Home
Gadgets

ரூ. 1299 என்ற மலிவு விலையில் வயர்லெஸ் சார்ஜிங் உடன் புதிய pTron Bassbuds இயர்பட்ஸ் அறிமுகம்..

pTron நிறுவனம் இன்று புதிய pTron பாஸ்பட்ஸ் சீரிஸ் இயர்பட்ஸ் சாதனங்களை நம்ப முடியாத மலிவு விலையில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்துடன் அறிமுகம் செய்து அசதியுள்ளது. pTron பாஸ்பட்ஸ் விஸ்டா (Bassbuds Vista) மற்றும் pTron பாஸ்பட்ஸ் ப்ரோ (Bassbuds Pro) என்ற இரண்டு மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் முழு விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாஸ்பட்ஸ் விஸ்டா மற்றும் பாஸ்பட்ஸ் ப்ரோ விலை

பாஸ்பட்ஸ் விஸ்டா மற்றும் பாஸ்பட்ஸ் ப்ரோ விலை

பாஸ்பட்ஸ் விஸ்டா இயர்பட்ஸ் மாடல் வெறும் ரூ. 1,299 என்ற மலிவு விலையில் பிளாக், க்ரெய், ப்ளூ மற்றும் வைட் ஆகிய நான்கு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பாஸ்பட்ஸ் ப்ரோ மாடல் இயர்பட்ஸ் வெறும் ரூ. 1,199 என்ற விலையில் வயர்லெஸ் சார்ஜிங் இல்லாமல் ப்ளூ, ரெட், க்ரீன் மற்றும் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த இரண்டு சாதனங்களும் இன்று முதல் விற்பனைக்கு வாங்குவதற்குக் கிடைக்கிறது.

மலிவு விலையில் வயர்லெஸ் சார்ஜிங் உடன் பாஸ்பட்ஸ் விஸ்டா

மலிவு விலையில் வயர்லெஸ் சார்ஜிங் உடன் பாஸ்பட்ஸ் விஸ்டா

பாஸ்பட்ஸ் விஸ்டாவில் 5W குய் வயர்லெஸ் சார்ஜிங் இடம்பெற்றுள்ளது, அதே நேரத்தில் இவை வயர் வழியாக சார்ஜ் செய்யும் வழக்கமான சார்ஜிங் அம்சத்தையும் கொண்டுள்ளது என்று PTron நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் அமீன் குவாஜாவின் கூறியுள்ளார். இந்தியச் சந்தையில், இப்படி ஒரு மலிவு விலையில் வயர்லெஸ் சார்ஜிங் உடன் கிடைக்கும் TWS இயர்பட்ஸ் சாதனமாக இந்த பாஸ்பட்ஸ் விஸ்டா மட்டுமே இருக்கிறது.

Bassbuds Vista சிறப்பம்சம்

Bassbuds Vista சிறப்பம்சம்

Bassbuds Vista சாதனத்தில் 10mm டைனமிக் டிரைவர், BT5.1 சிப்செட் உடன் கூடிய மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவுடன் IPX4 சான்றிதழ் பெற்ற இயர்பட்ஸ் சாதனமாகும். இந்த பாஸ்பட்ஸ் விஸ்டாவின் இயர்பட்ஸ் 40mAh பேட்டரியுடன் 4 மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இதன் சார்ஜிங் கேஸ் 400mAh பேட்டரியுடன் 8 மணிநேர பேக்அப் சார்ஜிங் அனுபவத்தை வழங்குகிறது.

Bassbuds Pro சிறப்பம்சம்

Bassbuds Pro சிறப்பம்சம்

Bassbuds Pro BT5.1 சிப்செட் உடன் கூடிய மைக்ரோபோன், ஸ்மார்ட் வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவுடன் IPX4 சான்றிதழ் பெற்ற இயர்பட்ஸ் சாதனமாகும். இந்த இயர்பட்ஸ் டச் பேனல் இயர்பட்ஸ் உடன் ஸ்மார்ட் டிஜிட்டல் டிஸ்பிளே கேஸ் உடன் வருகிறது. இது 40mAh இயர்பட்ஸ் பேட்டரியுடன், 300mAh சார்ஜிங் கேஸ் பேட்டரியுடன் மொத்தமாக 12 மணிநேர பிளேபேக் அனுபவத்தை வழங்குகிறது. மலிவு விலையில் பேஸ்டாக TWS இயர்பட்ஸ் வாங்க நினைப்பவர்கள் pTron நிறுவனத்தின் இந்த சாதனங்களை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
pTron launches Bassbuds Vista and Bassbuds Pro At Cheap Price with Wireless Charging : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X