Just In
- 18 min ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 30 min ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 1 hr ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- 1 hr ago
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
Don't Miss
- News
விக்ரம் + சர்தார் + பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்.. இத அப்டியே மிக்சில போட்டு அரைச்சா.. அட இது ‘பதான்’ல!
- Finance
குட்டி துபாய் ஆக மாறும் ஜிம்பாப்வே.. பணக்காரர்களுக்கு மட்டும் தனி இடம்..!
- Movies
சிவகுமார் மோடுக்கு மாறிய ரன்பீர் கபூர்.. செல்ஃபி எடுத்த ரசிகரின் போனை தூக்கி எப்படி வீசுறாரு பாருங்க
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Lifestyle
இட்லி, சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்... கத்திரிக்காய் தொக்கு
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஆப்பிள் வாட்ச் தோற்றத்தில் அறிமுகமான Ptron ஸ்மார்ட்வாட்ச்: கம்மி விலை.!
இந்தியச் சந்தையில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு கம்மி விலையில் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இப்போது வரும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் நாம் எதிர்பார்க்காத பல அசத்தலான அம்சங்கள் இடம்பெறுகின்றன என்பது தான் உண்மை.

Ptron Force X12S ஸ்மார்ட்வாட்ச்
இந்நிலையில் மிகவும் பிடிரான் (Ptron) நிறுவனம் சமீபத்தில் Ptron Force X12S எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக கம்மி விலையில் பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச். மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

Ptron Force X12S ஸ்மார்ட்வாட்ச்
Ptron Force X12S ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.85-இனச் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆப்பிள் வாட்சைப் போலவே மெல்லிய பேசல்களைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

straps மாற்றும் அம்சம்
ஆப்பிள் வாட்ச்சில் உள்ளதைப் போன்ற rotating crown இந்த புதிய Ptron Force X12S ஸ்மார்ட்வாட்ச் மாடலில் இடம்பெற்றுள்ளது. பின்பு straps மாற்றும் அம்சமும் இதில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோஃபோன்- ஸ்பீக்கர்
புதிய Ptron Force X12S ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ப்ளூடூத் காலிங் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் மைக்ரோஃபோன், ஸ்பீக்கர் உள்ளிட்ட ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

இதய துடிப்பு கண்காணிப்பு..
இதய துடிப்பு கண்காணிப்பு, SpO2 கண்காணிப்பு, பி.பி, Sleep monitoring மற்றும் பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய Ptron Force X12S ஸ்மார்ட்வாட்ச் மாடல். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அமேசான் தளத்தில் ரூ.1499-விலையில் வாங்க முடியும்.

கிஸ்மோர் நிறுவனம்
அதேபோல் கடந்த வாரம் பிரபலமான கிஸ்மோர் நிறுவனம் கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.85-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 240x280 பிக்சல்ஸ், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

ஃபிட்னஸ் டிராக்கிங் அம்சங்கள்
கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ஹெல்த் மாணிட்டரிங், SpO2, ஹார்ட் ரேட், பிரீதிங், ஸ்டிரெஸ் மற்றும் மென்ஸ்டுரல் டிராகிங் உள்ளிட்ட ஏராளமான உடல்நலன் மற்றும் ஃபிட்னஸ் டிராக்கிங் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் விலை
இந்த புதிய கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ப்ளூடூத் காலிங் 5.0, ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட், வாட்ச் ஃபேஸ்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு இன்-பில்ட் கேம்ஸ், கால்குலேட்டர் உள்ளிட்ட அட்டகாசமான வசதிகளைக் கொண்டு வெளிவந்துள்ளது கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச். கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல் பிளாக், பர்கண்டி மற்றும் கிரே என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.1,199-ஆக உள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470