Home
Gadgets

இந்தியாவில் வி.எம்300 ப்ளுடூத் கேமிங் ஹெட்செட் அறிமுகம்.!

இரண்டு பேட்டரிகள் கொண்ட இக்கருவி மூலம் 7மணி நேரம் சார்ஜ் இருப்பதால், கேம் விளையாடுபவர்கள் நீண்ட கேம் அனுபவத்தை பெறலாம்.

By Vivek Sivanandam

இந்தியாவில் ராஃபோ நிறுவனம் அதனுடைய கேமிங் பிராண்டான VPRO ன் கீழ் வி.எம்300 ப்ளுடூத் கேமிங் ஹெட்செட்டை அறிமுகபடுத்தியுள்ளது. இந்த ஹெட்செட்டின் மூலம் கேம் விளையாடுபவர்களுக்கு வசதியான விளையாட்டு அனுபவத்தை தருவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதனுடைய ப்ளுடூத் 4.1 ஒலி பரிமாற்றம் நல்ல நிலையான இணைப்பை தருவதுடன், 10 மீட்டர் தொலைவு வரை பரிமாற்றம் செய்யவல்லது. CSR8645 சிப்-உடன் aptx தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இக்கருவி ஒவ்வொரு சிறிய ஒலிகளையும் துல்லியமாக அதற்கான திசையிலிருந்து பயனர் கேட்பது போல அனுபவத்தை தரும்.

இந்தியாவில் வி.எம்300 ப்ளுடூத் கேமிங் ஹெட்செட் அறிமுகம்.!

இரண்டு பேட்டரிகள் கொண்ட இக்கருவி மூலம் 7மணி நேரம் சார்ஜ் இருப்பதால், கேம் விளையாடுபவர்கள் நீண்ட கேம் அனுபவத்தை பெறலாம்.

இந்த கருவியானது தண்ணீர்(IP44 தரம்) மற்றும் வேர்வையை தாங்கும் வசதி வசதி கொண்டிருப்பதால், எவ்வித சூழ்நிலையையும் எதிர்கொண்டு விளையாடலாம். பல்வேறு வசதிகள் கொண்ட இதில் HD ஆடியோவசதியும், அதை கட்டுபடுத்தும் வசதியும் உள்ளது. பலதரப்பட்ட மக்களுக்கு ஏற்றவகையில் பல அளவுகளில், காதில் எளிதாக கழற்றி மாட்டக்கூடிய வகையில் இந்த ஹெட்செட் உள்ளது.

இந்தியாவில் வி.எம்300 ப்ளுடூத் கேமிங் ஹெட்செட் அறிமுகம்.!


ரஃபோ டெக்னாலஜி நிறுவனத்தின் இந்திய, சார்க் நாடுகளின் தலைவர் முகேஷ் சௌத்திரி இந்த கருவியை பற்றி கூறுகையில், இந்த ப்ளுடூத் கேமிங் ஹெட்செட் கேமர்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வமுடையவர்களுக்கு சிறந்த ஒலி அனுபவத்தையும், அசையும் போது எந்தவித அசவுகரியத்தையும் ஏற்படுத்தாதது. இதில் உள்ள மைக்ரோபோன் தேவையற்ற ஒலிகளை நீக்கி ஒட்டுமொத்தமாக நல்ல ஒலி அனுபவத்தை தருகிறது.

ரஃபோ வி-ப்ரோ வி.எம்300 ப்ளுடூத் ஹெட்செட் தற்போது இந்தியாவில் ஆன்லைன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரஃபோ டீலர்களிடம் கிடைக்கும்.

இந்தியாவில் வி.எம்300 ப்ளுடூத் கேமிங் ஹெட்செட் அறிமுகம்.!


தேவையான மற்ற கருவிகள்
ப்ளுடூத் வசதி கொண்ட விண்டோஸ் அல்லது மேக் இயங்குதளத்துடன் கூடிய கணிணி,டேப்லெட்,ஸ்மார்ட்போன்

தற்போது இந்தியாவில் இதன்விலை ரூ.2999.
முன்னதாக இந்நிறுவனம் இந்தியாவில் 3510 ப்ளஸ் 2.4G பேப்ரிக் வெயர்லெஸ் ஆப்டிக்கல் மவுசை அறிமுகப்படுத்தியது. இந்த மவுஸ் மிகவும் மிருதுவான, சிறந்த நிறங்களுடன்,தெடும் போது சிறந்த அனுபவத்தையும் தரவல்லது. இந்த வகை மவுசின் விலை ரூ. 1,999.

Best Mobiles in India

English summary
Rapoo VPRO VM300 Bluetooth gaming headset launched in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X