Home
Gadgets

தாறுமாறு சவுண்டிங்.. வெறும் ரூ.1,299 பட்ஜெட்.. லோவ் லேட்டன்சி மோட்.. 40 ஹவர்ஸ் பேக்கப்.. எந்த மாடல்?

வெறும் ரூ.1,299 பட்ஜெட்டில் லோவ் லேட்டன்சி மோட், 300mAh பேட்டரி, இஎன்சி (ENC) டெக்னாலஜி, டச் கன்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் கியூகிளிக் (Qclick) நிறுவனத்தின் கியூகிளிக் ப்ளூஸ் 1 (Qclick Blues 1) இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மார்கெட்டில் எவ்வளவு இயர்பட்ஸ்கள் வந்தாலும், அதில் லோவ் லேட்டன்சி மோட் (Low Latency Mode) இல்லையென்றால், மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைப்பதில்லை. ஏனென்றால், வீடியோ பிளே, ப்ளூடூத் காலிங், கேமிங் பிளே போன்றவற்றுக்கு லோவ் லேட்டன்சி மோட் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

வெறும் ரூ.1,299 பட்ஜெட்.. லோவ் லேட்டன்சி மோட்.. எந்த மாடல்?

நீங்கள் இயர்பட்ஸ்களை பயன்படுத்தி வீடியோ பார்க்கும் போதும், ஸ்மார்ட்போனை தொலைவில் வைத்துவிட்டு ப்ளூடூத் காலிங் பேசும் போதும், கேமிங் விளையாடும் போதும் உங்களுக்கு கேட்கும் ஆடியோவில் ஒரு செகண்ட் தாமதம் ஏற்பட்டாலும், அது எரிச்சலை உண்டாக்கிவிடும். ஏன்? நீங்கள் கூட வீடியோ பார்க்கும்போதோ, கேமிங் விளையாடும்போதோ ஆடியோ, வீடியோ சிங்க் சரியாக இல்லாமல் இருப்பதை கவனித்திருப்பீர்கள்.

இதைத் தவிர்க்கவே லோவ் லேட்டன்சி மோட் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டெக்னாலஜி இருக்கும் இயர்பட்ஸ் ரூ.3,000 பட்ஜெட்டை விட அதிகமான விலைக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும். இருப்பினும், சில இயர்பட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் புதிதாக இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்யும்போது, அறிமுக சலுகையாக கம்மி விலையில், இந்த டெக்னாலஜியை கொடுத்து வருகின்றன. அந்த வரிசையில் கியூகிளிக் ப்ளூஸ் 1 இயர்பட்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது.

கியூகிளிக் ப்ளூஸ் 1 இயர்பட்ஸ் அம்சங்கள் (Qclick Blues 1 Earbuds Specifications): இந்த இயர்பட்ஸ் 13 மிமீ பேஸ் ப்ரோ டிரைவர்கள் (Bass Pro Drivers) கொண்டுள்ளது. கிரிஸ்டல் கிளியர் மியூசிக் மற்றும் காலிங் அனுபவத்துக்காக என்வைரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும் வகையில், 40எம்எஸ் லோவ் லேட்டன்சி கேமிங் மோட் (Low Latency Gaming Mode) கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் வெர்ஷன் 5.3 வருகிறது. ஸ்ரீ (Siri) மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) அம்சம் இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் கேஸில் டிஜிட்டல் டிஸ்பிளே (Digital Display Case) கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் பேட்டரி ஸ்டேட்டஸ் பார்த்துக் கொள்ள முடியும். 300mAh பேட்டரி வருகிறது. இந்த இயர்பட்ஸ் கேஸில் உள்ள பேட்டரியை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 40 மணி நேரம் பிளேபேக் டைம் கொடுக்கும். அதேபோல, இயர்பட்ஸ் பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 6 மணி நேரம் பிளேபேக் டைம் கிடைக்கும்.

மியூசிக் பிளேபேக் (Music Playback) மற்றும் கால் கன்ட்ரோலுக்கு (Call Control) இந்த இயர்பட்ஸில் குயிக் டச் கன்ட்ரோல் (Quick Touch Controls) வசதி கொடுக்கப்படுள்ளது. இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. IPX5 தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் (Water And Sweat Resistance) வருகிறது. இதுவொரு மேட் இன் இந்தியா (Made in India) தயாரிப்பாகும்.

இந்த இயர்பட்ஸ்க்கு 401 நாட்கள் மேனுஃபாக்சரர் வாரண்டி கொடுக்கப்படுகிறது. இது கிரீன் கலரில் மட்டும் விற்பனைக்கு வருகிறது. இந்த இயர்பட்ஸ் அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,299ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கம்மியான விலையில் கேமிங் லோவ் லேட்டன்சி மோட், பக்காவான பேட்டரி பேக்கப் கொண்ட இயர்பட்ஸ் வேண்டுமென்றால், இந்த கியூகிளிக் ப்ளூஸ் 1 நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Qclick Blues 1 Earbud With 300mAh Battery, 40h Playback Launched Check Price, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X