மலிவு விலையில் ஸ்டைலான ராபோ வி ப்ரோ வி26 எஸ் மவுஸ்

ராபோ வி-ப்ரோ வி26எஸ் மவுஸ் கேம் விளையாடும் போது மட்டுமின்றி, சாதாரண தினசரி செயல்பாடுகளை செய்வதற்கும் ஏற்றவாறு பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தருகிறது.

By GizBot Bureau
|

ராபோ வி-ப்ரோ வி26 எஸ் ஆப்டிகல் கேமிங் மவுஸானது ராபோ நிறுவனத்தின் புதிய மற்றும் பிரீமியம் கேமிங் மவுஸ் ஆகும்.

மலிவு விலையில் ஸ்டைலான ராபோ வி ப்ரோ வி26 எஸ் மவுஸ்

இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் இந்த மவுஸின் விலை ரூ1,999. இரண்டாயிரம் ரூபாய்க்கு குறைவாக சிறந்த கேமிங் மவுஸ் வாங்கும் போது இந்த மவுஸை கருத்தில்கொள்ளலாமா. இதோ அதற்கான விடையை அலசி ஆராய்வோம்.

வடிவமைப்பு:

வடிவமைப்பு:

முழுவதுமாக உயர்தர பிளாஸ்டிக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த ராபோ வி-ப்ரோ வி26 எஸ் கேமிங் மவுஸ் சிறப்பான கட்டமைப்பு தரத்தை பெற்றுள்ளது. இதன் காரணமாக பார்த்தால் பீரிமியம் லுக் தருகிறது. சிலந்திவலை போன்ற வடிவமைப்பை கொண்ட இந்த வி26எஸ் மவுஸில் உள்ள ஆர்ஜிபி விளக்குகள் ஒளிரும், மற்றொரு வகையான சிறப்பு லுக் தரும். அதேபோல சிறிய பகுதியை மட்டுமே கொண்ட இந்த மவுஸில், கவரக்கூடிய அளவில் தகவல்கள் உள்ளன. இது ரூ2000 குறைவான விலையில் கிடைக்கம் வேறு எந்த கேமிங் மவுஸிலும் கிடைப்பதில்லை.


இந்த மவுஸின் பக்கவாட்டில் இரண்டு ரப்பர் பட்டைகள் இருப்பதால், அதை கையாளுவதற்கு மிகவும் இலகுவாகவும், கேம் விளையாடும் போது அதிக நேரம் பிடிக்கவும் முடிகிறது.மேற்புற நடுப்பகுதியில் உலோக போன்ற வடிவமைப்பில், ஸ்க்ரோலர் வீல்-ம்,டிபிஐ ஸ்விட்ச் பட்டனும் உள்ளது.

இந்த ஸ்க்ரோலர் வீல் நயமாக இருப்பதால், ராபோ வி-ப்ரோ வி26எஸ்-ல் ஸ்க்ரோலிங் மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. எனினும், ஸ்க்ரோலிங் வேகமும் இலகுவான தன்மையும் இன்னும் மேம்படுத்தவேண்டியுள்ளது. பின்னல் பாதுகாப்புடன் கூடிய 1.2 மீட்டர் நீளமுள்ள கேபிள் மற்றும் கோல்ட் ப்ளேட்டிங் உடன் கூடிய யூஎஸ்பி ஏ போர்ட்டும் இந்த மவுசில் உள்ளது. மவுஸில் நீண்ட காலம் அரிப்பு ஏற்படாதவாறு இந்த கோல்ட் ப்ளேட் தடுக்கிறது.

பட்டன்கள்:

பட்டன்கள்:

சாதாரண மவுஸ்க்கும், கேமிங் மவுசுகளுக்கு இடையே உள்ள ஒரு வேறுபாடு என்னவெனில் கூடுதல் பட்டன்கள் இருப்பதுதான். இந்த ராபோ வி-ப்ரோ வி26எஸ் 5 பட்டன் வடிவமைப்பை கொண்டது. இடது மற்றும் வலது கிளிக் பட்டன்களும், டிபிஐக்கு இடையே மாறுவதற்கு ஒரு பட்டனும், மவுசின் இடது புறம் உள்ள இரு பட்டன்கள் பார்வேர்டு மற்றும் பேக்வேர்டு பட்டன்களாகவும் செயல்படுகிறது.இந்த பட்டன்களை வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தும் படி ப்ரோகிராம் செய்து கொள்ளலாம்.

விருப்பத்திற்கேற்ப வடிவமைத்தல்:

விருப்பத்திற்கேற்ப வடிவமைத்தல்:

ராபோ வி-ப்ரோ வி26எஸ் மவுசானது, விண்டோஸ் தளத்திற்கான மென்பொருளுடன் வருவதால், அதைப் பயன்படுத்தி ஆர்ஜிபி ஒளி அமைப்பை கட்டுப்படுத்தலாம். இதே மென்பொருளை பயன்படுத்தி கஸ்டம் ப்ரோபைலும் உருவாக்க முடியும்.
மேலும் இதில் நவீன பயனர் இடைமுகமும், எளிதில் புரிந்துகொள்ளும் வாய்ப்புகளும் உள்ளன. பிற பெரும்பாலான கேமிங் மவுசுகளை, கஸ்டமைஸ் மென்பொருள் விண்டோஸ் இயங்குதளத்தில் மட்டுமே கிடைக்கிறது. எனினும் எந்தவொரு பிரச்சனையும் இன்றி இந்த மவுசை லினெக்ஸ், மேக் ஓஎஸ் போன்றவற்றில் கூட பயன்படுத்தலாம். ஆனால் கஸ்டமைஸ் வாய்ப்பை பயன்படுத்த முடியாது.

செயல்திறன்:

செயல்திறன்:

ராபோ வி-ப்ரோ வி26எஸ் மவுஸ் கேம் விளையாடும் போது மட்டுமின்றி, சாதாரண தினசரி செயல்பாடுகளை செய்வதற்கும் ஏற்றவாறு பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தருகிறது. இதன் செயல்திறனிலும்,பின்னூட்டத்திலும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.

இந்த ராபோ மவுஸை விட 5 மடங்கு அதிக விலை கொண்ட மவுஸையும் பயன்படுத்தி பார்த்ததில், பெரிதாக எந்தவொரு வேறுபாடும் தெரியவில்லை. அதிக பீரிமியம் மவுஸ்கள் வேண்டுமானால் சற்று அதிக செயல்திறன் கொண்டிருக்கும்.

இந்த மவுஸ் அதிகபட்சமாக 7000 டிபிஐ வழங்குவதால், கேமி விளையாடும் போது பயனருக்கு சிறந்த அனுபவத்தை தருகிறது. ராபோ மென்பொருளை பயன்படுத்தி டிபிஐயை எளிதில் குறைக்கலாம்.

முடிவு என்ன?

முடிவு என்ன?

ராபோ வி-ப்ரோ வி26எஸ் மவுஸ் சிறப்பான துவக்க நிலை கேமிங் மவுஸ். எனினும் இது சந்தையில் உள்ள முற்றிலும் சிறப்பான மவுஸ் இல்லை. இதில் கேமிங் மவுஸ்க்கு தேவையான அனைத்து அடிப்படை அம்சங்களும் உள்ளன. லைட்டுகளுக்கு இடையே மாறும் பட்டன் இல்லாதது போன்ற சில முக்கிய அம்சங்கள் இல்லை. ஒட்டுமொத்த பார்க்கையில் ரூ2000க்கு கிடைக்கும் கேமிங் மவுஸை தேடுபவர்களுக்கு சிறப்பான டீல்.

Best Mobiles in India

English summary
Rapoo vpro v26s gaming mouse review Stylish gaming mouse : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X