Home
Gadgets

சவுண்ட் சும்மா கிழி.. பட்ஜெட்டில் களமிறங்கிய pTron இயர்பட்ஸ்.. Bass வேற மாதிரி இருக்கும்!

இந்தியாவில் பிட்ரான் (pTron) நிறுவனத்தின் புதிய பிட்ரான் பேஸ்பட்ஸ் நியோ இயர்பட்ஸ் (pTron Bassbuds Neo Earbuds) அறிமுகமாகியிருக்கிறது. பட்ஜெட் விலையில், ஃபாஸ்ட் சார்ஜிங், டச் கன்ட்ரோல், ட்ரூ டாக் இஎன்சி என பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் மற்ற அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்கள் இதோ.

இசைப்பிரியர்களுக்கு ட்ரீட் வைத்தது போல மார்க்கெட்டில் களமிறங்கியிருக்கிறது, பிட்ரான் பேஸ்பட்ஸ் நியோ இயர்பட்ஸ். பொதுவாக பலருக்கு அதிர வைக்கும் Bass சவுண்ட் மீது அதிக விருப்பம் இருக்கும். அவர்கள் தேர்வு செய்து கேட்கும் பாடல்கள் கூட Bass சவுண்ட் நிறைந்ததாகவே இருக்கும். இவர்கள் மார்க்கெட்டில் வரும் பல இயர்பட்ஸ்களை வாங்கி பயன்படுத்தி, அதிருப்தி கூட அடைந்திருக்கலாம்.

Bass வேற மாதிரி இருக்கும்! பட்ஜெட்டில் களமிறங்கிய pTron இயர்பட்ஸ்!

"நமக்கு ஏத்த இயர்பட்ஸ் கிடைக்கலையே" என்று கூட நினைத்திருக்கலாம். இவர்களுக்கு நல்ல சாய்ஸாக, பிட்ரான் பேஸ்பட்ஸ் நியோ இயர்பட்ஸ் இருக்கும். இந்த இயர்பட்ஸ் Bass சவுண்ட்டுக்கென பிரத்யேகமா உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், பல முக்கிய அம்சங்களையும், புதிய தொழில்நுட்பங்களையும் கொண்டிருக்கிறது.

பிட்ரான் பேஸ்பட்ஸ் நியோ இயர்பட்ஸ் அம்சங்கள்: இந்த டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் (TWS Earbuds) ஸ்டீரியோ மற்றும் பேஸ் சவுண்ட்களுக்கென பிரத்யேகமாக 13மிமீ டைனமிக் டிரைவர்களை கொண்டுள்ளது. எச்டி வாய்ஸ் கால்களுக்காக ட்ரூடாக் இஎன்சி ( TruTalk ENC) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாடல்களையும், கால்களையும் தெளிவாக துல்லியமாகவும், தெளிவாகவும் கேட்க முடியும். அதோபோல என்விரோன்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (environmental noise cancellation) தொழில்நுட்பமும் உள்ளது.

5.3 ப்ளூடூத் இணைப்புத் திறன் கொண்டிருக்கிறது. டைப்-சி போர்ட்டுடன் ஃபாஸ்ட் சார்ஜிங் (Type-C / Fast Charging ) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் கேஸ் உடன் பயன்டுத்தினால், தொடர்ந்து 35 மணி நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே சார்ஜ் செய்தால், 2.5 மணி நேரம் பயன்படுத்தலாம். இரண்டு இயர்பட்ஸ்களிலும் டச் சென்சிடிவ் சென்சார்கள் (Touch-Sensitive Sensors) கொடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, லோவ் கேமிங் லேட்டன்சி (Low-latency) மோட் மற்றும் மீயூசிக் மோட் கொடுக்கப்பட்டுள்ளது. லோவ் லேட்டன்சி என்பது, நீங்கள் ப்ளூடூத் (Bluetooth) வசதி கொண்ட இயர்பட்ஸ் (Earbuds) பயன்படுத்தி திரைப்படங்களை பார்க்கும் போதும், கேம்களை விளையாடும் போதும் மில்லி செகண்ட் தாமதமாக உங்களுக்கு ஆடியோ கேட்கும். பலருக்கு ஆடியோவும் வீடியோவும் சின்ங் ஆகாமல் இருக்கும்.

இதைத் தவிர்க்கவே லேட்டஸ்டாக வரும் இயர்பட்ஸ்களில் கேமிங் லேட்டன்சி மோட் வருகிறது. இதன் மூலம் ஆடியோ, வீடியோ சின்ங் மிக துல்லியமாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் பிட்ரான் பேஸ்பட்ஸ் நியோ இயர்பட்ஸில் இருக்கிறது. அதேபோல இன்ஸ்டன்ட் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Instant voice assistant), IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதியும் உள்ளது.

இதன் விலை ரூ.1,499 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இப்போது அமேசானில் ரூ.899-க்கு கிடைக்கிறது. இந்த விலை சீக்கிரம் ஏற வாய்ப்புள்ளது. பிளாக் (Black), ப்ளூ (Blue), கிரே (Grey) கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
pTron Bassbuds Neo ENC TWS Earbuds launched here is full details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X