முகத்துக்கு மேக்அப் போட இன்ங்ஜெட் பிரிண்டர்!
கடந்த வாரம் நடைபெற்ற CES நிகழ்வில் அறிமுகமான ஒரு 'மேஜிக்’ மந்திரக்கோல், உங்கள் சருமத்தின் இயற்கையான தோற்றத்தை உடனடியாக மீட்டெடுக்கிறது.(ஆப்டே ப்ரெசிசென் ஸ்கின்கேர் சிஸ்டம்) Opté Precision Skincare System என அழைக்கப்படும் இந்த கையடக்க சாதனம் முக குறைபாடுகளைக் கண்டறிந்து சரிசெய்ய அல்காரிதம் மற்றும் அச்சிடும் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புரோக்டர் & கேம்பிள் நிறுவனம்
புரோக்டர் & கேம்பிள் நிறுவனம் உருவாக்கிய இந்த தொழில்நுட்பம், இங்க்ஜெட் பிரிண்டரைப் போலவே செயல்படுகிறது. இது உங்களது சரியான தோல் தொனியுடன் பொருந்தக்கூடிய சிறு மேக்அப் துகள்களை சருமத்தில் தடவுகிறது.

10 சதவிகித பரப்பிற்கு மட்டுமே
கடந்த வாரம் லாஸ்வேகாஸில் நடைபெற்ற சிஈஎஸ் நிகழ்வில், இந்த நவீன சாதனம் நான்கு ‘பெஸ்ட் ஆஃப்' விருதுகளைப் பெற்றுள்ள நிலையில், இந்த கோடைகாலத்தில் சந்தைக்கு வரவுள்ளது.
'பெரும்பாலான பெண்களுக்கு தோலில் சுமார் 10 சதவிகித பரப்பிற்கு மட்டுமே சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால் மேக்அப் அல்லது சீரம் போன்ற பாரம்பரிய ஸ்பாட் கவரேஜ் முறைகள் துல்லியமற்ற, பரந்த பரப்பிற்கு ஏற்றவாறு ஒப்பனையை வழங்குகின்றன ' என்கிறது ப்ராக்டர் & கேம்பிள்.

தனியுரிம தொழில்நுட்பம்
ஆப்டேயின் தனியுரிம தொழில்நுட்பம், முழுமையான சருமத்தையும் மறைக்காமல் திருத்தம் தேவைப்படும் சிறிய பகுதிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிக்க அனுமதிக்கிறது. இதன் விளைவாக மேக்அப் மற்றும் தொழில்முறை சிகிச்சைகள் அடைய முடியாத இயற்கையான, குறைபாடற்ற தோற்றத்தை பெறமுடியும்' என்கிறது அந்நிறுவனம்.

ஆப்டே மந்திரக்கோல்
இந்த ஆப்டே மந்திரக்கோல் மேம்பட்ட டிஜிட்டல் கேமரா மூலம் சருமத்தை ஸ்கேன் செய்கிறது. இது வினாடிக்கு 200 பிரேம்களைப் படம்பிடித்து, மனித கண்ணுக்குத் தெரியாத டோனல் குறைபாடுகளைக் கண்டறிய தனியுரிம வழிமுறையைப் பயன்படுத்தி ஒவ்வொரு படத்தையும் உடனடியாக பகுப்பாய்வு செய்கிறது.
இந்த சாதனத்துடன் அந்நிறுவனத்தின் Opté Precision Serum-ம் சேர்ந்து வழங்கப்படுகிறது. இது உங்கள் சருமம் சரியான தோற்றத்தை அடைய மூன்று முக்கிய மூலப்பொருளை பயன்படுத்துகிறது. இது உடனடி கவரேஜை வழங்கும் மற்றும் குறைபாடற்ற தோற்றத்தை உருவாக்கும் தாது நிறமிகள், காலப்போக்கில் ஏற்படும் வயதுபுள்ளிகளின் (Age spots) தோற்றத்தை குறைக்க நிரூபிக்கப்பட்ட ஸ்பாட்-லைட்னிங் தோல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் உங்கள் சருமம் ஈரப்பதத்தைத் தக்கவைத்து நீர்சத்துடன் இருக்க உதவும் மாய்ஸ்சரைசர்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது .

அல்காரிதம்களின் உள்ளீட்டைப் பயன்படுத்தி, கஸ்டம் தெர்மல் இன்க்ஜெட் பிரின்டர் மற்றும் கேட்ரிஜ்ட்களை பயன்படுத்தி அச்சிடும் ஆப்டே, சுற்றியுள்ள தோல் தொனியுடன் சரியான வண்ணப் பொருத்தம் இருக்கும் வரை சீரம் துளிகளை இலக்கு பகுதிகளில் தடவுகிறது.

மேலும் சருமமாற்றங்கள் உடனடியாக நடக்கும் என்று கூறப்படுகிறது. இனி மேக்அப் போட அதிக நேரம் செலவிடவேண்டியதில்லை போல!!


Click it and Unblock the Notifications