சும்மா கிழி.. ரூ.1,299 க்கு 40 மணி நேர பேக்கப்.. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்.. IPX5 ரேட்டிங்.. எந்த மாடல்?
லாவா நிறுவத்தின் ஆடியோ டிவிஷனான ப்ரோபட்ஸ் (Probuds) ஆனது மலிவான விலைக்கு இயர்பட்ஸ் மற்றும் நெக்பேண்ட்களை களமிறக்கி வருகிறது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், லோவ் லேட்டன்சி, என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற ஆடியோ பீச்சர்களை பட்ஜெட் விலையில் கொடுக்கிறது. இதில் அதிக பிளேபேக் கொண்ட மலிவு விலை நெக்பேண்ட் மாடலாக ப்ரோபட்ஸ் வேவ் 931 (Probuds Wave 931) இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்த மாடலின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
லாவா ஸ்மார்ட்போன்களை போலவே உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த ஆடியோ மாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மற்ற பிராண்ட்களில் ரூ.2,500 விலைக்கு கிடைக்கும் பீச்சர்கள் இதில் ரூ.1,500 விலைக்கு கிடைக்கின்றன. இந்த ப்ரோபட்ஸ் வேவ் 931 மாடலும் அப்படித்தான் ரூ.1,500 பட்ஜெட்டை விட மலிவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலையிலும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) மற்றும் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) மட்டுமல்லாமல், லோவ் லேட்டன்சி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் 40 மணி நேரங்களுக்கு பிளேபேக் கொடுக்கிறது. மேலும், பிரீமியம் லுக்கில் பட்ஜெட் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது.
ப்ரோபட்ஸ் வேவ் 931 அம்சங்கள் (Probuds Wave 931 Specifications): 13 எம்எம் டைனாமிக் டிரைவர்கள் கிடைக்கின்றன. இதில் மேக்னட்டிக் ஹால் ஸ்விட்ச் (Magnetic Hall Switch) கிடைக்கிறது. அதாவது, பிளே மற்றும் பாஸ் கன்ட்ரோல்கள் மேக்னட்டிக் வழியாக செய்து கொள்ளலாம். மெட்டாலிக் பினிஷிங் கொடுப்பதால், பிரீமியம் மாடலை போல பீல் கொடுக்கும்படி இருக்கிறது.
இந்த ஏஎன்சி (ANC) மற்றும் ஈஎன்சி (ENC) நாய்ஸ் கேன்சலேஷன் கிடைக்கிறது. ஆகவே, வாய்ஸ் கால்கள் மற்றும் ஆடியோ கிரிஸ்டல் கிளியராக இருக்கும். மேலும், கேமிங் பிரியர்களுக்கு லேக் ப்ரீ ஆடியோ மற்றும் வீடியோ சின்க் கொடுக்க 45 எம்எம் லோவ் லேட்டன்சி (Low Latency) கிடைக்கிறது. ப்ளூடூத் வி5.4 (Bluetooth V5.4) கனெக்டிவிட்டி கொடுக்கிறது.
ஆகவே, 10 மீட்டர்களுக்கு இந்த ப்ரோபட்ஸ் வேவ் 931 மாடலில் ரேஞ்ச் கிடைக்கும். 300mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 40 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். இது ஏஎன்சி ஆப் செய்யப்பட்டு இருக்கும் போது கிடைக்கும் பிளேபேக் நேரமாகும். ஏஎன்சி ஆன் செய்யப்பட்டு இருந்தால், 30 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம்.
இந்த ப்ரோபட்ஸ் வேவ் 931 மாடலுக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், 10 மணி நேரங்களுக்கும் மேலாக பிளேபேக் பெற்று கொள்ளலாம். இதுபோக ஃபுல் சார்ஜ் செய்ய 60 மணி நேரங்கள் பிடிக்கும். ஆகவே, இந்த மலிவான பட்ஜெட்டில் அதிக பிளேபேக் மட்டுமல்லாமல், ஃபாஸ்ட சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்படுகிறது.
மேலும், வழக்கமாக கிடைக்கும் டூயல் டிவைஸ் பேரிங் (Dual Device Pairing) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், IPX5 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் இந்த ப்ரோபட்ஸ் வேவ் 931 மாடலுக்கு கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type C Charging Port) கொடுத்து இருக்கிறது. செலஸ்டியல் குரோம் (Celestial Chrome), வயலட் எலிப்ஸ் (Violet Eclipse) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.
இவ்வளவு பீச்சர்களை கொடுத்தும், இந்த ப்ரோபட்ஸ் வேவ் 931 மாடலின் விலை ரூ. 1,299 ஆக மட்டுமே இருக்கிறது. மேலும், அறிமுக சலுகையாக ரூ.1,099 விலைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த விலைக்கு 500 யூனிட்கள் மட்டுமே கிடைக்கும். டிசம்பர் 24ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. அமேசான் மற்றும் ப்ரோபட்ஸ் தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








