Razer அறிமுகம் செய்த Project Hazel ஸ்மார்ட் மாஸ்க்.. வேறலெவல் ஹை-டெக் மாஸ்க் தான் இது..

|

ரேஸர் (Razer) நிறுவனம் நடைபெற்று வரும் CES 2021 நிகழ்வில் பிராஜெக்ட் ஹேசல் (Project Hazel) என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் மாஸ்க் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாஸ்க் லோ-லைட் மோடு கொண்டிருக்கும் என்றும், இதில் இன்டிரியர் லைட்களும், இருட்டான இடங்களில் இருக்கும்போது தானாகவே ஒளிரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பிராஜெக்ட் ஹேசல் ஸ்மார்ட் மாஸ்க்

பிராஜெக்ட் ஹேசல் ஸ்மார்ட் மாஸ்க்

பிராஜெக்ட் ஹேசல் ஸ்மார்ட் மாஸ்க் ஒரு வெளிப்படையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது நீங்கள் பேசும்போது மற்றவர்கள் உங்கள் முகத்தைப் பார்க்க அனுமதிக்கும், மேலும் உள்ளடக்கிய மைக் மற்றும் ஸ்பீக்கர் நீங்கள் பேசும் வார்த்தைகளைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. அதேபோல், ரேஸர் பிராஜெக்ட் ப்ரூக்ளின் என்ற கான்செப்ட் கேமிங் நாற்காலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 60' இன்ச் ரோல்அவுட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ராஜெக்ட் ஹேசல் ஸ்மார்ட் மாஸ்க் அம்சங்கள்

ப்ராஜெக்ட் ஹேசல் ஸ்மார்ட் மாஸ்க் அம்சங்கள்

ப்ராஜெக்ட் ஹேசல் என்பது "இதுவரை உருவாக்கப்பட்ட மிகவும் புத்திசாலித்தனமான மாஸ்கின்" முன்மாதிரி என்று ரேசர் கூறியுள்ளது. இது பாதுகாப்பான, ஆரோக்கியமான, நிலையான, வசதியான மற்றும் தனிப்பயனாக்கம் ஆகிய ஐந்து முக்கிய துறைகளில் கவனம் செலுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மாஸ்க் ஒரு வயர்லெஸ் சார்ஜிங் கேஸுடன் அல்ட்ரா வயலட் இன்டிரியர் லைட் உடன் வருகிறது. இந்த லைட் மாஸ்க் உள்ளிருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் அழிக்கும்.

டெலிகிராம் செயலியில் இப்படியொரு சிக்கல் உள்ளதா? மக்களே உஷார்.!டெலிகிராம் செயலியில் இப்படியொரு சிக்கல் உள்ளதா? மக்களே உஷார்.!

16.8 மில்லியன் வண்ணங்கள் கொண்ட லைட் மாஸ்க்

16.8 மில்லியன் வண்ணங்கள் கொண்ட லைட் மாஸ்க்

நீங்கள் இந்த ஸ்மார்ட் மாஸ்க் பயன்படுத்தும் போது உங்கள் பேச்சு குழப்பமடையாமல் இருப்பதாய் உறுதிப்படுத்த இதில் உள்ளடங்கிய மைக் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. பிராஜெக்ட் ஹேசல் 16.8 மில்லியன் வண்ணங்களையும் விளைவுகளையும் வழங்கும் குரோமா ஆர்ஜிபி லைட்டிங் கொண்ட இரண்டு தனிப்பயனாக்கக்கூடிய லைட்டிங் மண்டலங்களையும் கொண்டுள்ளது. பார்ப்பதற்கே ஹை-டெக்காக இருக்கிறது.

ரீபிளேஸ் பில்டர் மற்றும் வெண்டிலேட்டர்

ரீபிளேஸ் பில்டர் மற்றும் வெண்டிலேட்டர்

ப்ராஜெக்ட் ஹேசல் ஸ்மார்ட் மாஸ்க் குளிர்ந்த காற்றை உள் கொண்டுவருகிறது, வெளியேற்றத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி CO2 உருவாகுவதையும் தடுக்கிறது. சிலிக்கான் ப்ரொடெக்ஷன் இருப்பதால் காற்று கசிவதைத் தடுக்கிறது. இந்த ஸ்மார்ட் மாஸ்க் உங்கள் முகத்தை நேரடியாகத் தொடாத விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாஸ்க் ரீபிளேஸ் பில்டர் மற்றும் வெண்டிலேட்டர் உடன் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Razer has introduced a smart mask concept called Project Hazel at CES 2021 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X