கனவுல வராத ஆஃபர்.. வெறும் ரூ.16 போதும்.. AMOLED ஸ்மார்ட்வாட்ச்.. 50 ஆர்டர்களுக்கு மட்டும்.. எப்படி வாங்குவது?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான ஆஃபரில் அமோலெட் டிஸ்பிளே, இன்-பில்ட் ஜிபிஎஸ், 300mAh பேட்டரி, ஹெல்த் டிராக்கிங், IP68 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களை கொண்ட ப்ரோவாட்ச் எக்ஸ்ட்ரீம் (Prowatch Xtreme) கிடைக்க இருக்கிறது. அறிமுக சலுகையில் வெறும் ரூ.16 விலைக்கு கிடைக்க இருக்கிறது. ஆனால், முதல் 50 கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த விலைக்கு கிடைக்கும். அதேபோல இந்த விலைக்கு வாங்க எப்படி ஆர்டர் செய்ய வேண்டும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
அமேசான் தளத்தில் இன்று (ஜூன் 16) மதியம் 12 மணிக்கு இந்த ப்ரோவாட்ச் எக்ஸ்ட்ரீம் மாடலின் விற்பனை தொடங்குகிறது. இந்த விற்பனை தொடங்கியவுடன் முதலில் ஆர்டர் செய்யும் 50 கஸ்டமர்களுக்கு வெறும் ரூ.16 விலைக்கு இந்த ஸ்மார்ட்வாட்ச் கொடுக்கப்படும். இந்த விலைக்கு வாங்க XTREME16 என்னும் கோட்-ஐ பயன்படுத்தி ஆர்டர் செய்ய வேண்டும்.

இப்படி செய்தால், மட்டுமே ரூ.16 விலைக்கு வாங்கி கொள்ள முடியும். 50 கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைப்பதால், சில நொடிகளில் ஆர்டர் தீர்ந்துவிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே, உங்களது லக்கை இதில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதுவொரு பிரீமியம் மாடலாக இருப்பதால், மார்கெட் விலையும் அதற்கு ஏற்ப இருக்கிறது. விலை எப்படி?
ப்ரோவாட்ச் எக்ஸ்ட்ரீம் மாடலின் சிலிகான் ஸ்ட்ராப் (Silicon Strap) வேரியண்ட்டின் விலை ரூ. 4,499ஆகவும், நைலான் ஸ்ட்ராப் (Nylon Strap) வேரியண்ட்டின் விலை ரூ.4,699ஆகவும் இருக்கிறது. அதேபோல மெட்டல் ஸ்ட்ராப் (Metal Strap) வேரியண்ட்டின் விலை ரூ.4,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ப்ரோவாட்ச் எக்ஸ்ட்ரீம் அம்சங்கள் (ProWatch Xtreme Specifications): பிரீமியம் மெட்டாலிக் டிசைனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு கொண்ட 1.43 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளேவில் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 326 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது.

ஆகவே, அவுட்டோர் அவுட்புட் பக்காவாக இருக்கும். இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 300mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி மூலம் 10 நாட்கள் வரையில் பேக்கப் பெற்று கொள்ளலாம். ப்ளூடூத் காலிங் மோடில் 5 மணி நேரங்களுக்கும், ஜிபிஎஸ் மோடில் 17 மணி நேரங்களுக்கும் பேக்கப் கிடைக்கும். ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), இன்-பில்ட் ஜிபிஎஸ் (In-built GPS) கிடைக்கிறது.
மோஷன் டிராக்கிங் கொடுக்க 6-ஆக்சிஸ் ஜி-சென்சார் (6-Axis G-Sensor) வருகிறது. பிபிஜி ஹார்ட் சென்சார் (PPG Herat Sensor) கிடைக்கிறது. இந்த சென்சார்கள் மூலம் ஹெல்த் டிராக்கிங், மானிட்டரிங் மற்றும் பாடி ஆக்டிவிட்டி டிராக்கிங் கிடைக்கிறது. ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர், ஸ்லீப் டிராக்கிங் போன்ற முக்கிய ஹெல்த் பீச்சர்கள் கிடைக்கின்றன.
ஏடிஎஸ்3085சி (ATS3085C) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் சப்போர்ட் கொடுக்கிறது. ஆட்டோமேட்டிக் ஆக்டிவிட்டி டிடெக்சன் சப்போர்ட் கொண்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்பட 110+ மோட்கள் கிடைக்கின்றன. வழக்கமாக கிடைக்கும் கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் இருக்கிறது. இந்த ப்ரோவாட்ச் எக்ஸ்ட்ரீம் மாடலுக்கு IP68 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.
2 வருட வாரண்டியில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், கூகுள் பிட், குயிக் ரிப்ளை, ஃபைண்ட் மை போன், ஃபைண்ட் மை வாட்ச், கேமரா கன்ட்ரோல் போன்ற ஸ்மார்ட் பீச்சர்களை கொடுக்கிறது. ப்ரோவாட்ச் மாடல்களானது லாவா நிறுவனத்தின் சப்-பிராண்ட்டாகும். ஆகவே, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆகவே, பிரீமியம் பீச்சர்களை பட்ஜெட்டில் கொடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications







