இந்தியாவில் அறிமுகமானது புது Ray-Ban மெட்டா ஸ்மார்ட் கண்ணாடி.. 12MP கேமரா.. UPI சப்போர்ட்.. என்ன விலை?
மெட்டா (Meta) மற்றும் ரே-பேன் இணைந்து இந்தியாவில் புதிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது. Ray-Ban Meta Gen 2 AI என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் கண்ணாடி ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரே-பேன் மெட்டா ஜென் 2 ஏஐ கண்ணாடி அம்சங்கள் (Ray Ban Meta Gen 2 AI Glassess specifications): 12எம்பி கேமரா உடன் இந்த புதிய ரே-பேன் மெட்டா ஜென் 2 ஏஐ கண்ணாடி வெளிவந்துள்ளது. மேலும் இது 3K ஆல்ட்ரா HD வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்டது. இந்த ஸ்மார்ட் கண்ணாடியில் அல்ட்ராவைட் எச்டிஆர் உடன் பட தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் ஸ்லோ மோஷன் மற்றும் ஹைப்பர்லேப்ஸ் போன்ற கேமரா மோட்கள் விரைவில் சாப்ட்வேர் அப்டேட்கள் மூலம் இந்த ஸ்மார்ட் கண்ணாடிக்கு வழங்கப்படும். குறிப்பாக இந்த ரே-பேன் மெட்டா ஜென் 2 ஏஐ கண்ணாடியின் வடிவமைப்பு மற்றும் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளன மெட்டா (Meta) மற்றும் ரே-பேன் நிறுவனங்கள்.
குறிப்பாக ஐந்து-மைக்ரோ ஸ்பீக்கர் செட்டப் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் கண்ணாடி. இது சத்தமான ஒலி, பாஸ் மற்றும் பெஸ்ட் டைரக்ஷனல் ஆடியோவை வழங்குகிறது. டச்பேட், கேப்சர் பட்டன், மியூசிக் பிளேபேக், போட்டோ கேப்சர், மெசேஜ் போன்ற அனைத்திற்கும் டேப்-பேஸ்டு கண்ட்ரோல் (tap-based controls) வழங்கப்படுகிறது.
இந்த சாதனத்தில் உள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் இதில் உள்ள சார்ஜ் கேஸ் கூடுதலாக 48 மணிநேர பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இது ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. வெறும் 20 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும்.
இந்த ஸ்மார்ட் கண்ணாடி 5.4 மணி நேர வாய்ஸ் கால்கள் மற்றும் 5 மணி நேர மியூசிக் பிளேபேக் ஆதரவை வழங்கும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்டா ஏஐ அசிஸ்டண்ட் (Meta AI assistant) ஆதரவு இதில் உள்ளது. ஆனால் ஹிந்தி மொழியில் தான் அசிஸ்டண்ட் ஆதரவு உள்ளது. ஹே மெட்டா என்று கூறுவதன் மூலம் இதை பயன்படுத்தத் தொடங்கலாம். அதுவும் மெட்டா ஏஐ அசிஸ்டண்ட் மூலம் புகைப்படங்களை எடுப்பது, மெசேஜ் அனுப்புவது மற்றும் மியூசிக் கண்ட்ரோல் போன்ற அனைத்தையும் செயல்படுத்த முடியும். தீபிகா படுகோன் மற்றும் பலர் இடம்பெற்றுள்ள Celebrity AI Voice வசதியும் இதில் உள்ளது.

அதேபோல் இதில் படிப்படியாக UPI Lite பணப்பரிவர்த்தனை வசதியும் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விரைவில் WhatsApp-இல் இணைந்த வங்கி கணக்கில் இருந்து UPI Lite பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். காஸ்மிக் ப்ளூ, மிஸ்டிக் வயலட், ஆஸ்டிராய்டு கிரே போன்ற ஷைனி ஃபினிஷ் ஆப்ஷன்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.
ரே-பேன் மெட்டா ஜென் 2 ஏஐ கண்ணாடியின் விலை ரூ.39,900-ஆக உள்ளது. இந்தியாவின் பல ஆப்டிக்கல் கடைகளிலும், Ray-Ban India மையங்களிலும் இதை வாங்கலாம். Wayfarer, Skyler, Headliner உள்ளிட்ட பிரபல வடிவங்களில் இந்த ஸ்மார்ட் கண்ணாடி வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








