ரூ.1,299-க்கு ரோவர் மோனோ ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்.!

|

பிட்ரோன் நிறுவனம் ஒரு புதிய ஆடியோபில்ஸை வெளியிட்டுள்ளது.

பிட்ரோன் நிறுவனம், ரோவர் CSR சிப் கொண்ட ப்ளூடூத் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. போனில் வரும் அழைப்புகளை ஏற்பதற்கு, வயர் இல்லாத மொபைல் சேர்ப்பாக பிட்ரோன் ரோவர் திகழ்கிறது. இது, அழகான எடைக்குறைந்த வடிவமைப்பு, வயர்லெஸ் ப்ளூடூத் இணைப்பு, HD மைக்ரோஃபோன், வாய்ஸ் கமெண்டுகள் மற்றும் பாலிமர் பேட்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது.

ரூ.1,299-க்கு ரோவர் மோனோ ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்.!


சிறந்த அழைப்பு அனுபவத்தை பெறும் வகையில் வாய்ஸ் கால்ஸ் உடன் கூடிய ஒரு மைக்ரோபோனை, பிட்ரோன் ரோவர் கொண்டுள்ளது. பல செயல் திறன் கொண்ட பட்டன் மற்றும் சிறப்பான பவர் ஸ்விட்ச் மூலம் இதை இயக்குவது எளிதாக உள்ளது. மைக்ரோ USB சார்ஜிங் கேபிள் மூலம் இதை சார்ஜ் செய்ய முடியும்.

இந்த பிட்ரோன் ரோவரில் சிறப்பான வயர்லெஸ் இணைப்பிற்காக CSR ப்ளூடூத் சிப்செட், குறைந்த பேட்டரி பயன்பாடு, தகுந்த ஒலி அனுபவம், உங்கள் மொபைல் போனில் உள்ள இசையை கேட்க ரசிக்க உதவும் A2DP ஸ்ட்ரீம்மிங், 280 கோணத்தில் சுழலக் கூடிய மைக், உள்ளாக மாற்றக்கூடிய பக்கங்கள் மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்து விட்டால் 8 மணிநேரம் வரை இயங்க கூடிய திறன் கொண்ட 90mAh பேட்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது.

பிட்ரோன் ரோவர் ரூ. 1299 என்ற அறிமுக விலையில் பிட்ரோனின் ஆன்லைன் விற்பனை நிலையமான www.ptron.in இல் கிடைக்கிறது. மேலும் பிளிப்கார்ட், அமேசான் மற்றும் LatestOne.com ஆகிய இ-காமெர்ஸ் விற்பனையகங்களிலும் கிடைக்கிறது.

அம்சங்கள்:
ப்ளூடூத் v4.1 தொழில்நுட்பம் மற்றும் பல செயல் திறன் கொண்ட பட்டன்

CSR சிப்செட்

HD வாய்ஸ் மற்றும் தகுந்த ஒலி அனுபவத்திற்கான ஒலி

280 கோணத்தில் சுழலக்கூடிய மைக் மற்றும் உள்ளாக மாற்றக்கூடிய பக்கங்கள்

இணைக்கப்பட்ட சாதனத்தில் இருந்து 10m வரை செயல்படும்

அலைவரிசை ஏற்பு - 20 Hz-20 kHz

மின்தடுப்பு - 32 ஓம்ஸ்

பேட்டரி திறன் - 90 mAh

இயங்கு நேரம் - 8 மணிநேரத்திற்கும் மேல்

நிலைநிற்கும் நேரம் - 200 மணிநேரம்

முன்னதாக இந்நிறுவனத்தின் மூலம் டான்ஜென்ட் வயல்லெஸ் நெக்பேண்டு இயர்போன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிட்ரோன் நிறுவனத்தின் நவீன சேர்ப்பாக ப்ளூடூத் கொண்டு இயங்கும் மொபைல் ஆடியோ வகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.1,299-க்கு ரோவர் மோனோ ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்.!


பிட்ரோன் டான்ஜென்ட் சாதனத்தில் கவர்ச்சிகரமான ஸ்போர்டி வடிவமைப்பு, ப்ளூடூத் வயர்லெஸ் இணைப்பு, கச்சிதமாக பொருந்தக் கூடிய காந்த தன்மை கொண்ட இயர்பட்ஸ் மற்றும் நீண்டகாலம் உழைக்க கூடிய பாலிமர் பேட்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த தயாரிப்பு உடன் இணைப்பாக, பயனரின் கழுத்து அளவு மற்றும் வடிவத்திற்கு ஏற்ப வளைந்த நெளிய கூடிய வயர்களை கொண்டிருக்கிறது.

பல செயல் திறன் கொண்ட பட்டன்கள் மூலம் இதன் இசையை எளிதாக கட்டுப்படுத்த முடியும். ஒரு மேம்பட்ட மைக்ரோபோனை பயன்படுத்தி சிறந்த அழைப்பு செயல்பாட்டை பயனர்கள் பெற முடிகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் வரை நிலை நிற்க கூடிய பாலிமர் பேட்டரியை பிட்ரோன் பெற்றதுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
PTron unveils ‘Rover’ Mono Bluetooth earphone for Rs 1,299: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X