ரக்ஷா பந்தன் சிறப்பு தொகுப்பு: உடன்பிறப்புகளுக்கு வழங்க உன்னத பரிசு பொருட்கள்

|

ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு உங்களது உடன்பிறப்புகளுக்கு வழங்க சிறந்த பரிசை தேர்வு செய்ய முடியவில்லையா? உடன்பிறப்புகளுக்கு ஏற்ற சிறந்த பரிசுகளை தொடர்ந்து பார்ப்போம்.

ரக்ஷா பந்தன் சிறப்பு தொகுப்பு: உடன்பிறப்புகளுக்கு வழங்க உன்னத பரிசு பொ

இந்தியாவில் பாரம்பரிய பண்டிகை என்பதை தாண்டி, உடன்பிறப்புகளுடன் உணர்வுகளை பரிமாறிக் கொள்ளும் விழாவாக ரக்ஷா பந்தன் இருக்கிறது. பல்வேறு விஷயங்ளில் உடன்பிறப்புகளின் முகத்தை பார்த்தும் பதில் கூறாமல் இருந்திருப்போம். எனினும் ரக்ஷா பந்தன் விழாவை கொண்டு பழைய சண்டை, பாசம் உள்ளிட்டவற்றை பரிசுகளை வழங்கி தீர்த்துக் கொள்ளலாம்.

உடன்பிறப்புகளிடையே வெவ்வேறு விருப்பங்கள் இருக்கும் போது வித்தியாசமான பரிசுகளை அவர்களுக்கு என தேர்வு செய்வது சிரமமான காரியமாகும். இங்கு உங்களது உடன்பிறப்புகளுக்கு வழங்க வித்தியாச பரிசு பொருட்களை விரிவாக தொகுத்துள்ளோம்.

யுஇ பூம் 2

யுஇ பூம் 2

அதிக பயணம் மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோருக்கு ஏற்ற பரிசாக இது இருக்கிறது.

எடுத்துச் செல்லும் இடங்களை கலகலப்பாக மாற்றும் தன்மையை யுஇ பூம் 2 கொண்டுள்ளது. இது வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடுவோருக்கு ஏற்றவர்களுக்கான பிரத்தியேக ஸ்பீக்கர்கள் ஆகும். யுஇ பூம் 2 செலியை கொண்டு கட்டுப்படுத்தும் வசதியை வழங்குகிறது.

எளிய வயர்லெஸ் அப்டேட்கள் டேப் கண்ட்ரோல், பிளாக் பார்ட்டி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. வாட்டர் ரெசிஸ்டண்ட், மட்டி, பீட் அப் உள்ளிட்டவற்றை தாங்கும் திறன் கொண்ட யுஇ பூம் 2 அனைத்து திசைகளிலும் இசையை வெளிப்படுத்தும்.

இதன் விலை ரூ.15,995

கேமர் லாகிடெக் ஜி310

கேமர் லாகிடெக் ஜி310

கேமிங் செய்வோருக்கு ஏற்ற கீபோர்டாக லாகிடெக் ஜி310 இருக்கிறது. லாகிடெக் ஜி 310 மெக்கானிக்கல் கீபோர்டு அதிகம் கேம் விளையாடும் உடன்பிறப்புகளுக்கு ஏற்ற பரிசாக இருக்கும்.

இதன விலை ரூ.8,795

ஒப்போ எஃப்3

ஒப்போ எஃப்3

சந்தையில் கிடைக்கும் தலைசிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை உடன்பிறப்புகளுக்கு வழங்க நினைப்பவர்களுக்கு ஒப்போ எஃப்3 சிறந்த தேர்வாக இருக்கும். டூயல் செல்ஃபி கேமரா கொண்டுள்ள ஸ்மார்ட்போன் கொண்டு உடன்பிறப்புகளுடன் செல்ஃபி கிளிக் செய்து கொள்ளலாம்.

64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஃபிட்பிட் ஆல்டா எச்.ஆர்.

ஃபிட்பிட் ஆல்டா எச்.ஆர்.

ஹெல்த் மற்றும் ஃபிட்னஸ் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஃபிட்பிட் சமீபத்தில் அறிமுகம் செய்த ஃபிட்பிட் ஆல்டா எச்.ஆர். ஸ்லீப் டிராக்கிங், மற்றும் பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. உலகின் மெல்லிய ஸ்மார்ட் பேண்ட் என்ற பெருமையுடன் இதய துடிப்பை டிராக் செய்யும் வசதி, உடற்பயிற்சியை தானாக உணர்ந்து கொள்ளும் வசதியை கொண்டுள்ளது.

ஏழு நாட்கள் பேட்டரி பேக்கப், ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் மற்றும் அழகிய வடிவமைப்புடன் ஃபுஷியா, கோரல், இன்டிகோ, பிரவுன் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

இதன் விலை ரூ.14,999

ஃபிட்பிட் பிளேஸ்

ஃபிட்பிட் பிளேஸ்

கன் மெட்டல், பிரவுன், பிளாக் மற்றும் ப்ளூ நிறங்களில் கிடைக்கும் ஃபிட்பிட் பிளேஸ் டிராக்கரை உடன்பிறப்புகளுக்கு வழங்கலாம். இதய துடிப்பை ஸ்கேன் செய்து, எத்தனை கலோரிகள் உடலில் எரிக்கப்பட்டுள்ளது என்பது போன்ற தகவல்களை வழங்குகிறது.

அடுத்த தலைமுறைக்கு ஏற்ற வசதிகளை கொண்டுள்ள ஃபிட்பிட் உறக்கத்தை தானாக டிராக் செய்யும் வசதி, உடற்பயிற்சியை தானாக உணர்ந்து கொள்ளும் வசதியை கொண்டுள்ளது. அழைப்புகள், டெக்ஸ்ட், காலெண்டர் அலெர்ட் உள்ளிட்ட நோட்டிபிகேஷன்களை வழங்கும் ஃபிட்பிட் பிளேஸ் 5 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விலை ரூ.19,990

சென்ஹெய்சர் மொமண்டம் இன்-இயர் வயர்லெஸ்

சென்ஹெய்சர் மொமண்டம் இன்-இயர் வயர்லெஸ்

இசை மீது ஆர்வம் கொண்ட உடன்பிறப்புகளுக்கு ஏற்ற பரிசாக இது இருக்கை இயர்போன் அதிக துல்லியமான இசையை வழங்குவதோடு மெல்லிய வடிவமைப்பு, எங்கும் எளிமையாய் எடுத்துச் செல்லும் வசதியை கொண்டுள்ளது. இவ்வகை இயர்போன் வயர்லெஸ் மற்றும் நாய்ஸ் கேன்சலேஷன் என இரண்டு விதங்களில் கிடைக்கிறது.

22 மணி நேர பேட்டரி பேக்கப், என்எப்சி, அதிக துல்லியமான இசை, ஒன்-டச் பேரிங், இன்டிகிரேட்டெட் மைக்ரோபோன் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ளது. அழகாக காட்சியளிக்கும் இதன் வடிவமைப்பு எலிகண்ட் பிளாக் மற்றும் ஐவரி பதிப்புகளில் கிடைக்கிறது. புதிய ஹெட்போன்கள் முந்தைய பதிப்புகளை விட அதிக துல்லியமான மற்றும் தரமுள்ள இசையை வழங்கும்.

இதன் விலை ரூ.14,990

வெர்சஸ் நியூ லோகோ

வெர்சஸ் நியூ லோகோ

நியூ லோகோ அழகிய வடிவமைப்பு மற்றும் அட்டகாசமாக காட்சியளிக்கும். டைம் ஒன்லி மற்றும் குரோனோ பதிப்புகளில் மட்டும் கிடைக்கும் நியூ லோகோ மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

ஆண்களுக்கான குரோனோகிராஃப் சக்திவாய்ந்ததாக இருக்கிறது. எக்ஸ்.எல். குவார்ட்ஸ் அசைவுகளை கொண்டுள்ளது. இத்துடன் துடிப்பான தோற்றம், ப்ளூ டையல் மற்றும் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. லெதர் ஸ்ட்ரிப் அல்லது ஐபி கோல்டு / ரோஸ் கோல்டு அல்லது இரண்டு கலர் பிரேஸ்லெட் மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் விலை ரூ.15,990

அல்டிமேட் இயர் வொன்டர்பூம்

அல்டிமேட் இயர் வொன்டர்பூம்

உடன்பிறப்புகளுக்கு இசையை பரிசளிக்க விரும்புவோருக்கு இந்த சாதனம் சரியான தேர்வாக இருக்கும். பழைய பாடல்கள், மற்றும் எங்கும் எடுத்துச் செல்லக் கூடியதாக இருப்பதோடு வாட்டர் ப்ரூப் வசதியை கொண்டுள்ளது. உடன்பிறப்புகளை மேலும் ஒன்றிணைக்கச் செய்யும் இந்த ஸ்பீக்கர் அதிக துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

இதன் விலை ரூ.7,995

Best Mobiles in India

Read more about:
English summary
Do wish to mark a difference this Raksha Bandhan? If so, here are some gift options that you can gift for your geeky siblings.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X