Just In
- 4 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 5 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 5 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 5 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- News
ஹாக்கி உலகக் கோப்பை 2023 : ஒடிசாவின் பொருளாதாரத்தில் ‘பாசிட்டிவ்’ தாக்கம் ஏற்படுத்தியது எப்படி?
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
உனக்கென்னப்பா.. நீயா தயாரிக்குற? காஸ்டலி ஆன ஆப்பிள் MacBook-ஐ மிகவும் கம்மி விலைக்கு விற்கும் Amazon!
பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவானது (Amazon India), ஆப்பிள் நிறுவனத்தின் 'காஸ்டலி' ஆன மேக்புக் (Apple MacBook) ஒன்றின் மீது நம்ப முடியாத ஆபர்களை அறிவித்துள்ளது. அதை பார்க்கும் போது.. "உனக்கென்னப்பா.. நீயா தயாரிக்குற? ஆப்பிள் நிறுவனம் தயாரிக்குது.. நீ அதை அடிமாட்டு விலைக்கு விக்குற!" என்கிற எண்ணம் உங்களுக்குள் எழுந்தால்.. அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை!
ஏனென்றால் அமேசான் வலைத்தளத்தில், எந்தவிதமான சிறப்பு விற்பனை (Special Sale) நிகழ்வும் நடக்கவில்லை. ஆனாலும் கூட ஆப்பிளின் லேட்டஸ்ட் மேக்புக் மாடல் ஒன்றின் மீது நம்ப முடியாத ஆபர் அணுக கிடைக்கிறது. அப்படியாக, ஆபர் ப்ரைஸின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது - ஆப்பிளின் புதிய மேக்புக் ஏர் எம்2 (MacBook Air M2) மாடல் ஆகும். தற்போது இந்த மேக்புக் மாடலின் மீது ரூ.14,400 என்கிற பிளாட் ஆபர் (Flat Offer) அணுக கிடைக்கிறது; கூடுதலாக ரூ.6,000 என்கிற வங்கி சலுகையும் அணுக கிடைக்கிறது!

இதன் மூலம், மேக்புக் ஏர் எம்2 மாடலின் இந்திய விலை நிர்ணயம் ஆனது ரூ.1 லட்சத்திற்கும் கீழ் இறங்கி உள்ளது. நினைவூட்டும் வண்ணம் மேக்புக் ஏர் எம்2-வின் அசல் விலை ரூ.1,19,900 ஆகும். அமேசான் அறிவித்துள்ள ரூ.14,400 என்கிற தள்ளுபடிக்கு பிறகு இதன் விலையை ரூ.1,05,500 ஆக குறைக்க முடியும். மேலும் நீங்கள் HDFC பேங்க் கார்ட்-ஐ பயன்படுத்தும் பட்சத்தில், உங்களுக்கு கூடுதலாக ரூ.6,000 என்கிற தள்ளுபடி கிடைக்கும். ஆக கடைசியாக MacBook Air M2-வை ரூ.99,500 க்கு சொந்தமாக்கி கொள்ள முடியும்!
ஒரு ஆப்பிள் தயாரிப்பின் மீது இவ்வளவு பெரிய ஆபர் கிடைப்பது மிகவும் அரிதான ஒரு காரியம் (Rare Offer) ஆகும். வழக்கமாக ரூ.3000, அல்லது ரூ.4000 என்கிற அளவிலேயே தான் பிளாட் ஆபர் அறிவிக்கப்படும்; ஒரே அடியாக ரூ.14,400 பிளாட் ஆபர் கிடைக்கிறது என்றால், நிச்சயம் இது ஒரு அரிதான ஆபரே ஆகும் மற்றும் தவறவிடக்கூடாத ஒரு ஆபரும் கூட! ரூ.95,500 என்பது ஆப்பிள் மேக்புக் ஏர் எம்2 மாடலின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜின் விலையாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த இடத்தில், அதே அமேசானில் ரூ.86,990 க்கு விற்பனை செய்யப்படும் மேக்புக் ஏர் எம்1 மாடலையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால், மேக்புக் ஏர் எம்1 மாடலுக்கும், மேக்புக் ஏர் எம்2 மாடலுக்கும் இடையே ரூ.18,510 (வங்கி சலுகையை தவிர்த்து) என்கிற இடைவெளி உள்ளது. எம்1 மாடலின் அம்சங்களை பொறுத்தவரை, இது 8-கோர் CPU, 7-கோர் GPU மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சினுடனான ஆப்பிளின் M1 சிப்பை கொண்டுள்ளது.
மேலும் இது 30W சார்ஜர் USB-C பவர் அடாப்டர் உடன் இரண்டு USB 4 போர்ட்களையும் வழங்கும். ஆப்பிள் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது குறைந்தபட்சம் 13 மணிநேர பேட்டரி லைஃப்பை வழங்கும். ஒருவேளை நீங்கள் வீடியோ எடிட்டிங்கில் இருந்தால், சுமார் 4 மணிநேர பேட்டரி லைஃப்பை எதிர்பார்க்கலாம். அதாவது இதன் பேட்டரி லைஃப் ஆனது உங்கள் பயன்பாட்டு முறைகளின் அடிப்படையில் மாறுபடும் என்று அர்த்தம்.
மறுகையில் உள்ள MacBook Air M2 ஆனது சற்றே சிறந்த செயல்திறன் மற்றும் புதிய அம்சங்களை விரும்புபவர்களுக்கானது. ஏனென்றால் இது புதிய வடிவமைப்பை கொண்டுள்ளது. அதாவது 'ட்ரிம்' செய்யப்பட்ட பெஸல்களுடன் கூடிய பிரகாசமான மற்றும் பெரிய டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் ஆப்பிளின் சமீபத்திய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த M2 சிப் மூலம் இயக்கப்படுகிறது. 18 மணி நேரம் என்கிற பேட்டரி லைஃப்பை வழங்குகிறது.
MacBook Air M2 மாடலில் 1080p கேமரா உள்ளது, அதேசமயம் Air M1 மாடலில் 720p கேமரா மட்டுமே உள்ளது. எனவே, புதிய மாடலில் சிறந்த மற்றும் தரமான கேமரா அனுபவம் கிடைக்கும் என்பது வெளிப்படை. மேலும் எம்2 மாடலில் ஸ்பீக்கர் கிரில்ஸ் (Speaker Grills) கிடையாது; அதற்கு பதிலாக இரண்டு ட்வீட்டர்கள் மற்றும் இரண்டு வூஃபர்கள் ஆனது கீபோர்ட் மற்றும் டிஸ்பிளேவிற்கு இடையே நேர்த்தியாக பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமா? எம்2 மாடலில் Dolby Atmos ஆதரவுடன் சேர்த்து ஸ்பேஷியல் ஆடியோ தொழில்நுட்பத்திற்கான ஆதரவும் உள்ளது. ஒட்டுமொத்தமாக பழைய எம்1 மாடலை விட MacBook Air M2 - மிகவும் சிறந்த தேர்வாகும்!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470