இது வேற ரகம் ப்ரோ.. AMOLED டிஸ்பிளே.. GPS இன்-பில்ட்.. 300mAh பேட்டரி.. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?
பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு நிகரான பீச்சர்களுடன் அதைவிட கம்மியான பட்ஜெட்டில் லாவா நிறுவனத்தின் ப்ரோவாட்ச் எக்ஸ்ட்ரீம் (ProWatch Xtreme) களமிறங்கி இருக்கிறது. அமோலெட் டிஸ்பிளே தொடங்கி, டூயல் கோர் சிப்செட், 300mAh பேட்டரி, IP68 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட், அலுமியம் டயல் போன்ற ஒட்டுமொத்தமாகவே பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த ப்ரோவாட்ச் எக்ஸ்ட்ரீம் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டிசைனை பார்க்கையில் பிரீமியம் அலுமினியம் டயல் மற்றும் மெட்டல் அலாய் ஸ்ட்ராப் (Metal Alloy Strap) கிடைக்கிறது. இதுபோக சிலிகான் ஸ்ட்ராப் (Silicon Strap) மற்றும் நைலான் ஸ்ட்ராப் (Nylon Strap) கிடைக்கிறது. மேலும், டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் கொடுக்கிறது. அதேபோல, IP68 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.

ரவுண்ட் டயல் டிசைனில் டூயல் கன்ட்ரோல் பட்டன்கள் கிடைக்கின்றன. ரோட்டேட்டிங் கிரவுண்ட் கிடைக்கவில்லை. ஆகவே, ஒட்டுமொத்தமாகவே டிசைனில் இந்த ப்ரோவாட்ச் எக்ஸ்ட்ரீம் மாடலானது பிரீமியம் காட்டி இருக்கிறது. இப்போது, டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி, கனெக்டிவிட்டி போன்ற மற்ற பீச்சர்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ப்ரோவாட்ச் எக்ஸ்ட்ரீம் அம்சங்கள் (ProWatch Xtreme Specifications): இந்த ப்ரோவாட்ச் மாடலில் 1.43 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஏஓடி (AOD) சப்போர்ட் கொடுக்கிறது. 326 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறு. ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டி மற்றும் ப்ளூடூத் காலிங் வருகிறது.
அதேபோல குயிக் ரிப்ளை சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக இன்-பில்ட் ஜிபிஎஸ் (In-built GPS) கனெக்டிவிட்டி வருகிறது. 128MHz டூயல் கோர் அவுட்புட் கொண்ட ஏடிஎஸ்3085சி (ATS3085C) சிப்செட், எச்எக்ஸ்3690 பிபிஜி சென்சார் (HX3690 PPG Sensor) கிடைக்கிறது. ஸ்லீப் டிராக்கிங், ஹார்ட் ரேட் மானிட்டரிங், ஸ்டெப்ஸ் கவுண்ட் மற்றும் ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டரிங் உள்ளது.
இதுபோக எஸ்பிஓ2 மானிட்டர் போன்ற ஹெல்த் டிராக்கிங் சப்போர்ட் உள்ளது. முக்கியமாக எக்ஸ்ட்ரீம் ஃபிட்னஸ் கம்பானியன் ஃபிட்360 வருகிறது. இதன் மூலம் பாடி எனர்ஜி மானிட்டரிங் (Body Enery Monitoring), விஓ2 மேக்ஸ் டிராக்கிங் (VO2 MAX Tracking), ஹார்ட் ரேட் வேரியபிலிட்டி (Heart Rate Variability), போஸ்ட் வொர்க்அவுட் ரிக்கவரி அனாலிசிஸ் (Post Workout Recovery Analysis) வருகிறது.
110+ ஸ்போர்ட்ஸ் மோட்கள், 6 ரன்னிங் கோர்ஸ் போன்ற ஆக்டிவிட்கள் கிடைக்கின்றன. இன்-பில்ட் பாரோமீட்டர், அல்டிமீட்டர், காம்பஸ் கிடைக்கிறது. ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், ஃபைண்ட் மை வாட்ச் மற்றும் போன், கூகுள் ஃபிட் (Google Fit) போன்றவை வருகின்றன. ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ், கெஸ்ச்சர் கன்ட்ரோல், ரைஸ் டூ வேக் சப்போர்ட்கள் இருக்கின்றன.
110+ கஸ்டமைசபிள் வாட்ச்பேஸ்கள் கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு மட்டுமல்லாமல், ஐஓஎஸ் ஆப் சப்போர்ட் கொடுக்கிறது. இந்த ப்ரோவாட்ச் எக்ஸ்ட்ரீம் மாடலுக்கு 2 வருட வாரண்டி கிடைக்கிறது. சிலிகான் ஸ்ட்ராப் கொண்ட மாடலின் விலை ரூ. 4,499ஆக இருக்கிறது. அதேபோல நைலான் ஸ்ட்ராப் கொண்ட மாடலின் விலை ரூ.4,699ஆக இருக்கிறது.
மெட்டல் ஸ்ட்ராப் கொண்ட மாடலின் விலை ரூ.4,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பீச்சர்களுக்கு ஏற்பவே விலை நிர்ணயம் இருக்கிறது. பிரீமியம் பீச்சர்களை மீடியம் பட்ஜெட்டில் எதிர்பார்த்தால், இது பக்கா ஆப்ஷனாகும்.


Click it and Unblock the Notifications








