Home
Gadgets

LAVA பின்னிட்டாரு.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 270mAh பேட்டரி.. IP68 ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?

சீன நிறுவனங்களுக்கு நிகரான பீச்சர்களுடன் பட்டையை கிளப்பும் பட்ஜெட்டில் லாவா (LAVA) நிறுவனத்தின் ப்ரோவாட்ச் வி1 (ProWatch V1) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 270mAh பேட்டரி, வாய்ஸ் அசிஸ்டன்ட், IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், டிசைனில் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த லாவா ப்ரோவாட்ச் வி1 மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஸ்மார்ட்போன்களை போலவே ஸ்மார்ட்வாட்ச் மாடல்களிலும் சீன நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. சாம்சங், ஆப்பிள் போன்ற பிரீமியம் மாடல்கள் அல்லாமல், பட்ஜெட்டில் கிடைக்கும் மாடல்களில் சீன நிறுவனங்களுக்கு இடையே மட்டும் போட்டி இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவின் லாவா நிறுவனமும் குதித்திருக்கிறது.

LAVA பின்னிட்டாரு.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 270mAh பேட்டரி.. மாடல்?

டிஸ்பிளே, சிப்செட், டிசைன் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் பிரீமியம் பீல் கொடுக்கும்படி ப்ரோவாட்ச் வி1 ப்ளூடூத் காலிங் ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. பெரும்பாலான ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் கூடுதல் ஸ்ட்ராப் வேரிண்ட்கள் என்று கஸ்டமர்களுக்கு இந்திய வேரியண்ட் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

ப்ரோவாட்ச் வி1 அம்சங்கள் (ProWatch V1 Specifications): இந்த லாவா மாடலில் 1.85 இன்ச் (390 × 450 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளவில் ஸ்மார்ட்போனுக்கு நிகராக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெச்கன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

இந்த மாடலில் ரோட்டேஷ்னல் கிரவுண் மற்றும் சைடு-பட்டன் கன்ட்ரோல் கிடைக்கிறது. கனெக்டிவிட்டையை பார்க்கையில் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் கொண்ட ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) மற்றும் அசிஸ்டெட் ஜிபிஎஸ் (Assisted GPS) கிடைக்கிறது. 2.5டி ஜிபியு (2.5D GPU) அனிமேஷன் என்ஜின் மற்றும் ரியல்டெக் 8773 எஸ்ஓசி (Realtek 8773 SoC) சிப்செட் இருக்கிறது.

பிரத்யேக சிப்செட் வருவதால், பர்ஃபாமென்ஸ் லாக்-ப்ரீ அவுட்புட் கொடுக்கும்படி இருக்கும். இந்த ப்ரோவாட்ச் வி1 மாடலில் 100+ வாட்ச் பேஸ்கள் (Watch Faces) மற்றும் 110+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் கிடைக்கின்றன. 270mAh பேட்டரி வருகிறது. பிபிஜி சென்சார் (PPG Sensor) இருக்கிறது. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) இருக்கிறது.

மேலும், ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கர் (Stress Level Tracker) மற்றும் ஸ்லீப் டிராக்கர் (Sleep Tracker) ஆகியவை கிடைக்கின்றன. ப்ளூடூத் காலிங் மட்டுமல்லாமல், குயிக் ரீப்ளை சப்போர்ட் கிடைக்கிறது. இன்-பில்ட் கேமிங் சப்போர்ட் கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரோவாட்ச் வி1 மாடலில் நான்கு கலர் வேரியண்ட்கள் கிடைக்கின்றன. அதேபோல சிலிகான் மற்றும் மெட்டல் ஸ்ட்ராப் கிடைக்கிறது.

ஆகவே, பிளாக் நெபுலா (Black Nebula), ப்ளூஸ் ரோனின் (Bluish Ronin), பீச் ஹைகரி (Peachy Hikari) மற்றும் மின்ட் சினோபி (Mint Shinobi) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பீச் ஹைகரி வேரியண்ட் சிலிகான் மற்றும் ரோஸ் கோல்டு ஸ்ட்ராப் கொடுக்கிறது. இதன் விலை ரூ.2,699ஆக இருக்கிறது. அதேபோல பிளாக் நெபுலா வேரியண்ட்டிலும் சிலிகான் ஸ்ட்ராப் உள்ளது.

அதேபோல பிளாக் மெட்டல் ஸ்ட்ராப் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.2,799ஆக இருக்கிறது. இப்போதைக்கு ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கவில்லை. லாவா ரீடெயில் ஸ்டோர்களில் மட்டும் கிடைக்கிறது. ஆகவே, வரும் நாட்களில் அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) போன்ற ஆன்லைன் ஸ்டோர்களிலும் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ProWatch V1 With 270mAh Battery Bluetooth Calling Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X