Home
Gadgets

கொஞ்சம் லேட்டுதான்.. ஆனால், SALE மிரளுது.. கார்னிங் கொரில்லா கிளாஸ் டிஸ்பிளே.. PPG சென்சார்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களை மூக்கில் விரல் வைக்க செய்யும்படியான பீச்சர்களுடன் ப்ரோவாட்ச் வி1 (ProWatch V1) வெளியாகியது. ஆனால், ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டும் ரீடெயில் ஸ்டோர்களில் மட்டுமே கிடைத்தது. ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரவில்லை. இப்போது, அறிமுக சலுகையுடன் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனை தொடங்கி இருக்கிறது.

இந்த ப்ரோவாட்ச் வி1 மாடலானது, லாவா நிறுவனத்தின் சப்-பிராண்டாகும். இதனால், சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு நிகரான பீச்சர்களை எதிர்பார்க்கலாம். முதலில் விலை விவரங்களை தெரிந்து கொள்வோம். ஸ்ட்ராப் வேரியண்ட்களுக்கு ஏற்ப விலையில் மாற்றம் இருக்கிறது. சிலிகான் ஸ்ட்ராப் வேரியண்ட்டில் நான்கு கலர்கள் இருக்கின்றன.

கொஞ்சம் லேட்டுதான்.. ஆனால், SALE மிரளுது.. கார்னிங் கொரில்லா கிளாஸ்!

ஆகவே, பிளாக் நெபுலா (Black Nebula), பீச்சி ஹிகாரி (Peachy Hikari), மின்ட் சினோபி (Mint Shinobi) மற்றும் ப்ளூஸ் ரோனின் (Bluish Ronin) ஆகிய கலர்கள் வருகின்றன. இதில் பிளாக் நெபுலா கலரில் சிலிகான் மட்டுமல்லாமல், பிளாக் மெட்டல் ஸ்ட்ராப் கிடைக்கிறது. அதேபோல பீச்சி ஹிகாரி கலரிலும் சிலிகான் மட்டுமல்லாமல், கோல்டு மெட்டல் ஸ்ட்ராப் கிடைக்கிறது.

சிலிகான் ஸ்ட்ராப் மட்டுமே கொண்ட வேரியண்ட்களின் விலை ரூ.2,399ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.1,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. அதேபோல சிலிகான் + கோல்டு மெட்டல் ஸ்ட்ராப் கொண்ட பீச்சி ஹிகாரி மாடலின் விலை ரூ.2,299ஆக இருக்கிறது. சிலிகான் + பிளாக் மெட்டல் ஸ்ட்ராப் கொண்ட பிளாக் நெபுலா மாடலின் விலை ரூ.2,399ஆக இருக்கிறது.

இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ப்ரோவாட்ச் வி1 மாடலின் டிஸ்பிளே பீச்சர்கள் பிரீமியமாக இருக்கிறது. ஆகவே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு கொண்ட 1.85 இன்ச் (390 × 450 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பெற்று கொள்ளலாம்.

கொஞ்சம் லேட்டுதான்.. ஆனால், SALE மிரளுது.. கார்னிங் கொரில்லா கிளாஸ்!

இதுபோக 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஆகவே, அவுட்டோர் அவுட்புட் பிரீமியமாக எதிர்பார்க்கலாம். கன்ட்ரோல்களுக்கு சைடு-பட்டன் (Side Button) மற்றும் ரோட்டேடிங் கிரவுண் (Rotating Crown) கிடைக்கிறது. இந்த மாடல் ஆக்டகோனல் (Octagonal) டிசைன் கொடுக்கிறது. கர்வ்ட் எட்ஜ் கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மற்றும் பாடி எதிர்பார்க்கலாம்.

ரன்னிங், ஜாக்கிங், சைக்கிளிங், வாக்கிங் போன்ற 110+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) கிடைக்கிறது. அதேபோல 100+ வாட்ச் பேஸ்கள் (Watch Faces) கிடைக்கின்றன. பட்ஜெட்டைவிட கூடுதலாக ஆக்டிவிட்டி டிராக்கர்கள் மற்றும் ஹெல்த் மானிட்டர்களை இந்த ப்ரோவாட்ச் வி1 மாடலானது கொடுக்கிறது. ஆகவே, வழக்கமான ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor) உள்ளது.

அதேபோல பிளட் ஆக்ஸிஜன் லெவலுக்காக எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) கிடைக்கிறது. இதற்காக பிபிஜி சென்சார் (PPG Sensor) பேக் செய்துள்ளது. டிராக்கர்களை பொறுத்தவரையில், இந்த ப்ரோவாட்ச் வி1 மாடலில் ஸ்லீப் டிராக்கர் (Sleep Tracker) கிடைக்கிறது. அதேபோல ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கர் (Stress Level Tracker) கூடுதலாக கிடைக்கிறது.

Take a Poll

பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்க பிரத்யேகமாக ரியல்டெக் 8773 எஸ்ஓசி (Realtek 8773 SoC) சிப்செட் கிடைக்கிறது. கனெக்டிவிட்டியை பார்க்கையில், ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) மற்றும் அசிஸ்டெட் ஜிபிஎஸ் (Assisted GPS) உள்ளது. ஆகவே, ப்ளூடூத் காலிங் செய்து கொள்ளலாம். IP68 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் உள்ளது. 270mAh பேட்டரி, 2 வருட வாரண்டி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ProWatch V1 With IP68 Water Resistance Goes on Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X