களமிறங்கும் சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேஷன் 5.! சூப்பர் கேமிங் மோடு ஆன்.!
பிளேஸ்டேஷன் 5 மாடலை நோக்கிக் காத்திருந்த அணைத்து பிளேஸ்டேஷன் பிரியர்களுக்கும் சோனி நிறுவனம் தற்பொழுது ஒரு இன்ப செய்தியை வழங்கியுள்ளது.
பிளேஸ்டேஷன் 5 மாடலை நோக்கிக் காத்திருந்த அணைத்து பிளேஸ்டேஷன் பிரியர்களுக்கும் சோனி நிறுவனம் தற்பொழுது ஒரு இன்ப செய்தியை வழங்கியுள்ளது. சோனி நிறுவனத்தின் அண்மைய அறிவிப்பின் படி தனது புது பிளேஸ்டேஷன் மாடலை மிக விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

பிளேஸ்டேஷன் 4 மாடலின் வெற்றி
சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேஷன் 4 மாடலின் வெற்றியைத் தொடர்ந்து, பிளேஸ்டேஷன் 5 மாடலின் திட்டங்களில் தீவிரம் காட்டி வந்த சோனி நிறுவனம் தற்பொழுது அதன் அறிமுகம் தேதியை விரைவில் அறிவிக்குமென்று தெரிவித்துள்ளது.

கேமிங் சந்தை
கேமிங் சந்தையில் களைகட்டி பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் முன்னணி கேம்களான போர்ட்நைட், கால் ஆப் டூட்டி, ஜி.தி.ஏ ஒன்லைன் மற்றும் பல ஒன்லைன் கேம்களின் கிளாசிக் மல்டிபிளெயர் சேவைகளைச் சோனி நிறுவனத்தின் வழி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பிளேஸ்டேஷன் 5
பல புதிய கேமிங் தொழில்நுட்ப சாதனங்களுடன் கேமிங் கலாச்சாரம் முன்னேறி வரும் இந்நிலையில், தனது அடுத்த பிளேஸ்டேஷன் 5 மாடலில் இன்னும் சில புதிய மாற்றங்களை மேற்கொள்ளப் போவதாகச் சோனி அறிவித்துள்ளது. சோனி பயனர்களின் அனுபவத்தை இன்னும் சிறப்பிக்கும் முயற்சியில் மும்முரமாகச் சோனி இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

2020 ஆண்டில் விற்பனை
பிளேஸ்டேஷன் 5 மாடல் வரும் 2020 ஆண்டின் துவக்கத்தில் விற்பனைக்குக் களமிறக்கப்படும் என்று சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த ஆண்டின் இறுதிக்குள் பிளேஸ்டேஷன் 5 மாடலின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications