Home
Gadgets

ரக்கட் பசங்களுக்கு என அறிமுகமான ரக்கட் வாட்ச்: 70 நாள் பேட்டரி ஆயுள்.. அடிச்சு துவச்சு எடுங்க!

ரக்கட் பசங்களுக்கு ஏற்ற ரக்கட் smartwatch, 70 நாட்கள் பேட்டரி ஆயுள், சோலார் சார்ஜிங் என பல பிரமிக்கத்தக்க அம்சங்களுடன் கார்மின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உங்களிடம் ஸ்மார்ட்வாட்ச் இல்லாமல் புதிதாக வாங்க வேண்டும் என்ற ஐடியா மட்டும் இருந்தால் இந்த வாட்ச் அதிச்சிறந்த தேர்வாக இருக்கும்.

இன்ஸ்டிங்க்ட் கிராஸ்ஓவர் மற்றும் இன்ஸ்டிங்க்ட் சோலார்

இன்ஸ்டிங்க்ட் கிராஸ்ஓவர் மற்றும் இன்ஸ்டிங்க்ட் சோலார்

கார்மின் நிறுவனம் இன்ஸ்டிங்க்ட் கிராஸ்ஓவர் மற்றும் இன்ஸ்டிங்க்ட் சோலார் என்ற ஸ்மார்ட்வாட்ச்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய இன்ஸ்டிங்க்ட் கிராஸ்ஓவர் ஆனது MIL-STD-810 உடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்வாட்ச் வெப்பம் மற்றும் ஷாக்கிங் எதிர்ப்பு தன்மையைக் கொண்டிருக்கிறது.

ரக்கட் ஸ்மார்ட்வாட்ச் விலை

ரக்கட் ஸ்மார்ட்வாட்ச் விலை

கார்மின் நிறுவனம் இந்தியாவில் Instinct Crossover மற்றும் Instinct Crossover Solar என்ற ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. கார்மின் இன்ஸ்டிங்க்ட் கிராஸ்ஓவர் ஸ்மார்ட்வாட்ச் பிளாக் வண்ண விருப்பத்திலும், இன்ஸ்டிங்க்ட் கிராஸ்ஓவர் சோலார் கிராஃபைட் வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது.

இதன் விலை தான் சற்று தலை சுத்த வைக்கும் வகையில் இருக்கிறது. கார்மின் இன்ஸ்டிங்க்ட் கிராஸ்ஓவர் ஆனது ரூ.55,990 எனவும் இன்ஸ்டிங்க்ட் கிராஸ்ஓவர் சோலார் ஆனது ரூ.61,990 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடங்கிய விற்பனை, வாங்குவது எப்படி?

தொடங்கிய விற்பனை, வாங்குவது எப்படி?

இந்த ஸ்மார்ட்வாட்ச் தற்போதே விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது அமேசான், Tata CLiQ, Tata Luxury, Synergizer, Flipkart, Nykaa.com மற்றும் குறிப்பிட்ட ஆஃபலைன் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதாவது Garmin Brand Store, Helios Watch Store, Just in Time, Sports stores போன்ற ஆஃப்லைன் கடைகளில் வாங்கலாம்.

70 நாட்கள் வரை பேட்டரி ஆயுள்

70 நாட்கள் வரை பேட்டரி ஆயுள்

இன்ஸ்டிங்க்ட் கிராஸ்ஓவர் சோலார் சார்ஜிங் ஆதரவுடன் பேட்டரி சேவர் பயன்முறையையும் கொண்டிருக்கிறது. சோலார் சார்ஜிங் பயன்முறையின் மூலம் 70 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை பெறலாம்.

அதேபோல் இன்ஸ்டிங்க்ட் கிராஸ்ஓவர் ஸ்மார்ட்வாட்ச் ஆனது ஒரு மாத பேட்டரி ஆயுளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரடுமுரடான தோற்றம்

கரடுமுரடான தோற்றம்

கார்மின் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது ஹைப்ரிட் ஜிபிஎஸ் மல்டி ஸ்போர்ட்ஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. பல்வேறு நவீன தொழில்நுட்ப ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்வாட்ச்களில் இருக்கிறது.

அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் கரடுமுரடான தோற்றத்தை கொண்டிருக்கிறது. பல்வேறு சூழ்நிலையில் இருந்து இந்த ஸ்மார்ட்வாட்ச் பாதுகாப்பாக்கப்படுகிறது. அதேபோல் சமீபத்திய அனைத்து தொழில்நுட்பங்களும் இதில் உள்ளது.

மேம்பட்ட ஆரோக்கிய அம்சங்கள்

மேம்பட்ட ஆரோக்கிய அம்சங்கள்

இன்ஸ்டிங்க்ட் கிராஸ்ஓவர் ஆனது கார்மினின் ஸ்லீப் ஸ்கோர், அட்வான்ஸ்டு ஸ்லீப் மானிட்டரிங் மற்றும் ஹெல்த் மானிட்டரிங் செயல்பாடுகள் உள்ளிட்ட பல ஆரோக்கிய அம்சங்களை வழங்குகிறது.

அதேபோல் புதிய இன்ஸ்டிங்க்ட் கிராஸ்ஓவர் ஆனது MIL-STD-810 மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெப்பம் மற்றும் ஷாக்கிங் எதிர்ப்பு தன்மை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம், இதில் உள்ளது சாதாரண ஸ்க்ராட்ச் எதிர்ப்பு தன்மை இல்லை, இரசாயன வலுவூட்டப்பட்ட ஸ்க்ராட்ச் எதிர்ப்பு லென்ஸ் ஆதரவு இருக்கிறது.

அடிச்சு துவச்சு எடுக்கலாம்

அடிச்சு துவச்சு எடுக்கலாம்

10 மீட்டர் வரை உள்ள நீரில் மூழ்கினால் இந்த வாட்ச்சுக்கு ஒன்றும் ஆகாது. அனைத்து ஸ்மார்ட்போன்கள் உடனும் இதை இணைக்கலாம்.

விலையை வைத்தே கணத்துவிடலாம் இதன் தன்மையையும், வடிவமைப்பையும். ஒரு ஸ்மார்ட்வாட்ச் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியும், ஒரு ஸ்மார்ட்வாட்ச்சுக்கு என்னென்ன அம்சங்கள் தேவையை அத்தனையும் இதில் இருக்கிறது.

பிரத்யேக உடல் கண்காணிப்பு அம்சம்

பிரத்யேக உடல் கண்காணிப்பு அம்சம்

இந்த ஸ்மார்ட்வாட்ச் இல் பாடி மானிட்டர் என்ற அம்சம் இருக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்வாட்ச் மன அழுத்தம், இதயத் துடிப்பு போன்ற பல முக்கிய ஆரோக்கிய அளவீடுகளை ஒரு நேரத்தில் அறிந்து கொள்ள பயனர்களை அனுமதிக்கிறது. 24/7 சுகாதார கண்காணிப்பு அம்சம் இதில் வழங்கப்பட்டிருக்கிறது.

அனைவரின் தேவையையும் பூர்த்தி செய்யும்

அனைவரின் தேவையையும் பூர்த்தி செய்யும்

"சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், இந்தியாவில் எங்களின் இன்ஸ்டிங்க்ட் சீரிஸை விரிவுப்படுத்தவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்" என கார்மின் இந்தியா தலைவர் யேசுதாஸ் பிள்ளை கூறினார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Pure Rugged Smartwatch Launched for Rugged Boys: Instinct Crossover Solar Hybrid Smartwatch available with 70 days battery life
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X