Home
Gadgets

புரட்டிப்போடும் பட்ஜெட்.. AMOLED டிஸ்பிளே.. GPS கனெக்டிவிட்டி.. PPG சென்சார்.. 300mAh பேட்டரி.. எந்த மாடல்?

சீன நிறுவனங்களை திக்குமுக்காட வைக்கும்படி லாவா நிறுவனத்தின் ப்ரோவாட்ச் எக்ஸ் (Prowatch X) ஸ்மார்வாட்ச் இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. அமோலெட் டிஸ்பிளே, ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி, பிபிஜி ஹார்ட் சென்சார், 300mAh பேட்டரி, பாடி எனர்ஜி மானிட்டர் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ப்ரோவாட்ச் எக்ஸ் மாடலின் விலை, விற்பனை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ப்ரோவாட்ச் எக்ஸ் அம்சங்கள் (Prowatch X Specifications): இந்த ப்ரோவாட்ச் மாடலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு கொண்ட 1.43 இன்ச் (465 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளேவில் (Always-on Display) 30Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

புரட்டிப்போடும் பட்ஜெட்.. AMOLED டிஸ்பிளே.. GPS கனெக்டிவிட்டி.. மாடல்?

ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) மற்றும் குயிக் ரிப்ளைஸ் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த மாடலில் 300mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி மூலம் 10 நாட்கள் வரையில் பேக் பெற்று கொள்ளலாம். ப்ளூடூத் காலிங் மோடில் (Bluetooth Calling Mode) 5 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும்.

அதேபோல ஜிபிஎஸ் மோடில் 17 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். ஆண்ட்ராய்டு ஓஎஸ் மற்றும் டூயல்-கோர் ஏடிடி3085சி (Dual-core AD3085C) சிப்செட் கிடைக்கறது. பிபிஜி ஹார்ட் சென்சார் (PPG Heart Sensor) மற்றும் 6-ஆக்சிஸ் ஜி-சென்சார் (6-Axis G-Sensor) கிடைக்கிறது. ஆகவே, ஹார்ட் ரேட், எஸ்பிஓ2 மற்றும் மோஷன் டிராக்கிங் சப்போர்ட் கிடைக்கிறது.

ரன்னிங், ஜாக்கிங், ஸ்விம்மிங், வாக்கிங் போன்ற மோஷன்களை டிராக் செய்து கொள்ளலாம். இதற்காக 110+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) கிடைக்கின்றன. இதுபோக ஃபிட்னஸ் சப்போர்ட் கொடுக்க 6 ரன்னிங் கோர்ஸ்கள் இருக்கின்றன. அதேபோல இன்டலிஜென்ட் எக்சர்சைஸ் ரீககனைசேஷன் (Intelligent Exercise Recognition) சப்போர்ட் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, மோட் செட் செய்யாமலேயே நீங்கள் ஆக்டிவிட்டிகளை செய்யும்போது, டேட்டாக்கள் சேகரிக்கப்படும். இதுபோக ஏரோபிக் டிரெய்னிங் எபெக்ட் (Aerobic training Effect) மற்றும் பாடி எனர்ஜி மானிட்டர் (Body Energy Monitor) சப்போர்ட் கிடைக்கிறது. ஹெல்த் டிராக்கிங்கை பார்க்கையில் ஹார்ட் ரேட் வேரியபிலிட்டி (Heart Rate Variability) மற்றும் எஸ்பிஓ3 மானிட்டரிங் (SpO2 Monitoring) கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல், போஸ்ட்-வொர்க்அவுட் ரிகவரி அனாலிசிஸ் சப்போர்ட் உள்ளது. மேலும், வழக்கமான ஸ்மார்ட் ஸ்லீப் டிராக்கிங் (Smart Sleep Tracking) மற்றும் ப்ரீதிங் எக்சர்சைஸ் (Breathing Exercises) கிடைக்கிறது. அவுட்டோர் ஆக்டிவிட்டிக்காக இன்-பில்ட் பாரோமீட்டர் (In-built Barometer), அல்டிமீட்டர் (Altimeter) மற்றும் காம்பஸ் (Compass) கிடைக்கிறது.

ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் (Air Quality Index) வருகிறது. ஆகவே, ஏர் குவாலிட்டி தெரிந்து கொள்ளாம். IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இதர பீச்சர்களை பார்க்கையில், ஃபைண்ட் மை போன் (Find My Phone) மற்றும் ஃபைண்ட் மை வாட்ச் (Find My Watch) கிடைக்கிறது. 110+ வாட்ச் பேஸ்கள், கெஸ்ச்சர் கன்ட்ரோல் (Gesture Controls) உள்ளது.

இந்த ப்ரோவாட்ச் எக்ஸ் மாடலின் விலை ரூ.4,499ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.3,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு வருகிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். முதலில் ஆர்டர் செய்யும் 500 கஸ்டமர்களுக்கு ரூ.2,999 மதிப்பிலான ப்ரோபட்ஸ் டி24 இயர்பட்ஸ் இலவசமாக கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ProWatch X With AMOLED Display GPS Sale From Flipkart Under Rs 4000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X