியாகவே ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது. இன்னும் சரியாக சொன்னால் ரூ.39,000 விலை குறைப்பை பெற்றுள்ளது.
55 இன்ச் மாடலுக்கு அதிகம் செலவு செய்ய விரும்பாத, அதே சமயம் பெரிய பிராண்ட் பற்றி கவலைப்படாத வாடிக்கையாளர்களுக்கு இதுவொரு பெஸ்ட் ஆப்ஷன் ஆக இருக்கும். ஏனென்றால் ரூ.20,000 பட்ஜெட்டில் வாங்க கிடைத்தாலும் இது 4கே அல்ட்ரா எச்டி 3840 x 2160 பிக்சல்கள் ரெசல்யூஷன், குவாண்டம் பிக்சல் கலரையும் (Quantum Pixel Colour) என்கிறமேம்பட்ட டிஸ்பிளே டெக்னாலஜி (advanced display technology) கொண்டுள்ளது


Click it and Unblock the Notifications








