ரூ.549 விலையில் புது pTron பவர் பேங்க்.. ரூ.899 விலையில் pTron TWS இயர்பட்ஸ் வாங்கலாம்.. எங்கே தெரியுமா?

|

pTron தனது மேட்-இன்-இந்தியா ஸ்மார்ட் எசென்ஷியல்ஸ் கலெக்ஷனில், பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. pTron ஸ்மார்ட் எசென்ஷியல்ஸ் கலெக்ஷனில் TWS இயர்பட்ஸ், பவர் பேங்க், சூப்பர் பாஸ்ட் சார்ஜர் மற்றும் ஸ்மார்ட் சார்ஜிங் கேபிள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள ஆந்திராவின் கர்னூலில் தயாரிக்கப்படுகிறது. இந்த மேட்-இன்-இந்தியா சேகரிப்பு இப்போது இந்தியாவில் நம்ப முடியாத விலையில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

பிட்ரான் பாஸ்பட்ஸ் பிளஸ் (pTron Bassbuds Plus)

பிட்ரான் பாஸ்பட்ஸ் பிளஸ் (pTron Bassbuds Plus)

pTron Bassbuds Plus என்பது சிறந்த சவுண்ட் அவுட்புட், டிஜிட்டல் பேட்டரி டிஸ்பிளே மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பல ஸ்மார்ட் அம்சங்களுடன் வரக்கூடிய பிரீமியம் TWS சாதனமாகும். இந்த ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் சாதனம் இப்போது வெறும் ரூ. 899 என்ற திடுக்கிடும் விலையில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

மலிவு விலையில் TWS இயர்பட்ஸ்

மலிவு விலையில் TWS இயர்பட்ஸ்

இது ஒரு TWS தயாரிப்பு, இது 12 மணிநேர தாராளமாக பிளே செய்யும் பேட்டரி நேரத்தையும் கொண்டுள்ளது. இது புளூடூத் 5.0 இணைப்பு, இன்ஸ்டா இணைப்பு, IPX4 மதிப்பீடு மற்றும் பிற அம்சங்களுடன் வருகிறது. இந்த சாதனம் இப்பொழுது அமேசான் இந்தியா மூலம் வாங்குவதற்கு கிடைக்கிறது.

இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த "மர்மம்" அவிழ்க்கப்பட்டது.!

டைனமோ புரோ மற்றும் டைனமோ லைட் பவர் பேங்க்

டைனமோ புரோ மற்றும் டைனமோ லைட் பவர் பேங்க்

pTron ஸ்மார்ட் எசென்ஷியல்ஸ் கலெக்ஷனில் அடுத்து இருப்பது பவர்பேங்கின் டைனமோ சீரிஸ் தான், இந்த சீரிஸில் டைனமோ புரோ மற்றும் டைனமோ லைட் ஆகிய இரண்டு மாடல்கள் உள்ளது. இது 18W கொண்ட அதிவேக ஹை-ஸ்பீட் சார்ஜிங் மூலம் டைனமோ புரோ 10000mAh சக்தியை PD அவுட்புட் மூலம் வழங்குகிறது, ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்ய இது அனுமதிக்கிறது. இதன் லைட் வெர்ஷன் பதிப்பாக டைனமோ லைட் பவர் பேங்க் இருக்கிறது. இது 10W கொண்ட ஹை-ஸ்பீட் சார்ஜிங்கை வழங்குகிறது.

ரூ. 549 விலையில் தரமான பவர் பேங்க் வாங்கலாமா?

ரூ. 549 விலையில் தரமான பவர் பேங்க் வாங்கலாமா?

இந்த இரண்டு சாதனங்களும் BIS சான்றிதழ் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஓவர் சார்ஜிங் பாதுகாப்பு, ஓவர் டிஸ்சார்ஜ், ஓவர் கரண்ட், ஓவர் வோல்ட்டேஜ் ஷார்ட் சர்க்யூட் மற்றும் ரிவர்ஸ் இணைப்பு ஆகியவற்றிற்கு எதிராக பல பாதுகாப்பு அம்சத்தை வழங்குகின்றது. டைனமோ புரோ மற்றும் டைனமோ லைட் இரண்டும் அமேசான் இந்தியாவில் முறையே ரூ. 599 மற்றும் ரூ. 549 என்ற சிறப்பு வெளியீட்டு விலையில் வாங்குவதற்கு கிடைக்கின்றது.

என் பொண்டாட்டிக்கு 'இது' தெரிஞ்சா சோழி முடிஞ்சிரும்.. ப்ளீஸ் சொல்லாதீங்க என்று கெஞ்சிய கணவர்.. ஏன் தெரியுமா?என் பொண்டாட்டிக்கு 'இது' தெரிஞ்சா சோழி முடிஞ்சிரும்.. ப்ளீஸ் சொல்லாதீங்க என்று கெஞ்சிய கணவர்.. ஏன் தெரியுமா?

சோலெரோ டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் கேபிள்

சோலெரோ டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் கேபிள்

புதிய சார்ஜிங் தீர்வு வரம்பில் சோலெரோ டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் கேபிள் மற்றும் வோல்டா பிளஸ் ஸ்மார்ட் சார்ஜர் ஆகியவற்றை நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்தியாவின் வால் சாக்கெட்டுகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த சாதனம் BIS சான்றளிக்கப்பட்ட சாதனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இவை பயண மற்றும் வேலை சூழல்களுக்கு மிகவும் சிறந்தவை என்று நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. இவை அனைத்தும் இப்பொழுது அமேசான் இந்தியா வழியாக விற்பனைக்கு கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
pTron Made in India Collection is available for purchase on Amazon India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X