Home
Gadgets

கேட்டிங்கனா ஆர்டர் போட்டுருவீங்க.. Bass சும்மா கின்னுன்னு இருக்கும்.. தரமான pTron இயர்பட்ஸ் அறிமுகம்!

இந்தியாவில் பிட்ரான் (pTron) நிறுவனத்தின் புதிய பிட்ரான் ஜென்பட்ஸ் ப்ரோ 1 மேக்ஸ் (pTron Zenbuds Pro 1 Max) அறிமுகமாகியிருக்கிறது. பட்ஜெட் விலையில், ஏஎன்சி (ANC) ஃபாஸ்ட் சார்ஜிங், ட்ரூ டாக் இஎன்சி ( TruTalk ENC) என அம்சங்களில் அசத்துகிறது.

இந்த இயர்பட்ஸ் குறித்த மற்ற அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்கள் இதோ. உங்களில் பலருக்கு பேஸ் (Bass) இயர்பட்ஸ் மட்டுமே விருப்பமானதாக இருக்கும். சொல்லப்போனால், பொதுவாகவே இசைப்பிரியர்கள் பேஸ் சவுண்ட்ஸ் கேட்பதையே வாடிக்கையாக வைத்திருப்பார்கள். இவர்கள் கேட்கும் பாடல்கள் கூட அதிக பேஸ் சவுண்ட்ஸ் கொண்டாதாகவே இருக்கும்.

கேட்டிங்கனா ஆர்டர் போட்டுருவீங்க.. தரமான pTron இயர்பட்ஸ் அறிமுகம்!

ஆனால், இப்போது வரும் இயர்பட்ஸ்களில் பெரும்பாலானவை பேஸ் சவுண்ட்ஸ் தொழில்நுட்பத்தில் சிறப்பாக இருப்பதில்லை. சில கம்பெனி இயர்பட்ஸ்களில் கூட தரமான பேஸ் என்ஹான்ஸ்ட் (Bass Enhanced) தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதில்லை. இந்த தொழில்நுட்பத்தில், பிட்ரான் நிறுவனத்தின் இயர்பட்ஸ்கள் (Earbuds) சிறப்பாகவே இருக்கின்றன என்று அவற்றை பயன்படுத்திவரும் யூசர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த வரிசையில், பிட்ரான் நிறுவனத்தின் புதிய பிட்ரான் ஜென்பட்ஸ் ப்ரோ 1 மேக்ஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது. பட்ஜெட் விலையில் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும் பேக் செய்துள்ளது. குறிப்பாக, அமேசான் (Amazon) தளத்தில் பாதிக்குபாதி ஆஃபர் விலையில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் குறித்த அம்சங்கள் பின்வருமாறு.

பிட்ரான் ஜென்பட்ஸ் ப்ரோ 1 மேக்ஸ் அம்சங்கள்: இந்த டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் (TWS Earbuds) ஸ்டீரியோ மற்றும் பேஸ் சவுண்ட்களுக்கென பிரத்யேகமாக 13மிமீ ஹை-ரெஸ் டிரைவர்களை (13mm Hi-Res Drivers) கொண்டுள்ளது. கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களுக்காக ட்ரூடாக் இஎன்சி (TruTalk ENC Technology) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

v5.3 அட்வான்ஸ்ட் ப்ளூடூத் இணைப்புத் திறன் கொண்டிருக்கிறது. டைப்-சி போர்ட்டுடன் ஃபாஸ்ட் சார்ஜிங் (Type-C / Fast Charging ) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் கேஸ் உடன் பயன்படுத்தினால், தொடர்ந்து 80 மணி நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். ஏஎன்சி ஆன் செய்து பயன்படுத்தினால், 70 மணி நேரம் பேக்கப் கிடைக்கும்.

இந்த ஏஎன்சி மூலம் டிராபிக் போன்ற மிகுந்த சத்தம் நிறைந்த பகுதிகளில் கூட தெளிவாக இசையை கேட்க முடியும். மற்ற இயர்பட்ஸ்களை விட பெரியதாக 600mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. வாய்ஸ் அசிஸ்டன்ட் (voice assistant), IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதியும் உள்ளது. குவாட் மைக் (Quad mic) கொடுக்கப்பட்டுள்ளது. சிறப்பான பேஸ் அனுபவத்திற்காக ஸ்டீரியோ சவுண்ட் வித் என்ஹான்ஸ்ட் பேஸ் ( Stereo Sound with Enhanced Bass) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மெட்டாலிக் பிளாக் (Black), வைட் (White) மற்றும் ப்ளூ (Blue) கலர்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் விலை ரூ.5,499ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இப்போது அமேசானில் வெறும் ரூ.1,499-க்கு கிடைக்கிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
pTron Zenbuds Pro 1 Max TWS Earbuds at Rs 1499 launched in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X